Signal is trending after Whatsapp’s policy update

Signal is trending after Whatsapp’s policy update சிக்னல் (Signal) பற்றித் தெரிந்து கொள்வோம்

Signal is trending after Whatsapp's policy update
  • வாட்சப் போன்றே சிக்னல் முற்றிலும் இலவசம்
  • இதன் தோற்றம் 2010 ஆம் ஆண்டு வரை செல்கிறது. எனினும் இது 2014 முதல் சிக்னல் எனும் பெயரில் பயன் பாட்டில் உள்ளது.
  • வாட்ஸ்அப் போன்ற அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது.
  • இந்த செயலியை அமெரிக்க குறியாக்கவியலாளரும் cryptographer தற்போது சிக்னல் மெசஞ்சரின் தலைமை நிர்வாக அதிகாரியுமான (CEO of Signal Messenger) மோக்ஸி மார்லின்ஸ்பைக் (Moxie Marlinspike) உருவாக்கினார்.
  • சிக்னல் அறக்கட்டளையை முன்னாள் வாட்ஸ்அப் இணை நிறுவனர் பிரையன்ஆக்டன் (Brian Acton) மற்றும் மார்லின்ஸ்பைக் ஆகியோர் இணைந்து உருவாக்கினர்.
பிரையன்ஆக்டன் (Brian Acton)
  • ”தனியுரிமைக்கு ஹலோ சொல் ”Say Hello to Privacy’ என்பதே சிக்னலின் குறிச்சொல் (tagline)
  • சிக்னலும் வாட்சப் போன்றே செய்திகளை முனைக்கு முனை மறை குறியாக்கம் (end-to-end encrypted) செய்கிறது.
  • தனிநபர்களுக்கும் குழுக்களுக்கும் மறைகுறியாக்கப்பட்ட (encrypted) உரை, படம், ஆடியோ மற்றும் வீடியோ செய்திகளை அனுப்பலாம்.
  • இதனை ஐ-ஒ.யெஸ், அண்ட்ராயிட், விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் தளங்களில் பயன் படுத்தலாம்.
  • இருப்பினும், இது வாட்சப் போன்று Google Drive அல்லது iCloud இல் அரட்டைகளை(chats) காப்புப் பிரதி back up எடுக்க அனுமதிக்காது.
  • வாட்சப் போன்று குழுக்களில் பயனர்களின் ஒப்புதலின்றி உறுப்பினர்களைச் சேர்க்க அனுமதிக்காது.
  • மேலும், பயன்பாட்டின் மேம்பாட்டிடற்கு ஒரு இலாப நோக்கற்ற நிறுவனத்தால் நிதியளிக்கப்படுவதால், எந்த தரவையும் மூன்றாம் தரப்புடன் பகிர்ந்து கொள்ளாது.
  • எந்த விளம்பரமும் காண்பித்து தொல்லை தராது.
  • இது ஒரு திறந்த மூல மென்பொருள் (open source software) என்பதால், அதன் வளர்ச்சிக்கு யார் வேண்டுமானாலும் பங்களிக்க முடியும்.
Moxie Marlinspike
  • சிக்னல் அண்ட்ராயிட் பதிப்பு தொலைபேசியின் எஸ்எம்எஸ் அல்லது எம்எம்எஸ் பயன்பாடாகவும் செயல்பட முடியும், இருப்பினும் அந்த உரை செய்திகள் மறைக்குறியாக்கம் (encrypt) செய்யப்படமாட்டாது.
  • பயன்பாட்டில் எத்தனை தினசரி அல்லது மாதாந்திர பயனர்கள் இருக்கிறார்கள் என்பதை சிக்னல் அறக்கட்டளை இது வரை வெளியிடவில்லை. இருப்பினும், கூகுள் பிளே ஸ்டோர் பட்டியல் வழியாக, சிக்னல் பயன்பாட்டின் ஆண்ட்ராய்டு பதிப்பு 10 மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதைக் காண்பிக்கிறது.
  • வாட்சப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை யினால் உலகளவில் இந்த செயலி ஒரே இரவில் பிரபல்யமடைந்து விட்டது.
  • போதாக் குறைக்கு ஏலான் மஸ்க் Elon Musk கூட சிக்னலுக்கு மாறும்படி பரிந்துரைக்கிறார். (அவர் சிக்னல் பற்பசையைச் (toothpaste) சொன்னாரோ தெரியவில்லை)

இதே ஆட்டிக்கல் கோராவில்

About admin

Check Also

Microsoft Officially Released Windows 11

Microsoft Officially Released Windows 11 Microsoft Officially Released Windows 11 விண்டோஸ் 11 பதிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது; …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *