YouTube Premium now available in Sri Lanka

யூடியூப் பிரீமியம் வசதி தற்போது இலங்கையிலும்

யூடியூப் தளத்தின் சந்தா சேவையான பிரீமியம் தற்போது இலங்கையிலும் கிடைக்கிறது. Netflix மற்றும் Spotify போன்றவற்றைப் போன்று பிராந்திய விலையில் YouTube Premium இன் அனைத்து வசதிகளுடன் இந்த சேவை வருகிறது.

YouTube பிரீமியம் வசதிகள்
விளம்பரங்கள் இல்லை அதாவது வீடியோக்களைப் பார்க்கும்போது விளம்பரங்கள் எதுவும் காட்டப்படமாட்டது
வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்யலாம். ஆஃப்லைனில் பார்க்க விரும்பினால் பதிவிறக்கம் செய்து பார்க்கலாம்
பிக்சர்-இன்-பிக்சர் பயன்முறை Picture-in-Picture mode மற்றும் பின்னணி இயக்கம் background play மற்றொரு செயலியத் திறந்திருக்கும் போது வீடியோக்களைப் பார்ப்பது மட்டுமல்லாமல், செயலியைத் திறக்காமலேயே பின்னணியில் யூடியூப் வீடியோக்களின் ஒலியைக் கேட்கவும் முடியும்.
யூடியூப் மியூசிக் YouTube Music சேவையையும் விளம்பரமில்லாது கேட்க முடியும். இது Spotify போல பிரபலமாக இல்லாவிட்டாலும், அதே அளவிலான பட்டியலைக் கொண்டுள்ளது. இருப்பினும், பிரீமியம் பயனர்களுக்கு ஒலியின் தரம் அதிகபட்சமாக 256kbps இல் இருக்கும்
சந்தாவைப் பொறுத்தவரை, பயனர்கள் மாதத்திற்கு இலங்கை ரூபா 629க்கு ஒரு தனிநபர் திட்டத்தை வாங்கலாம், அதே நேரத்தில் LKR 1,199 இல் குடும்பத் திட்டம் ஒரே கிடைக்கிறது. குடும்பத்தில் 5 உறுப்பினர்களை இங்கு சேர்க்க முடியும். மாதத்திற்கு LKR 365க்கான மாணவர் திட்டமும் உள்ளது,

நீங்கள் யூடியூப் மியூசிக்கில் மட்டுமே ஆர்வமாக இருந்தால், பிரீமியம் சந்தா ஒரு மாதத்திற்கு ரூபா 529 விலையில் கிடைக்கிறது. இத்திட்டம் விளம்பரமில்லா இசை, ஆஃப்லைனில் கேட்பது மற்றும் பின்னணி இயக்கம் ஆகியவற்றை வழங்குகிறது. நீங்கள் இன்னும் யூடியூப் பிரீமியம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமானால் பிரீமியம் சேவையை ஒரு மாதம் இலவசமாக சோதித்தும் one-month trial பார்க்

About admin

Check Also

Google Bard now supports 40 languages including Tamil

இனி தமிழ் உட்பட நாற்பது உலக மொழிகளில் பார்டில் கேள்விகள் கேட்கலாம் பார்ட் இப்போது இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *