Read WhatsApp messages without opening the App மொபைலில் வாட்சப் செயலியைத் திறக்காமல் செய்திகளைப் படிப்பது எப்படி?
வாட்சப்பில் ஒரு நண்பரின் சாட்டைத் திறக்காமல் அவரது செய்திகளைப் படிக்க வேண்டிய தேவை சில வேளை ஏற்படலாம். அந்த வசதியை வாட்சப்பில் இரண்டு வழிகளில் பெற முடியும்.
முதல் வழி
- முகப்புத் திரையில் வெற்றிடமொன்றில் ஒரு நீண்ட அழுத்ததைப் (long press) பிரயோகிக்க திரையில் ஒரு மெனு தோன்றும்.
- அங்கு விட்ஜெட்ஸ் (Widgets) என்பதைத் தட்டுங்கள். (இந்த விஜட்டைத் திறக்கும் வழி நீங்கள் பயன்படுத்தும் மொபைலைப் பொருத்து வேறுபடலாம்)
- வலப்புறமாக ஸ்வைப் (swipe) செய்யும்போது வெவ்வேறு விட்ஜெட்களைப் பெறுவீர்கள்.
- அந்த விஜெட்ஸ் பட்டியலிலிருந்து WhatsApp தெரிவு செய்யுங்கள்
- அதன் மீது தட்டி இழுத்து வெற்றுத் திரையில் (place) நிலைப்படுத்துங்கள்.
- அந்த விஜெட்டின் அளவை விரும்பியவாறு அளவை மாற்ற முடியும்.
மேலுள்ள வழிமுறை புரியாவிட்டால் இந்த வீடியோவைப் பார்க்கலாம்.
இப்போது உங்களுக்கு வரும் புதிய உரை வடிவச் செய்திகளை வாட்சப் செயலியையோ, சாட்டையோ (Chat) திறக்காமல் படிக்கலாம். நீங்கள் செய்தியைப் படித்ததையும் நண்பர் அறிந்து கொள்ள மாட்டார்.
எனினும் விஜெட்டில் ஒரு சேட்டில் தட்டியதும், வாட்ஸ்அப் அந்தச் செய்தியைத் திறப்பதோடு, நீங்கள் செய்தியைப் படித்து விட்டதை நண்பரும் அறிந்து கொள்வார்.
இரண்டாவது வழி
வாட்சப் வெப் (Whatsapp Web) -இலும் சேட்டைத் (Chat) திறக்காமல் செய்திகளைப் படிக்கும் வசதி உள்ளது. வாட்சப் வெப்பில் புதிய செய்தி கிடைக்கப் பெற்றதும் (Chat) சேட்டின் மீது கர்சரை வைத்தால் போதும். ஒரு மிதக்கும் பெட்டியில் உரைச் செய்தியைக் காண முடியும்
எனினும் இந்த இரண்டு வழிகளிலும் புதிய செய்திகளை மட்டுமே படிக்க முடியும், பழைய செய்திகளை அல்ல என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.