Village Cooking Channel reached 10M subscribers ஒரு கோடியைத் தாண்டியது

Village Cooking Channel reached 10M subscribers தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த யூடியூப் சேனல் படைப்பாளர்களின் கிராமத்து சமையல் சேனலான, Village Cooking Channel அண்மையில் ஒரு கோடி சந்தாதாரர்கள் (10M மில்லியன்கள்) எனும் எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது . தென்னிந்தியாவில்லேயே முதன் முதலில் ஒரு கோடி சந்தாதாரர்களைப் பெற்ற முதல் சேனல் இதுவாகும். இவர்களுக்கு முன்னர் சேனல் ஆரம்பித்த மதன் கௌரி 5 மில்லியன்களையே இதுவரை பெற்றுள்ளார்.

அவர்களின் சாதனையை குறிக்கும் வகையில் அதற்காக யூடியூப் வழங்கும்  டயமண்ட் ப்ளே பட்டனும்  (Diamond Play button) விருதைப் பெற்றுள்ளார்கள்.

ஏப்ரல் 2018 இல் தொடங்கப்பட்ட சேனல், இதுவரை 172 வீடியோக்களை பதிவேற்றியுள்ளது. இவர்களது  சேனலில்  உறுப்பினர்களாக தாத்தா எம் பெரியதம்பி, சுப்பிரமணியன் அவரது சகோதரர்கள் முருகேசன் மற்றும் வி அயன்னார் மற்றும் அவரது உறவினர்கள் முத்துமாணிக்கம் மற்றும் தமிழ்செல்வன் ஆகியோர் உள்ளனர்.

இந்த ஆறு பேரும்  அடிப்படையில் நெல் மற்றும் தென்னை விவசாயிகள்.  மேலும் சின்ன வீரமங்கலம் எனும் ஊரில் உள்ள 10 நிலத்தில் ஆறு மாதங்களுக்கு அவர்கள் விவசாயமும் செய்கிறார்கள். அவர்கள் சமையல் வீடியோக்களை உருவாக்கி யூடியூப் சேனலில் வெளியிடுகிறார்கள்.

இவர்களின் சேனலில்  வழக்கமாக ஒரு நாளைக்கு 10,000 புதிய சந்தாதாரர்கள் மட்டுமே இணைந்து கொண்டிருந்தார்கள்.  ஆனால், ராகுல் காந்தி அவர்கள் அணமையில் இவரது சேனலில்  எதிர்பாராத விதமாகத் தோன்றி அவர்களோடு அமர்ந்து  காளான் பிரியாணி சமையல் செய்து சாப்பிட்ட பிறகு  சந்தாதாரர்கள்  எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது.

கோவிட் முடக்கம்  காரணமாக  புதிய வீடியோக்களை அண்மைக் காலங்களில் அவர்களால் வெளியிட முடியவில்லை.  இதன் காரணமாக, சேனலின் பார்வைகள் (views) கணிசமாகக் குறைந்துள்ளன. அதன் வருவாயும் ஓரளவு குறைந்துள்ளது.

About admin

Check Also

Microsoft Officially Released Windows 11

Microsoft Officially Released Windows 11 Microsoft Officially Released Windows 11 விண்டோஸ் 11 பதிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது; …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *