கணினி முறைமையானது நான்கு பிரதான கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: வன்பொருள் (Hardware), மென்பொருள் (Software), உயிர்மருவிகள் (Liveware), மற்றும் உறுபொருள் (Firmware). இந்த இடுகையில், கணினி முறைமையின் மென்பொருள் மற்றும் அதன் வகைகள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
மென்பொருள் என்றால் என்ன? (What is Software?)
மென்பொருள் என்பது கணினிக்கான அறிவுறுத்தல்களை (Instructions) வழங்கக்கூடிய ஒரு விசேடமான கட்டமைப்பாகும்.
- கணினி ஒரு இயந்திரம் என்பதால், ஒரு பயனர் (User) நேரடியாக வன்பொருளை (Hardware) கட்டுப்படுத்த முடியாது.
- பயனர் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டை மேற்கொள்ள விரும்பினால், அவர் மென்பொருளைப் பயன்படுத்துகிறார். இந்த மென்பொருளானது பயனரின் கட்டளைகளைப் பெற்று, கணினியைச் செயல்படுத்த வைக்கிறது.
மென்பொருட்கள் கணினி மொழிகளைப் பயன்படுத்தி எழுதப்படுகின்றன. எழுதப்பட்ட இந்தக் கட்டளைகள், ‘மொழிபெயர்ப்பி’ (Translator) மூலம் கணினிக்கு புரியக்கூடிய இயந்திர மொழிக்கு (Machine Language – 0s மற்றும் 1s) மாற்றப்பட்ட பின்னரே கணினியால் செயல்படுத்த முடியும்.
- பயனர் எப்போதும் மென்பொருள் ஊடாகவே கணினியுடன் இணைக்கப்படுகிறார்.
மென்பொருட்களின் வகைப்படுத்தல் (Classification of Software)
மென்பொருட்களைப் பிரதானமாக மூன்று வகைகளின் கீழ் வகைப்படுத்தலாம்:
- முறைமை மென்பொருட்கள் (System Software)
- பிரயோக மென்பொருட்கள் (Application Software)
- கணினி மொழிகள் (Computer Languages)
கணினி மொழிகள் (Computer Languages)
மென்பொருட்களை உருவாக்குவதற்கு கணினி மொழிகள் அத்தியாவசியமானவை.
கணினி மொழிகளின் வகைகள்:
- இயந்திர மொழி (Machine Language):
- இது கணினிக்குத் தெரியக்கூடிய ஒரே மொழியாகும்.
- இது பூஜ்ஜியம் (0) மற்றும் ஒன்று (1) ஆகிய இரண்டே இரண்டு குறியீடுகளை மட்டுமே கொண்டிருக்கும்.
- மனிதர்களுக்கு இந்த மொழியில் கட்டளைகளை வழங்குவது மிகவும் கடினமானது.
- நிரலாக்க மொழிகள் (Programming Languages):
- மனிதர்கள் இலகுவாக ஆங்கிலம் போன்ற மொழியில் கணினிக்குத் தேவையான கட்டளைகளை வடிவமைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட மொழிகளே நிரலாக்க மொழிகள் ஆகும்.
- இந்த மொழியில் எழுதப்பட்ட கட்டளைகள், மொழிபெயர்ப்பிகள் (Translators) மூலம் கணனிக்கு புரியக்கூடிய இயந்திர வடிவத்திற்கு மாற்றப்படுகின்றன.
- பிரபலமான நிரலாக்க மொழிகள்: பைதன் (Python), C, C++, ஜாவா (Java), ஜாவாஸ்கிரிப்ட் (JavaScript), C#, HTML, CSS, ஆண்ட்ராய்டு.
நிரலாக்க மொழிகள் வகைப்படுத்தல்:
- தாழ் மட்ட கணினி மொழிகள் (Low-Level Language): கணினிக்கு மிக நெருக்கமான மொழிகள்.
- உதாரணங்கள்: இயந்திர மொழி (Machine Language) மற்றும் அசெம்ப்ளி மொழி (Assembly Language).
- உயர் மட்ட கணினி மொழிகள் (High-Level Language): மனிதர்களால் இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய மொழிகள்.
- உதாரணங்கள்: பைதன், ஜாவா.
பிரயோக மென்பொருள் (Application Software)
பிரயோக மென்பொருள் என்பது ஒரு பயனர் ஒரு குறிப்பிட்ட வேலைகளை (Specific Task) செய்வதற்காகப் பயன்படுத்தும் மென்பொருட்கள் ஆகும்.

உதாரணங்கள்:
| வகை (Category) | மென்பொருட்கள் (Software) | நோக்கம் (Purpose) |
| ஆவணங்கள் உருவாக்கம் (Word Processor) | Microsoft Word, Open Office Writer | கடிதங்கள், ஆவணங்கள் தயாரித்தல் |
| கணக்கு மற்றும் தரவு பகுப்பாய்வு (Spreadsheet) | Microsoft Excel, Open Office Calc | கணக்கு வேலைகள், பகுப்பாய்வு |
| நிகழ்த்துகை (Presentation) | PowerPoint, Open Office Impress | ஸ்லைடுகளை உருவாக்குதல், படிப்பிக்க |
| தரவுத்தள நிர்வாகம் (Database) | MS Access, Base | தரவுகளை சேமித்து வைத்தல் |
| இணைய உலாவிகள் (Browsers) | Google Chrome, Mozilla Firefox, Microsoft Edge | இணையத்தை அணுகுவதற்கு |
| வீடியோ/புகைப்படம் திருத்துதல் (Editing) | Adobe Premier, After Effects, Photoshop, GIMP | மல்டிமீடியா வேலைகள் |
| வடிவமைப்பு (Design) | Corel Draw, Adobe Illustrator, AutoCAD | அட்டை வடிவமைப்பு, 3D டிசைன்ஸ் |
| கணக்கீடு (Accounting) | QuickBook, MyOB | கணக்கியல் வேலைகளுக்கு |
மென்பொருள் உரிமம் (Licensing):
- உரிமம் பெற்ற மென்பொருள் (Licensed Software): மைக்ரோசாஃப்ட் வேர்ட் போன்ற மென்பொருட்களைப் பயன்படுத்த பணம் கொடுத்து உரிமத்தைப் பெற வேண்டும்.
- திறந்த மூல மென்பொருள் (Open Source Software): Open Office Writer போன்ற மென்பொருட்களை யாரும் இலவசமாகப் பயன்படுத்தலாம்.
முறைமை மென்பொருட்கள் (System Software)
முறைமை மென்பொருட்கள் என்பது பயனரையும் (User) கணினியின் வன்பொருளையும் (Hardware) இணைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பிரதான மென்பொருட்கள் ஆகும். வன்பொருளுக்கான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு இவை கட்டாயம் தேவை.
முறைமை மென்பொருட்கள் பிரதானமாக இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன:
இயங்குதளம் (Operating System – OS)
கணினியுடன் தொடர்புகொள்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு விசேடமான மென்பொருளே இயங்குதளம் ஆகும். ஒரு வன்பொருளை அல்லது இயந்திரத்தை இயங்குதளம் இல்லாமல் எங்களால் கட்டுப்படுத்த முடியாது.
- பயனர் எப்போதும் இயங்குதளத்தின் ஊடாகத்தான் தனது தேவைகளை வன்பொருளுக்குத் தெரிவிக்கிறார்.
பிரபலமான இயங்குதளங்கள்:

- மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் (Microsoft Windows):
- மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முதலாவது OS, MS-DOS ஆகும்.
- பிரபலமான பதிப்புகள்: Windows 3.11 , Windows 95 , Windows XP
Windows 7 , Windows , 10 . - இது ஒரு உரிமம் பெற்ற மென்பொருள் (Licensed).
- லினக்ஸ் (Linux):
- விண்டோஸை விட சக்தி வாய்ந்த ஒரு திறந்த மூல இயங்குதளம்
(Open Source OS). - உதாரணங்கள்: உபண்டு (Ubuntu), ஹந்தான (Handana). Red Hat Linux ஒரு உரிமத்துடன் பெற வேண்டிய பதிப்பு.
- விண்டோஸை விட சக்தி வாய்ந்த ஒரு திறந்த மூல இயங்குதளம்
- மேக் OS (Mac OS):
- ஆப்பிள் (Apple) கணினிகளில் பயன்படுத்தப்படுவது.
- உதாரணங்கள்: Sierra, Catalina, Mojave (இவை மலைகளின் பெயர்களால் பெயரிடப்பட்டன).
- கைப்பேசி இயங்குதளங்கள் (Mobile OS):
- iOS (Apple)
- ஆண்ட்ராய்டு (Android)
பயன்பாட்டு மென்பொருட்கள் (Utility Software)
பயன்பாட்டு மென்பொருட்கள் என்பன கணினியில் முக்கியமான பராமரிப்புச் (Maintenance) செயல்பாடுகளைச் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் மென்பொருட்களாகும்.
வன்வட்டில் (Hard Disk) சில பராமரிப்புச் செயல்பாடுகளைச் செய்யப் பயன்படுகிறது.
நச்சு நிரல் எதிர்ப்பு மென்பொருள்கள் (Anti-virus Software):
கணினியை வைரஸ்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
உதாரணங்கள்: Kaspersky, Avast, Avira, Bitdefender.

கோப்புச் சுருக்க மென்பொருள்கள் (Compression Software):
கோப்புகளின் (Files) அளவைக் குறைப்பதற்கும் (Compress) அல்லது மீண்டும் பெரிதாக்குவதற்கும் (Decompress) பயன்படுத்தப்படுகிறது.
உதாரணங்கள்: WinRAR, WinZip, 7Zip, Win Ace.

வட்டு மேலாண்மை (Disk Management):
வன்வட்டில் (Hard Disk) சில பராமரிப்புச் செயல்பாடுகளைச் செய்யப் பயன்படுகிறது.

InfotechTamil A Blog for IT Related Articles in Tamil