மொபைல் பாதுகாப்புமொபைல் பாதுகாப்புஎன்பது இப்போதுபெரியபிரச்சினையாகமாறியிருக்கிறது. மொபைலுடனேயேவாழப் பழகியிருக்கும் நாம் நிதித் தகவல்கள்,வங்கிக் கணக்குவிவரங்கள்,குடும்பபுகைப்படங்கள், இணையஉரையாடல்கள்,குரல் பதிவுகள் போன்றஏராளமானதனிப்பட்டவிடயங்களை ”பாதுகாப்பான இடம்” எனநினைத்துக் கொண்டுமொபைலிலேயேபாதுகாத்துவைத்திருக்கிறோம். ஆனால் மொபைலில் இருக்கும் அத் தகவல்கள் எப்போதும் ”பாதுகாப்பாகவே இருக்கும்” என்பதைஎவராலும் உத்தரவாதம் அளிக்கமுடியாது.
உங்கள் மொபைல் தொலைந்துபோகலாம். திருடப்படலாம். அதேபோன்றுமொபைலைத் தொலைக்காமலேதிருடரிடம் பறிகொடுக்காமலே கூட உங்கள் அந்தரங்கதகவல்களைஉங்களைஅறியாமலேயேபிறர்கையில் செல்லவாய்ப்பிருக்கிறது.
அப்படியானால் அத்தகவல்களைமொபைலில் எவ்வாறுதான் பாதுகாப்பது? எனநீங்கள் கேட்கலாம். அதற்கும் வழியிருக்கிறது. கீழேசொல்லப்படும் வழி முறைகளைப் பின் பற்றினால் ஓரளவுஉங்கள் அண்டட்ராயிட் ஃபோனையும் அதிலுள்ளதகவல்களையும் பாதுகாக்கமுடியும். (மொபைல் கருவிகளிலும் ஐ.ஓ.எஸ் இயங்குதளம் கொண்டஐ-போன்கள் அதிகபாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. ஆனால் அண்ட்ராயிட் இயங்குதளம் கொண்டகருவிகள் அதற்குநேர்மாறானவை)
இரு படிநிலைஅங்கீகாரத்தை (Two-Factor Authentication)) செயற்படுத்துங்கள்
பாதுகாப்பான Android ஃபோன் ஒருபாதுகாப்பான Google கணக்கில் தொடங்குகிறது. கூகுல் கணக்கில் 2FA அங்கீகாரத்தைசெயற்படுத்துவதனால் ஒவ்வொருமுறையும் கூகுல் கணக்கில் நுளையும் போதுஉங்கள் கடவுச் சொல்லைவழங்கவேண்டியதோடுஅந்தநேரத்தில் கூகுலால் உங்கள் மொபைலுக்குஅனுப்பப்பட்டும் ரகசிய இலக்கத்தையும் உள்ளீடுசெய்யவேண்டும். அந்த இலக்கத்தைசரிபார்த்தபிறகேஉங்கள் கணக்கில் உள்ளேசெல்ல கூகுல் அனுமதிக்கும். .
https://www.google.com/landing/2step/ எனும் இணைப்பில் சென்று இதனைச் செயற் படுத்தமுடியும். மேலும்,நீங்கள் உங்கள் Google கணக்குஅமைவுகளைப் பார்வையிடும் போது,உங்கள் கூகுல் கணக்குமீட்புதொலைபேசி (recover mobile no) எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிபோன்றவற்றையும் அவ்வப்போதுசரிபார்த்துக் கொள்ளுங்கள். தேவைப்படின் அவற்றைமாற்றியமையுங்கள். அத்துடன் சமீபத்தியபாதுகாப்புநிகழ்வுகளையும் ((recent security events) சரிபாருங்கள். சந்தேகத்திற்கிடமானபிறசாதனங்கள் மூலம் உங்கள் கணக்கிற்குள்நுழைந்துள்ளதாகக் கண்டறிந்தால் அவற்றைநீக்கிவிடுங்கள்.
பாதுகாப்பான திரைப்பூட்டு (Lock Screen) பயன்படுத்துங்கள்
ஒருபாதுகாப்பானதிரைப் பூட்டை இதுவரைபயன்படுத்தாதிருந்தால்,அதை இப்போதேஅமைத்துக் கொள்ளுங்கள்.
அண்ட்ராய்டின் பல்வேறுபதிப்புகளுக்கும் இடையில் செயல்முறைசற்றுவேறுபாடுகள் இருந்தாலும் பொதுவாக Settings > Security > Screen Lock பகுதியின் கீழ் இந்தவசதிகிடைக்கும்.
உங்கள் ஃபோனில் விரல் அடையாள் பாதுகாப்பு ஸ்கேனர்வசதியிருப்பின் உங்கள் கைவிரலடையாளத்தையும் சேர்க்கமறக்காதீர்கள்.
Find My Phone தெரிவை செயற்படுத்துங்கள்.
உங்கள் தொலைபேசியைதொலைத்துவிட்டாலோஅல்லதுதிருடரிடம் பறிகொடுத்துவிட்டாலோதொலைபேசியைகண்காணிக்கவும் மீட்கவும் அதிர்ஷ்டவசமாக Google வசதிசெய்கிறது. சிலவேலைஅதைதிரும்பபெறவாய்ப்பு இல்லைஎன்றால் தொலைந்துபோனதொலைபேசியில் உள்ளதகவல்கள் பிறர்கையில் கிடைத்துவிடாமல் தொலைவிலிருந்தேஅழித்துவிடவும் முடியும்..
இதற்கு Find My Phone (என் ஃபோனைக் கண்டுபிடி) வசதியை இயல்புநிலையில் ழnசெய்துவைத்திருக்கவேண்டும். அனைத்துநவீனயுனெசழனைதொலைபேசிகளிலும் இயல்புநிலையில் இது வைக்கப்டுகிறது. உங்கள் ஃபோனில் இதனை Settings>Google > Security > Find My Phone சென்றுஉறுதிசெய்துகொள்ளுங்கள்.
உங்கள் தொலைபேசியைதொலைத்துவிட்டால் அல்லதுதிருடப்பட்டால்,உடனே; அருகிலுல்ளகணினியைப் பயன் படுத்தி https://www.google.com/android/find?u=0″எனும் இணைப்பில் சென்றுதேடுங்கள்.
” Unknown Sources “”மற்றும் ” Developer Mode” முறையை முடக்குங்கள்
கடந்தகாலத்தில் உங்கள் தொலைபேசியில் நீங்கள் ” Unknown Sources” எனபதை இயக்கியிருக்கலாம். இந்தஅமைப்பானது Google Play Store இல் இல்லாமல் வேறு இடங்களிலிருந்துசெயலிகளைநிறுவஉங்களைஅனுமதிக்கிறது- இதனைஎப்போதும் இயக்கநிலையில் வைத்திருப்பதுஆபத்தானது. உங்களின் மொபைலின் பாதுகாப்புஅதிகரிக்க,நீங்கள் இந்தஅம்சத்தைமுடக்கவேண்டும். இதனைநீங்கள் Settings > Security > Unknown Sources எனுமிடத்தில் மாற்றியமைக்கலாம். .
அதேபோல்,டெவலப்பர்மோட் ((Developer mode) என்பதையும் எப்போதும் Off நிலைக்குமாற்றிவிடுங்கள். அதனை Settings> Developer Option இல் காணலாம்.
ஃபோனைபாதுகாப்பாகவைத்திருக்கும் பொறுப்பைஉங்களிடம் மட்டும் விட்டுவிட்டு கூகுல் ஓரமாகநின்றுவேடிக்கைபார்க்கவில்லை. கூகிள் ஏற்கனவேஉங்கள் தொலைபேசிபாதுகாப்பாக இருப்பதைஉறுதிசெய்வதற்குபலவழிகளில் முயல்கிறது.
Google Play Protect
அண்ட்ராயிடின் புதியபதிப்புகளில் Google Play Protect எனும் பாதுகாப்புஅம்சம் சேர்க்கப்படிருக்கிறது. இது Play Store இல் உள்ளசெயலிகளையும் Unknown Sources மூலம் உங்கள் சாதனத்திலும் நிறுவப்பட்டிருக்கும் செயலிகளையும் கண்காணிக்கிறது. தீங்கிழைக்கும் செயலிகளைஅவ்வப்போதுகண்டறிந்துநீக்குவதற்கு இது உதவுகிறது.
அண்ட்ராயிட் கருவியில் Settings > Google > Security > Play Protect மூலம் இதனை அணுகலாம்.
மறைக்குறியாக்கம் (Encryption)
ஆண்ட்ராய்டின் ஆரம்ப நாட்களில், மறைக்குறியாக்க (Encryption) வசதி இருக்கவில்லை. தற்போது அனைத்து நவீன அண்ட்ராயிட் சாதனங்களிலும் இயல்பு நிலையாக மறைக்குறியாக்கம் செய்யப்படுகிறது. அதனைப் பயனரால் மாற்றியமைக்கமுடியாது.
அதாவது, உங்கள் தொலைபேசியில் உள்ள அனைத்து முக்கியமான தகவல்கள்,வேறு எவராலும் படிக்க முடியாதபடி மறைகுறியாக்கம் செய்யப்பட்டு சேமிக்கப்படும்,உங்கள் கடவுச்சொல், PIN அல்லதுகடவுக்குறியீட்டைஉள்ளிடும் வரை டிக்ரிப்ட் (decrypt) செய்யப்படமாட்டாது.
உங்கள் ஃபோனைப் பாதுகாப்பாக வைத்திருப்பது கடினம் அல்ல-ஒருசிலஅமைவுகளைச் (setting) சரிபார்த்து, செயல்படுத்த சிலநிமிடங்கள் எடுத்துக்கொள்ளுங்கள், உங்கள் தொலைபேசி எப்போதாவது தொலைந்து போனாலோ திருடப்பட்டாலோ உங்கள் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என்ற மன நிம்மதியோடாவது இருக்கலாம்.