Will WhatsApp delete your account for ignoring the privacy policy deadline?

Will WhatsApp delete your account for ignoring the privacy policy deadline?தனியுரிமைக் கொள்கை காலக்கெடுவை புறக்கணித்ததற்காக மே 15 அன்று வாட்ஸ்அப் உங்கள் கணக்கை நீக்குமா?

இல்லை, உங்கள் கணக்கு மொத்தமாக செயலிழக்காது, ஆனால் சில செயல்பாடுகளை இழக்க நேரிடும்.

“தொடர்ச்சியான  பல வார கால நினைவூட்டல்களுக்குப் பிறகு வாட்சப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை மே 15 அன்று அமுலுக்கு வருகிறது, ஆனால் அதன் புதிய தனியுரிமைக் கொள்கையை மதிப்பாய்வு செய்து ஏற்றுக்கொள்ள பயனர்களுக்கு இன்னும் சிறிது கால அவகாசம்  வழங்குவதாகக் கூறுகிறது பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான செய்தியிடல் சேவை.

பயனர்கள்  புதிய தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் வரை “வரையறுக்கப்பட்ட செயல்பாட்டை” எதிர்கொள்ள நேரிடும்.

முன்னர் அறிவித்திருந்து போல் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாதோரின் கணக்குகள் , மே 15 அன்று நீக்கப்படாது அல்லது செயல்பாட்டை இழக்காது எனினும்  வாட்ஸ்அப்பில் அந்த பயனர்களுக்கு தொடர்ந்து நினைவூட்டல்களை வழங்கும்.

தனியுரிமைக் கொள்கை மாற்றங்கள் குறித்து அறிவிப்புகளைப் பெற்ற பெரும்பான்மையான மக்கள் புதிய சேவை விதிமுறைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும்  வாட்ஸப்பின் ஒரு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

நினைவூட்டல்கள் தொடர்ந்து வந்த பிறகும் தனியுரிமை கொள்கையை  ஏற்றுக்கொள்வதைத் தள்ளிவைக்கும் நபர்கள் முதலில் தங்கள் அரட்டை பட்டியலை அணுக முடியாது போகும். ஆனால் உள்வரும் தொலைபேசி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு பதிலளிக்க முடியுமாயிருக்கும்.  

”வரையறுக்கப்பட்ட செயல்பாட்டிற்கு” பிறகும் “சில வாரங்கள்” நீங்கள் தொடர்ந்து வைத்திருந்தால், உங்கள் தொலைபேசியில் அழைப்புகள் மற்றும் செய்திகளை அனுப்புவதை வாட்ஸ்அப் நிறுத்திவிடும்.

செயலற்ற பயனர்கள் குறித்த அதன் தற்போதைய கொள்கை இன்னும் பொருந்தும் என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் குறிப்பிடுகிறது. அதாவது உங்கள் கணக்கு 120 நாட்களுக்கு செயலற்றதாக இருந்தால் அது நீக்கப்படலாம்.

About admin

Check Also

WhatsApp rolls out Message Yourself feature

நீங்களே உங்களுக்கு செய்திகளை அனுப்பக் கூடிய வசதியை வாட்சப் தற்போது அறிமுகம் செய்துள்ளது. Message Yourself  எனும்  இந்த அம்சம் மூலம்  பயனர்கள் வாட்சப்பில் குறிப்புகள்-notes, படங்கள்-images நினைவூட்டல்கள்-reminders மற்றும் இணைப்புகள்-links  போன்றவற்றை  தங்களுக்கே அனுப்பி அவற்றை சேமித்து தேவையான போது பயன் படுத்திக்  கொள்ள முடியும் இந்த அம்சத்தைப் பெற வாட்சப்பின் புதிய பதிப்பிற்கு அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.  வாட்சப் வெப் -இல் தற்போது இதனைப் பயன் படுத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *