அண்ட்ராயிட் அனுபவத்தைக் கணியில் பெற Prime OS

ப்ரைம் ஓஎஸ்- Prime OS என்பது கையடக்கக் கருவிகளில் பயன் படுத்தப்படும் அண்ட்ராயிட் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் இயங்குதளமாகும். இது மடிக் கணினி, டெஸ்க்டாப் கணினிகளில் பயன் படுத்தப்படும்   விண்டோஸ் இயங்குதளம் போன்ற முழுமையானடெஸ்க்டாப் அனுபவத்தை வழங்கக் கூடியவாறு உருவாக்கப்படுள்ளது.

அண்ட்ராயிட் இயங்கு தளம்  மற்றும் விண்டோஸ் இயங்கு தளத்தின் சிறப்பம்சங்களை ஒன்றிணைத்து ப்ரைம் ஓஎஸ் உருவாக்கபட்டுள்ளது

கூகுல் ப்லே ஸ்டோரில் உள்ளஏராளமானசெயலிகளுக்கானஅணுகளையும் ப்ரைம் ஓ.எஸ் தருகிறது.

அண்ட்ராயிட் கருவிகளில் நீங்கள் பயன் படுத்தும் பிரபலமான பல விளையாட்டுச் செயலிகளை(gaming app) கணினியிலேயே விளையாடக் கூடியவசதியை ப்ரைப் ஓ.எஸ் வழங்குகிறது.

இந்தப்ரைம் ஓ.எஸ் இயங்குதளத்தை பழைய கணினிகளிலும் கூட நிறுவலாம் என்பது சிறப்பியல்பு. இதனை<https://primeos.in எனும் இணையதளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்யலாம்.

மேலும் இதனைகணினி ஹாட் டிஸ்கில் நிரந்தரமாக நிறுவியோஅல்லது ஹாட் டிஸ்கில் நிறுவாமலேயேலைவ் சிடி (live CD ) யாகவோஅல்லதுலைவ் யூஎஸ்பியாகவோ (live usb)  பயன் படுத்தவும் முடியும் என்பது இன்னுமோர் வசதி.

About admin

Check Also

What is DOS?  

What is DOS? Disk Operating System “டிஸ்க் ஆப்பரேட்டிங் சிஸ்டம்” என்பதன் சுருக்கமே  DOS.  ஐபிஎம்-மற்றும் அதற்கு இணக்கமான …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *