
குரல் செய்திகளைப் அனுப்புவதற்கு முன் அவற்றைச் சரி பார்க்கும் வசதியைத் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது வாட்சப்.
வழமையாகக் குரல் செய்தியைத் தயார் செய்யும்போது வாட்சப்பில் மைக்ரோஃபோன் பட்டனை விரலால் அழுத்தியவாறு பேசி விரலை விடுவிக்கும்போது குரல் செய்து அனுப்பப்பட்டுவிடும் என்பது நீங்கள் அறிந்ததுதான்.
‘ஆனால் இப்போது மைக்ரோஃபோன் பட்டனை அழுத்திக் கோண்டிருக்காமல் மைக்ரோஃபோனைத் தட்டியதும் அதனை லாக் (lock) செய்யும் ஒரு பட்டன் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.
மைக்ரோஃபோனை லாக் செய்து விரலை விடுவித்து நீண்ட செய்திகளைக் கூடப் பேச முடிவதோடு குரல் பதிவை நிறுத்துவதற்கான ஸ்டாப் (Stop) பட்டனும் தோன்றுகிறது.
குரல் பதிவு முடிந்ததும் அதனை நிறுத்தி (பிலே-Play செய்து ) இயக்கிக் குரல் பதிவைச் சரி பார்க்க முடியும். தவறுகள் இருந்தால் அதனை டெலீட் (delete) செய்து நீக்கி விட்டு புதிதாகச் செய்தியைத் பதிவு செய்ய முடியும்.
மேலும் சரி பார்க்கும்போது அதன் இயக்க வேகத்தை (playing speed) 1x, 1.5x அல்லது 2x என அதிகரிக்கவும் முடியும் என்பது கூடுதல் வசதி.
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil