Telegram made it easy to import WhatsApp chats

Telegram made it easy to import WhatsApp chats வாட்சப்பின் சமீபத்திய தனியுரிமை பற்றிய தவறான தகவல்களுக்குப் பிறகு ஏராளமானோர் டெலிகிராம், சிக்னல் போன்ற வேறு செய்தியிடல் சேவைகளுக்கு மாறினர் .

இந்த சந்தர்ப்பத்தில் வாட்சப் செய்தியிடல் செயலிகளிலிருந்து தங்கள் உரையாடல்களை இம்போட் செய்வதற்கான வசதியை வழங்கி புதிய பயனர்களின் வருகையை அதிகமாக்கி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறது டெலிகிராம்செயலி.

அதாவது வாட்சப்பில் உங்கள் நண்பருடான பழைய உரையாடல்களை அவரும் டெலிகிராமில் இணைந்திருந்தால் அவற்றை மிக எளிதாக டெலிகிராமினுள் கொண்டு வரலாம்.

இந்த வசதி வாட்சப்பிற்கு மட்டுமன்றி லைன் மற்றும் ககாவோடாக் WhatsApp, Line, and KakaoTalk ஆகியவற்றிலிருந்து இறக்குமதியை ஆதரிக்கிறது

Telegram made it easy to import WhatsApp chats

நண்பருடனான தனிப்பட்ட அரட்டைகள் மற்றும் குழுக்களுடனான அரட்டைகளை அண்ட்ராய்ட் மற்றும் IOS சாதனங்களில் வாட்சப்பில் இருந்து டெலிகிராமிற்கு இலகுவாக இம்போட் செய்யலாம். ,அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.

வாட்சப் செயலியில் நண்பரின் உரையாடலைத் திறந்து, மூன்று புள்ளி மெனு பட்டணில் தட்டி menu button > More > Export Chat என்பதைத் தெரிவு செய்து

அரட்டையை Export  செய்வதற்கான இரண்டு விருப்பங்கள் உங்களுக்கு வழங்கப்படும் – “Attach Media” மீடியாவை இணைக்கவும்” அல்லது “Without Media-மீடியா இல்லாமல்”. நீங்கள் விரும்பும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

இப்போது, sharing மெனுவிலிருந்து, டெலிகிராமைத் தேர்ந்தெடுத்து, டெலிகிராம் செயலி திறக்கும்போது, Import செய்ய விரும்பும் நண்பரின் பெயரைத் தெரிவு செய்து ஓகே சொல்லவும்

IOS இலும் இதே செயல்முறையை ஒத்திருக்கிறது, ஆனால் தொடர்பு தகவல் Contact Info  அல்லது குழு தகவல்  Group Info பக்கத்தைத் திறப்பதன் மூலம் export  தெரிவைக் காணலாம்.

இம்போட் செய்யப்படும் உரையாடல்கள் இன்றைய திகதியுடன் சேமிக்கப்பட்டாலும் அரட்டைகள் அவற்றின் அசல் நேர முத்திரைகளைத் (timestamps) தக்க வைத்துக் கொள்ளும்.

மேலும் அவை நண்பரின் டெலிகிராம் செயலியிலும் காண்பிக்கப்படும். இந்த செய்திகளை உங்கள் சாதனத்தில் கூடுதல் இடத்தை எடுத்துக்கொள்ளாது. ஏனெனில் டெலிகிராம் செய்திகளையும் மீடியா கோப்புக்களையும் க்லவுடில் சேமிக்கிறது.

பழைய உரையாடல்கள் அனைத்தையும் இழக்க நேரிடும் என்பது, செய்தியிடல் செயலிகளை மாற்றுவதில் இருக்கும் பெரும் தடை. எனினும் டெலிகிராம் இதற்கொரு தீர்வு தந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது.


About admin

Check Also

YouTube Premium now available in Sri Lanka

யூடியூப் பிரீமியம் வசதி தற்போது இலங்கையிலும் யூடியூப் தளத்தின் சந்தா சேவையான பிரீமியம் தற்போது இலங்கையிலும் கிடைக்கிறது. Netflix மற்றும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *