Webdriver Torso யூடியூப்பில் இருக்கும் ஒரு மர்மச் சேனல்

Webdriver Torso வெப் டிரைவர் டோர்சோ என்பது  யூடியூப்பில் இருக்கும் ஒரு மர்மச் சேனல்.

மொத்தம் 624,774 வீடியோக்கள்

பின் தொடர்வோர் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 76 ஆயிரம் – 206K  சப்ஸ்க்ரைபர்கள்

அடையாள படம் இல்லை.

வீடியோ விவரணம் இல்லை

இது வரை 24,865,953 மேற்பட்ட பார்வைகள் (views)

இத்தனை வீடியோக்களைப் பதிவேற்ற வேண்டுமானால் தினம் ஒரு வீடியோ வீதம்  ஒரு தனி நபருக்கு 1700 வருடங்கள் செல்லும். தினம் 3 வீடியோ வீதம் அப்லோட் செய்ய  வருடங்கள்  செல்லும்.

இந்த சேனலை உருவாக்கி வீடியோ பதிவிடுவது யார்?

இந்தக் கேள்வி இந்தச் சேனல் உருவாக்கிய பின்னர் சில வருடங்கள் மர்மமாகவே இருந்தது. பின்னர் கூகுல் நிறுவனம் அது தங்களின் வேலைதான் என்பதை ஒப்புக் கொண்டது.

வெப் டிரைவர் டார்சோ என்பது யூடியூபின்   செயல்திறன் அறியும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள  தானியங்கி சோதனை சேனல்.  கூகிள்  இதனை 2013, 7 மார்ச் 7 இல் உருவாக்கியது, 

அதே ஆண்டு செப்டம்பர் 23 முதல் வீடியோக்களைப் பதிவேற்றத் தொடங்கியது, இந்த வீடியோக்கள் beeps பீப் ஒலியுடன் கூடிய  ஸ்லைடுகளைக் காட்டியது.

இந்த மர்மச் சேனல் பற்றி  2014 ஆம் ஆண்டில் பொது மக்கள்  அறிந்து கொண்டனர்.  பின்னர்   இது பார்வையாளர்களுக்கு  ஒரு பேசுபொருளாகவே  மாறியது. பலரும் பலவிதமான  யூகங்களை இந்தச் சேனல் பற்றி  நகைச் சுவையாக எடுத்துச் சொன்னார்கள்

Webdriver Torso

இந்தச் சேனல் ஒரு உட் சோதனைப் பயன்பாடாக இருப்பதை யூடியூப் ஒப்புக் கொள்ளும் வரை இது ஒரு பிரபலமான மர்மமாகவே இருந்தது.

யூடியூப் பதிவேற்றங்கள் சிறப்பாக நடைபெறுகின்றனவா என்பதைப் பரீட்சிக்கும் நோக்கிலேயே வெப் டிரைவர் டார்சோ உருவாக்கப்பட்டுள்ளது. .

Webdriver Torso

About admin

Check Also

WhatsApp rolls out Message Yourself feature

நீங்களே உங்களுக்கு செய்திகளை அனுப்பக் கூடிய வசதியை வாட்சப் தற்போது அறிமுகம் செய்துள்ளது. Message Yourself  எனும்  இந்த அம்சம் மூலம்  பயனர்கள் வாட்சப்பில் குறிப்புகள்-notes, படங்கள்-images நினைவூட்டல்கள்-reminders மற்றும் இணைப்புகள்-links  போன்றவற்றை  தங்களுக்கே அனுப்பி அவற்றை சேமித்து தேவையான போது பயன் படுத்திக்  கொள்ள முடியும் இந்த அம்சத்தைப் பெற வாட்சப்பின் புதிய பதிப்பிற்கு அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.  வாட்சப் வெப் -இல் தற்போது இதனைப் பயன் படுத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *