What is DOS? Disk Operating System “டிஸ்க் ஆப்பரேட்டிங் சிஸ்டம்” என்பதன் சுருக்கமே DOS.
ஐபிஎம்-மற்றும் அதற்கு இணக்கமான (compatible) தனி நபர் கணினிகளால் பயன்படுத்தப்பட்ட முதல் இயக்க முறைமை DOS ஆகும்.
DOS ஆனது ஆரம்பத்தில் ஒரே மாதிரியான இரண்டு பதிப்புகளில் கிடைத்தது. ஆனால் இரண்டும் வெவ்வேறு பெயர்களில் சந்தைப்படுத்தப்பட்டது.
“PC-DOS” என்பது IBM நிறுவன கணினிகளுக்காக மைக்ரோசாஃப்ட் ஆல் உருவாக்கப்பட்டது
“MS-DOS” என்பது IBM- இடமிருந்து மைக்ரோசாப்ட் உரிமைகளை வாங்கிய பதிப்பாகும். இது IBM-இணக்க கணினி உற்பத்தியாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
குறைந்த பட்ஜட்டில் மைக்ரோ வகை தனி நபர் கணினி உருவாக்கத் தீர்மானித்திருந்தது. அதனால் மைக்ரோசாஃப்டை நாடியது. ஐபிஎம்.
அக்கால கட்டத்தில் ஐபிஎம் நிறுவனம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தனியாக உருவாக்குவதற்கான வளங்களைத் தம்மிடம் வைத்திருந்தாலும் அந்த முயற்சியில் ஐபிஎம் இறங்கவில்லை.
இது தவிர அப்போது IBM இன் பிரதான வணிகமாகப் பெரிய வகை கணினிகளே இருந்தது. அவற்றிற்கான ஆபரேடிங் சிஸ்டம் ஐபிஎம் நிறுவனமே உருவாக்கியிருந்தது.
சிறிய வகை (மைக்ரோ கம்பியூட்டர்) டெஸ்காடப் வரவேற்புப் பெறும் என ஐபிஎம் கூட அப்போது நினைத்திருக்கவில்லை.
இந்த DOS ஐ கூட மைக்ரோசாஃப்ட் சுயமாக உருவாக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
Seattle எனும் சிறிய மென்பொருள் நிறுவனத்திடமிருந்து Q-DOS என்பதன் உரிமையை வங்கி அதனை மாற்றியமைத்தே IBM கணினிகளுக்கான DOS ஐ உருவாக்கியது.
அதனை ஐபிஎம் நிறுவனத்திற்கு PC-DOS எனும் பெயரில் வழங்கியது.
இருந்தாலும் இயக்க முறைமைக்கான பிரத்யேக உரிமத்தை IBM கொண்டிருக்கவில்லை. என்பதால், மைக்ரோசாப்ட் அதை MS-DOS என்ற பெயரில் பிற நிறுவனங்களுக்கும் விற்பனை செய்தது. இதுவே மைரோசாஃப்டின் வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது.
பின்னர் MS-DOS அக் காலத்தின் மிகவும் பிரபலமான இயக்க முறைமைகளில் ஒன்றாக மாறியது.
DOS ஒரு கட்டளை வரி அல்லது உரை அடிப்படையிலான இடைமுகத்தைப் பயன்படுத்துகிறது,
இங்கு பயனர்கள் கட்டளைகளைத் தட்டச்சு செய்ய வேண்டும் .
தட்டச்சு செய்வதன் மூலமே, கோப்புகளைத் திறக்கவும் நிரல்களை இயக்கவும் முடியும்.
கட்டளைகள் தட்டச்சு செய்வது எளிது என்றாலும், DOS ஐ திறம்பட பயன்படுத்த பயனர் அடிப்படை கட்டளைகளை அறிந்திருக்க வேண்டும்
இந்தக் குறைபாடு காரணமாக இயங்குதளத்தைப் புதியவர்கள் பயன்படுத்தக் கடினமாக்கியது. அதனால்தான் மைக்ரோசாப்ட் பின்னர் கிராஃபிக் அடிப்படையிலான விண்டோஸ் இயக்க முறைமையை DOS உடன் இணைத்தது.
விண்டோஸின் ஆரம்ப காலப் பதிப்புகள் DOS இயங்குதளத்தின் மீதே இயங்கின.
இருப்பினும், விண்டோஸ் இயங்குதளம் Windows NT (புதிய தொழில்நுட்பம்) க்காக மீண்டும் எழுதப்பட்டது, இது DOS ஐப் பயன்படுத்தாமல் Windows ஐத் தானாகவே இயங்கச் செய்தது. Windows 2000, XP மற்றும் Vista போன்ற Windows இன் பிற்கால பதிப்புகளுக்கும் DOS துணையின்றி இயங்கின.
இருந்தாலும் DOS இன்னும் விண்டோஸில் சேர்க்கப்பட்டுள்ளது,
விண்டோஸில் Start மெனுவிலிருந்து “Run” என்பதைத் தெரிவு செய்து அங்கு cmd என தட்டச்சு செய்வதன் மூலம் DOS கட்டளை வரியைத் திறக்க முடியும்.