WhatsApp will not limit functionality if you don’t accept its new privacy policy வாட்சப் உங்கள் கணக்கை இனி செயலிழக்கச் செய்யாது

WhatsApp will not limit functionality மே மாத தொடக்கத்தில், வாட்சப் பயனர்கள் மே 15 க்குள் அதன் புதிய தனியுரிமைக் கொள்கையை ஏற்காவிட்டால் காலப்போக்கில் படிப்படியாக அதன் செயற்பாட்டை இழக்க நேரிடும் என்று கூறியது. இப்போது தனது திட்டத்தை    தலைகீழாக மாற்றி , புதிய கதை சொல்கிறது வாட்சப். புதுப்பிக்கப்பட்ட கொள்கையை ஏற்காத பயனர்கள் வரையறுக்கப்பட்ட சேவையைப் பெறுமாறு செய்யப்பட  மாட்டார்கள் எனக் கூறுகிறது.

WhatsApp will not limit functionality

புதுப்பிப்பை இன்னும் ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு வாட்சப் செயல்பாட்டை கட்டுப்படுத்தப் போவதில்லை  எனவும்  இது காலவரையின்றி முன்னேறும் திட்டம் என்றும் வாட்ஸ்அப் கூறுகிறது.

வாட்சப்பின் புதிய தனியுரிமைக் கொள்கையின் அறிவிப்பு குழப்பமாக இருந்து வந்தது.  மேலும் வாட்சப் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை பேஸ்புக்கில் பகிரத் தொடங்கும் என்ற கவலையை எழுப்பியது. (பயனர்களின் தொலைபேசி எண்கள் போன்ற சில வாட்ஸ்அப் பயனர் தரவு ஏற்கனவே பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது, இது 2016 இல் நடைமுறைக்கு வந்தது) எனினும் வாட்சப் இது அவ்வாறானதல்ல என்பதை வலியுறுத்தியுள்ளது, இருப்பினும் – கொள்கை புதுப்பிப்பு வணிகங்களுக்கு அனுப்பப்படும் செய்திகளைப் பற்றியது எனக் கூறுகிறது வாட்சப்,

புதிய கொள்கையை பெரும்பான்மையான பயனர்கள் ஏற்றுக்கொண்டதாக வாட்சப் நிறுவனம் ஒரு கூறுகிறது. புதிய கொள்கையை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதைப் பற்றி உங்களுக்கு நினைவூட்டப்படும் என்பதையும் குறிப்பிடுகிறது வாட்சப்

About admin

Check Also

Microsoft Officially Released Windows 11

Microsoft Officially Released Windows 11 Microsoft Officially Released Windows 11 விண்டோஸ் 11 பதிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது; …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *