What is File Extension? கோப்பு நீட்சி என்றால் என்ன?
கணினியிலிருக்கும் ஒவ்வொரு ஃபைலும் ஒன்று முதல் ஐந்து வரையிலான எழுத்துக்களைக் கொண்ட ஒரு சொல்லை ஃபைல் பெயரின் இறுதியில் இணைத்துக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.இதனையே ஃபைல் எக்ஸ்டென்சன் எனப்படுகிறது.
உதாரணமாக .docx, .pptx, .jpg, .txt, .mp3, .avi என ஏராளமான எக்ஸ்டென்சன் கொண்ட ஃபைல் வகைகள் உள்ளன. இந்த ஃபைல் எக்ஸ்டென்சன் மூலம் இது என்ன வகையான ஃபைல் என்பதைக் கண்டறியலாம். ஃபைல் பெயரும், எக்ஸ்டென்சனும் ஒரு புள்ளி (dot) கொண்டு பிரிக்கப்படும். இந்த ஃபைல் எக்ஸ்டென்ஸன் இயங்குதளமான ஆபரேடிங் சிஸ்டம் மற்றும் பயனருக்கு அது எந்த வகையான ஃபைல், அதனை எந்த மென்பொருள் கொண்டு திறக்க வேண்டும் என்பதை உணர்த்தி விடுகிறது.
தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஃபைல் எக்ஸ்டென்சன்கள் பயன் பாட்டிலுள்ளன. இவை அனைத்தையும் அறிந்திருப்பது என்பது சாத்தியமான விடயமல்ல. எனினும் பொதுவாகப் பாவனையில் உள்ள மென் பொருள்களின் ஃபைல் எக்ஸ்டென்சனை நினைவில் வைத்திருக்க முடியும். அடிக்கடி பயன்படுத்தும் மென்பொருள்களின் ஃபைல் எக்ஸ்டென்சனை அறிந்து வைத்திருப்பது அந்த ஃபைல்களை இனங்காண வசதியாயிருக்கும். .doc, .jpg, .txt என்பன பொதுவாகப் பாவனையிலுள்ளவை. ஒரு பைல் எக்ஸ்டென்சனை உங்களால் அறிது கொள்ள முடியாதபோது இணைய தேடலில் மூலம் அதே ஃபைல் எக்ஸ்டென்சனுக்குரிய மென்பொருளை அறிந்து கொள்ளலாம்.
விண்டோஸில் இயல்பு நிலையில் ஃபைல் எக்ஸ்டென்சன் எப்போதும் மறைக்கப்பட்டேயிருக்கும். ஒரு ஃபைல் பெயருடன் அதன் எக்ஸ்டெண்டஸனையும் காண்பிக்குமாறு செய்வது நல்லது. கணினியைத் தாக்கக்ககூடிய வைரஸ் போன்றவை .exe பைலுடன் சேர்ந்து வர வாய்ப்புள்ளது. இந்த வகை ஃபைல்கள் இரட்டை எக்ஸ்டென்சன் கொண்டிருக்கும். ஃபைல் எக்ஸ்டென்சன் மறைந்திருக்கும்போது எவ்வகையான பைலைக் கையாளுகிறோம் என்பதை நாம் அறிய மாட்டோம். இவ்வாறான பைல்களைத் திறக்கும்போது வைரஸ் போன்ற நச்சு நிரல்கள் கணினியைத் தாக்கலாம்.
அதேவேளை ஃபைல் எக்ஸ்டென்ஸன் மறைக்கப்படாதபோதும் சில பிரச்சினைகள் வரலாம். அதாவது ஒரு ஃபைல் பெயரை மாற்றும் போன்று அதற்குரிய எக்ஸ்டென்சனையும் வழங்க வேண்டியிருக்கும். அவ்வாறு வழங்காவிட்டால் அந்த ஃபைலை மறுபடியும் உபயோகிக்க முடியாமல் போக வாய்ப்புள்ளது. எனினும் ஃபைல் எக்ஸ்டென்சன் மறைக்கப்பட்ட நிலையில் பைல் பெயரை மாற்றும்போது அதன் எக்ஸ்டென்சனை வழங்க வேண்டியதில்லை.
சில பயன் பாட்டு மென்பொருள்கள், மாற்றிய ஃபைல் எக்ஸ்டென்சனை அறிந்து அந்த ஃபைலைத் திறக்கும். எனினும் அனைத்து மென்பொருள்களும் அவ்வாறு திறக்கும் என எதிர் பார்க்க முடியாது. ஆகவே ஒரு பைல் எக்ஸ்டென்சனை மாற்றும்போது அதிக கவனம் தேவை. மேலும் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் மென்பொருள்களுக்குரிய பைல் எக்சஸ்டென்சன் பற்றியும் அறிந்து வைத்திருத்தல் நல்லது.
இமேஜ் பைல் வகைகளான .jpg, .gif, .bmp போன்றவற்றை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த ஃபைல் ஃபார்மட்டுகளை வேறு எந்த மென் பொருள் துணையின்றி ஒரு ஃபார்மட்டிலிருfது இன்னொரு ஃபார்மட்டிற்கு விண்டோஸிலேயே இலகுவாக மாற்றிக் கொள்ளலாம். அதாவாது ஒரு .jpg பைலை .gif ஆகவோ .bmp ஆகவோ மாற்ற வேண்டுமானால் அதன் ஃபைல் எக்ட்ஸ்டென்சனை மாற்றி விட்டாலே போதும்.
விண்டோஸ் 10 இல் ஃபைல் எக்ஸ்டென்சனைத் தோன்றச் செய்யப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.
வழி 1
முதலில் ஏதேனுமொரு போல்டரைத் திறந்து கொள்ளுங்கள். அந்த ஃபோல்டர் விண்டோவில் வியூ டேபை க்ளிக் செய்யும்போது தோன்றும் File name extensions என்பதைத் தெரிவு நிலைக்கு மாற்றுங்கள். இப்போது ஃபைல் எக்ஸ்டன்சன்களைக் காண முடியும்.
வழி 2
அதே ஃபோல்டர் விண்டோவில் options பட்டன் க்ளிக் செய்யும்போது தோன்றும் டயலாக் பாக்ஸில் View டேபின் கீழ் Hide Extension for known file types என்பது தெரிவு நிலையில் இருந்தால் அதனை நீக்கி விட்டு ஓகே க்ளிக் செய்யுங்கள். இப்போது ஒவ்வொரு ஃபைலையும் அதன் எக்ஸ்டென்சனுடன் பார்க்கலாம்.
– அனூப் –