உலகின் முதல் இனையதளப் பக்கம் இவ்வாறுதான்
உலகின் முதல் இனையதளப் பக்கம் இவ்வாறுதான்

This is how the first web page of the internet looked like

உலகின்  முதல் இணைய  பக்கம் இவ்வாறுதான் இருந்தது

The first web page of the internet தற்போது உலகலாவிய வலைத்தளத்தில் (World Wide Web) எண்ணிலடங்கா  வலைப்பக்கங்கள் உள்ளன. ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன்பு அப்படியெதுவும்  இருக்கவில்லை..

டிம்-பெர்னர்ஸ்-லீ Tim Berners-Lee என்பவரே  1989 ஆம் ஆண்டில் உலகளாவிய வலையமைப்பு எனும் கருத்தை  முதன்முதலில் முன்மொழிந்தார்.

1990 ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் தினத்தன்று, பெர்னெர்ஸ்-லீ ஒரு HTTP கிளையன்ட் மற்றும் சேவையகத்திற்கு இடையில் முதல் வெற்றிகரமான தகவல்தொடர்புகளை உருவாக்கினார். அங்கிருந்து அவர் முதல் இணைய உலாவியை (web browser) வடிவமைத்து உருவாக்கினார், முதல் வலைப்பக்கம் ஆகஸ்ட் 6, 1991 இல் இணையத்தில் நேரடியாக பார்வைக்கு வந்தது. .

டிம்-பெர்னர்ஸ்-லீ இங்கிலாந்து நாட்டைச்  சேர்ந்த ஒரு கணினி அறிவியலாளர். அவர் இறந்து பல வருடங்கள் கடந்திருக்கலாம் என  நீங்கள் நினைக்கலாம். இல்லை ; அவர் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். இருபது வருடங்களுக்கு முன்னர் உலகம் பயணித்த திசையை மாற்றிப் பயணிக்க வைத்தவர் என்ற எந்தவித ஆரவாரமுமில்லாமல் இன்னும் கணினித் துறையில் தனது பங்களிப்பை வழங்கிக் கொண்டேயிருக்கிறார்

கீழே இருப்பது முதல் இணைய தள முகவரி

http://info.cern.ch/hypertext/WWW/TheProject.html

உலகலாவிய வலையமைப்பை கண்டுபிடித்தவர் அல்லது உருவாக்கியவர்  என டிம் பெர்னர்ஸ்-லீ பெயர் பெற்றாலும், அவர் இணையத்தை உருவாக்கவில்லை. இணையம் (Internet), உலகலாவிய வலையமைப்பு (World Wide Web) இரண்டுமே ஒன்றல்ல.

Tim Berners-Lee
Tim Berners-Lee

இணையம் என்பது உலகம் முழுவதும் பரவியிருக்கும் கணினி வலையமைப்புகளின் வலையமைப்பாகும். பல கணினிகளுக்கு இடையில் இணைப்புகளை வழங்கும் வன்பொருள் (hardware) மற்றும் மென்பொருள் (software) இரண்டும் கலந்ததே  இணையம்.

அதாவது இணையம் என்பது உலகம் முழுவதும் பரவியிருக்கும் கணினிகளின் தொகுப்பாகும். அவை ஒன்றொடொன்று இணைக்கப்பட்டு தகவல்களை இடமாற்றம் செய்கின்றன.

உலகின்  முதல் இணைய  பக்கம் இவ்வாறுதான் இருந்தது
the first web page of the internet
The first web page looked like this

உலகின் முதல் இணைய பக்கம் the first web page of the internet உருவாக்கியபோது யாரும் அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்துப் பாதுகாக்கவில்லை என்பதுதான் அது இவ்வாறுதான் இருந்தது என சொல்லக் காரணமாகும்.

இந்த இணையம் (இண்டர்நெட்) எனும் உலகாலாவிய கணினி வலையமைப்பு  1969 ஆம் ஆண்டு உருவாக்கப்ப்ட்து. ஆனால் அப்போது அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் சில பல்கலைக் கழகங்கள் மட்டுமே அந்த வலையமைப்பில் இருந்தன. அதன்பின்னரே படிப்படியாக பல உலக நாடுகள் அந்த வலையமைப்பில் இணைந்தன.

உலகளாவிய வலை என்பது இணையத்தின் ஒரு சேவை மட்டுமே. இது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட ஆவணங்கள் (documents) மற்றும் ஏனைய வளங்களினதும் (resources) அவற்றின் சேமிப்பிடங்களிற்குமிடையேயுள்ள URL (Uniform resource Locators) ஹைப்பர்லிங்க்ஸ் (hyperlinks) எனும் இணைப்பாகும்

About admin

Check Also

Microsoft Officially Released Windows 11

Microsoft Officially Released Windows 11 Microsoft Officially Released Windows 11 விண்டோஸ் 11 பதிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது; …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *