
இலவச வெப் மெயில் சேவை வழங்கும் யாகூ, கூகில் போன்ற நிறுவனங்களின் இணைய தளங்களூடாக மின்னஞ்சல் முகவரியொன்றை உருவாக்கும் போது நம்மைப் பற்றிய விவரங்ளையும் கேட்கிறர்ர்கள். அங்கு ஓரிடத்தில் அர்தமற்ற ஓர் ஆங்கிலச் சொலலை இமேஜ் போமட்டில் தோன்றச் செய்வார்கள. அந்தச் சொல்லில் காணப்படும் எழுத்துக்களை அவதானித்து அதன் கீழுள்ள டெக்ஸ்ட் பொக்ஸில் டைப் செய்யச் சொல்வார்கள். இதனை Word Verification (சொல் சரிபார்ப்பு) என்பார்கள். எதற்கு இந்த நடை முறை? உங்கள் கண் பார்வையை சோதிக்கிறார்களா? அதுதான் இல்லை. இது இலவச இமெயில் சேவை வழங்கும் நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஒரு பாதுகாப்பு நடவடிக்கையே.இந்தப் பாதுகாப்பு முன்னேற்பாடு மட்டும் இல்லையானால் கணினி வித்தகர்கள் (எத்தர்கள்) மெயில் சேர்வரே திணறிப் போகும். அளவுக்கு தன்னியக்க முறையில் ஒரே மணித்தியாலத்தில் பல்லாயிரக் கணக்கான மின்ன்ஞ்சல் முகவரிகளை உருவாக்குமாறு அதற்கென விசேட மென்பொருள்களை வடிவமைத்து விடுவார்கள். அத்தோடு ஸ்பாம் எனும் வேண்டாத குப்பை அஞ்சல்களையும் அனுப்ப அவர்களுக்கு வாய்ப்பாப் போய் விடும். இலவசமாக வழங்கும் சேவையை துஸ்பிரயோகஞ் செய்வதைத் தடுக்கவே இந்த பாதுகாப்பு ஒழுங்கு. ஒரு மனிதரால் மட்டுமே இமேஜ் போமட்டிலுள்ள எழுத்துக்களைக் கண்டறிந்து டைப் செய்ய முடியும் என்பதனாலேயே அந்த எழுத்துக்களை டெக்ஸ்ட் போமட்டில் அல்லாமல் இமேஜ் போமட்டில் தோன்றச் செய்கிற்ர்ர்கள்..