Virtual Router மடிக்கணினியை Wi-Fi Hotspot ஆக மாற்றும் Virtual Router
மடிக்கணினியில் நீங்கள் பயன் படுத்தும் வயர் மூலமாகவோ (wired) அல்லது வயறின்றியோ (wireless) பெறும் இணைய இணைப்பை உங்களிடமுள்ள ஏனைய கருவிகளுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய வசதியைத் தருகிறது Virtual Router எனும் திறந்த மூல மென்பொருள் கருவி. இம்மென்பொருள் விண்டோஸ் இயங்கு தளத்தின் அண்மைக் கால பதிப்புக்கள் அனைத்தையும் ஆதரிக்கிறது Virtual Router மென்பொருளை https://virtualrouter.codeplex.com/ எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்.
இம்மென்பொருளை நிறுவிய பின்னர் அதனைத் திறந்ததும் வரும் விண்டோவில் Network Name எனும் பகுதியில் விரும்பிய பெயரை வழங்க முடியும்.. அதே போல் பாஸ்வர்டாகவும் விரும்பிய சொற்களை வழங்கலாம். எனினும் இங்கு பாஸ்வர்ட் 8 எழுத்துக்கள் கொண்டதாய் இருத்தல் அவசியம். அடுத்து Shared connections எனும் இடத்தில் நீங்கள் தற்போது உபயோகிக்கும் இணைய இணைப்பு பெறும் வழியை தெரிவு செய்து Start Virtual Router பட்டனில் க்ளிக் செய்ய வேண்டும்.
இபோது உங்கள் மடிக்கணினி wifi hotspot ஆக மாற்றப்பட்டு விடும். இந்த ஹொட் ஸ்பாட்டில் உங்களிடமுள்ள பிற கருவிகளை இணைத்து அக்கருவிகளிலும் இணையத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்.