
உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்…! அழகிய தெளிவான கையெழுத்தைக் கொண்டவரவரா நீங்கள்? இந்த தகவல் நிச்சயம உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் . உங்கள் கையெழுத்தை ஒரு Font ஆக (கணினி எழுத்துரு) மாற்றித் தருகிறது ஒரு இணைய தளம். எனது கையெழுத்து அழகாக இல்லையே என்போர கவலைப் பட வேண்டாம். அதற்கு நீங்கள் அழகான கையெழுத்தைக் கொண்ட ஒருவரின் உதவியை நாடலாம்.
சரி இதற்கு எந்த மென்பொருளை நிறுவிக் கொள்வது? எந்த மென்பொருளும் நிறுவ வேண்டாம். உங்களிடம் ஒரு ப்ரிண்டர், ஸ்கேனர் மற்றும் இணைய இணைப்பு இருந்தால் மட்டும் போதுமானது. இது ஒரு இலவச ஓன்லைன் சேவையாகும். கையெழுத்தை பொண்ட் பைலாக மாற்ற முதலில் http://www.myscriptfont.com/ எனும் இணைய தளத்திற்குப் பிரவேசியுங்கள். அவர்கள் வழங்கும் பொண்ட் டெம்ப்லேட் (template) பைலை டவுன் லோட் செய்து கொள்ளுங்கள். இந்த பைல் PDF வடிவில் கிடைக்கும். அடுத்து டவுன்லோட் செய்த பைலை ப்ரிண்ட் செய்து கொள்ளுங்கள்.
இணைய தளத்தில் தரப்பட்டிருக்கும் அறிவுறுத்தலின் படி; கருமை நிற மை கொண்ட பேனாவைக் கொண்டு உங்கள கையெழுத்தால் நிரப்பிக் கொள்ளுங்கள். பின்னர் அந்த டெம்ப்லேட்டை ஒரு இமேஜ் பைலாக ஸ்கேன் செய்து மறுபடி அதே இணைய தளத்திற்குச் சென்று (upload) அப்லோட் செய்து விடுங்கள். ஒரு சில நிமிடங்களில் உங்கள் கையெழுத்தைக் கொண்ட ஒரு பொன்ட் பைலை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த சேவை மூலம் ஆங்கில எழுத்துருக்களை மட்டுமே உருவாக்க முடியும் என்பதையும் நினவில் கொள்ளுங்கள்.
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil