நாம் இப்போது அடிக்கடி பயன் படுத்தும் SMS எனும் குறுந்தகவல் சேவைக்கு (Short Message Service) இன்று December 3 ஆம் திகதி 20 வருடங்கள் பூர்த்தியாகிறது.
Neil Papworth எனும் பெயருடைய ஒரு பொறியியலாளர் உலகின் முதலாவது குறுந் தகவலை December 3, 1992 இல் அனுப்பினார். அந்தச் செய்தி Vodafone’s நிறுவனத்தின் Richard Jarvis என்பவருக்கு அனுப்பப் பட்ட “Merry Christmas” எனும் கிறிஸமஸ் வாழ்த்தாகும். முதலாவது வர்த்தக நோக்கிலான SMS சேவை 1993 ஆம் ஆன்டில் சுவீடனில் ஆரம்பிக்கப் பட்டது.
சுமார் 20 வருடங்களுக்குப் பின்னர் தற்போது SMS ஆனது IM (Instant Messaging) மற்றும் tweets போன்றவற்றினால் தனது செல்வாக்கை இழந்து வருவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது