Smart Digital Vaccine Certificate by Ministry of Health

Smart Digital Vaccine Certificate by Ministry of Health இலங்கையில் COVID-19 க்கான தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் (dose) பெற்ற வர்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் சான்றிதழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த டிஜிட்டல் சான்றிதழ் இலங்கையில் தடுப்பூசி திட்டத்தின் துல்லியத்தை உலகுக்கு காட்ட உதவும் என நம்பப்படுகிறது.  முதல் கட்டமாக, டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பயணிக்கும் இலங்கை மெய்வல்லுனர்  விளையாட்டு வீரர்களுக்கு டிஜிட்டல் தடுப்பூசி அட்டைகள் விநியோகிக்கப்பட விருக்கின்றன.

Smart Digital Vaccine Certificate by Ministry of Health

அதன்படி, இந்த மாதம் ஜப்பானில் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு புறப்படும் இலங்கை அணியின் சார்பாக அதைப் பெற்ற இலங்கை ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கத்தின் செயலாளர் கபிலா ஜீவந்தாவுக்கு முதல் ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழை வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு இலங்கையின்  தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.சி.டி.ஏ) Information and Communication Technology Agency of Sri Lanka (ICTA)  தயாரித்த சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழுக்கான (Smart Digital Vaccine Certificate)  விண்ணப்பத்தை இலங்கையர்கள் விரைவில் சுகாதார அமைச்சின் வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும்.

இந்த டிஜிட்டல் தடுப்பூசி அட்டையில் வைத்திருப்பவர் பெயர், வயது, அடையாள அட்டை எண், தடுப்பூசி போட்ட தேதி, தடுப்பூசி வகை மற்றும் அட்டை வைத்திருப்பவர் பெற்ற தடுப்பூசியின் தொகுதி எண் ஆகியவை உள்ளன.

டிஜிட்டல் தடுப்பூசி அட்டைகள் அரசினால் வழங்கப்படுகின்றன.  மேலும்.  இது இலங்கைக்கு தனித்துவமான ஒரு க்யூஆர் குறியீட்டைக் QR code  கொண்டிருக்கும், இது உலகின் எந்த நாட்டிலிருந்தும் அட்டைதாரரின் தடுப்பூசி தொடர்பான தகவல்களை அணுகவும் தகவல்களை சுகாதார  அமைச்சின் வலைத்தளத்தின் மூலம் சரிபார்க்கவும்  முடியும்.

About admin

Check Also

Microsoft Officially Released Windows 11

Microsoft Officially Released Windows 11 Microsoft Officially Released Windows 11 விண்டோஸ் 11 பதிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது; …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *