எம்.எஸ்.எக்சல் விரிதாளில் ஒரு திகதியை உள்ளீடு செய்யும் போது விண்டோஸ் இயங்கு தளத்தில் என்ன திகதி வடிவம் உள்ளதோ அதே வடிவிலேயே உள்ளீடு செய்ய வேன்டும்.. அப்போதுதான் திகதி சார்ந்த கணிப்பபுக்களை; மேற் கொள்ள முடியும்.
வழமையாகப் பயன் பாட்டிலுள்ள திகதி- மாதம்- வருடம் (DD-MM-YYYY) எனும் வடிவத்தில் திகதியை வழங்கும் போது அதனை ஒரு திகதியாக எக்ஸல் ஏற்றுக் கொள்வதில்லை. காரணம் விண்டோஸ இயங்கு தளத்தில் மாதம்-திகதி-வருடம் ((MM-DD-YYYY)) எனும் அமைப்பே இயல்பு நிலையில் இருக்கும்.
எனினும் நீங்கள் விரும்பும் திகதி வடிவிற்கு அதனை மாற்றிக் கொள்ளும் வசதியை விண்டோஸ் தருகிறது. விண்டோஸ் 7 இயங்கு தளத்தில் திகதி வடிவை மாற்ற் முதலில் கன்ட்ரோல் பேணலில் நுழையுஙகள். அங்கு Clock, Region and Language என்பதைத் தெரிவு செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் Formats டேபை க்ளிக் செயது Date and Time Formats என்பதன் கீழ Short Date மற்றும் Long Date என்பவ்ற்றின் கீழ் உரிய திகதி வடிவைத் தெரிவு செய்யுங்ககள்.