Programming Languages நிரலாக்க மொழிகள்

Programming Languages

நாம் கணினி மூலம் எந்த விடயத்தைச் செய்வதானாலும் அதற்குரிய அறிவுறுத்தல்கள் கணினிக்கு வழங்கப்பட வேண்டும். இந்தக்  அறிவுறுத்தல்களின் தொகுதியையே செய்நிரல் Program எனப்படுகிறது. இந்த செய்நிரல்களை எழுதுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை மொழியே கணினி செய்நிரலாக்க மொழி Programming Language எனப்படுகிறது. இதனை எழுதுபவர் செய்நிரலாளர் Programmer எனப்படுகிறார்.

Programming Language-இன் முக்கிய அம்சங்கள்

 Low-level languages (கீழ் மட்ட மொழிகள்) கணினிகள் இரும மொழி (பைனரி) 0 மற்றும் 1 அடிப்படையில்  இயங்குகின்றன. ஆரம்ப காலத்தில் 0 மற்றும் 1 எனும் இந்த பைனரி எண்களைக் கொண்டே கணினிக்கான செய்நிரல்களும் எழுத்தபட்டன. அதனை இயந்திர மொழி Machine Language எனப்படுகிறது. இந்த இயந்திர மொழியில் செய்நிரல்கள் எழுதுவது மிகவும் கடினமானது.

அதன் பின்னர் Assembly Language எனும் மொழி உருவானது. அசெம்ப்லி மொழி இயந்திர மொழியை விட சிறிதளவு குறியீடுகளைப் பயன்படுத்துவதோடு இயந்திர மொழியை விடவும் எளிமையானது.

High-level vs. Low-level:

இந்த Assembly Language மற்றும் Machine Language ஆகியவை  Low-level languages (கீழ் மட்ட மொழிகள்) எனப்படுகிறது. இருந்தாலும் இவை நேரடியாக மைக்ரோபிராசஸர்களுடன் தொடர்பு கொள்ளும் திறன் கொண்டவை.

எனினும் இந்த வகை மொழிகளில் கணினி செய்நிரலாக்கம் எழுதுவது கடினமானது. இவை மனிதர்களால் புரிந்து கொள்வதும் கடினம் என்பதால் அதற்குத் தீர்வாக உயர் மட்ட மொழிகள் உருவக்கப்பட்டன.

High-level languages (உயர் மட்ட மொழிகள்) மனிதர்கள் இலகுவாக புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்கு உதாரணமாக Python, Java, C++ போன்ற மொழிகளைக் குறிப்பிடலாம். இது ஆங்கில மொழி போன்ற எவரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையிலும் எளிதாக செய்நிரல்கள் எழுதும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளன.

 Compilation vs. Interpretation:

உயர் நிலை மொழி கொண்டு எழுதப்பட்ட ஒரு கணினி நிரலை கணினியால் புரிந்து கொள்ளக் கூடியவாறு கீழ் நிலை மொழிக்கு மாற்ற வேண்டியுள்ளது. இந்த மொழி மாற்றிகளில் Compilers / Interpreters என இரு வகைகள் உள்ளன.

Compilers கம்பைலர் : முழு செய் நிரலையும் மெஷின் மொழியாக மாற்றி பின்னர் அதை இயக்குகின்றன.

 Interpreters (விளக்கிகள்): ஒரு நிரலின் ஒவ்வொரு வரியையும் உடனடியாக செயல்படுத்துகின்றன.


கணினி மொழி உதாரணங்கள்

Python
கற்பதற்கும் செய்நிரலாக்கம் எழுதவும் எளிதானது. இது Web development, தன்னியக்கத் தொழில்நுட்பம் automation, தரவியல் data science போன்ற துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

Java
நிறுவனம் சார்ந்த செயலிகளை உருவாக்குவதற்குப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. எளிமையானது மற்றும் பாதுகாப்பானது.

C++
மிகச் சிறந்த செயல்திறனை வழங்கும் மொழி. மென்பொருள்கள் உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது.

JavaScript
இணைய பக்கங்களை இயக்கத்தக்க (dynamic) செயல்பாடுகளுடன் வடிவமைக்க உதவுகிறது.

SQL
வலைத்தளம் சார்ந்த தரவுத்தளங்களை நிர்வகிக்கவும் புதுப்பிக்கவும் பயன்படும் முக்கிய மொழி

நிரலாக்கம் எங்கே பயன்படுத்தப்படுகிறது?

நிரலாக்கம் இன்றைய காலத்தில் பல்வேறு துறைகளிலும் சாதனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

  1. வலைத்தளங்கள் மற்றும் இணைய பயன்பாடுகள் (Websites and Web Applications):
    • நாம் தினசரி பயன்படுத்தும் வலைத்தளங்கள் மற்றும் இணைய பயன்பாடுகள் அனைத்தும் நிரலாக்க மொழிகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, தேடல் இயந்திரங்கள் (Google), சமூக ஊடக வலைத்தளங்கள் (Facebook, Instagram), மற்றும் இணைய வணிக தளங்கள் (Amazon) போன்றவை.
  2. மொபைல் செயலிகள் (Mobile Applications):
    • நீங்கள் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தும் செயலிகள், விளையாட்டுகள், வங்கி செயலிகள், செய்திகள், கணக்கீடு செயலிகள் ஆகியவை அனைத்தும் நிரலாக்கத்தின் அடிப்படையில் வேலை செய்கின்றன. Android, iOS செயலிகள் உருவாக்க Java, Swift, Kotlin போன்ற மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன.
  3. கணினி விளையாட்டுகள் (Computer Games):
    • கம்ப்யூட்டர், PlayStation, Xbox போன்ற விளையாட்டுகள் முழுவதும் நிரலாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன. இந்தக் காட்சி விளையாட்டுகளை உருவாக்க C++, Python, Unity போன்ற நிரலாக்க மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன.
  4. மின்னணு சாதனங்கள் (Electronic Devices):
    • ரோபோக்கள், Smart TV, Washing Machine, Microwave Oven போன்ற மின்னணு சாதனங்கள் அனைத்தும் ஒரு கட்டளையை (program) அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன. Embedded Systems, Arduino, Raspberry Pi போன்றவை இதற்கு உதவுகின்றன.
  5. தானியக்க நுண்ணறிவு (Artificial Intelligence):
    • நுண்ணறிவு (AI) அமைப்புகள், இயந்திர கற்றல் (Machine Learning) முறைமைகள் போன்றவை நிரலாக்கத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. AI பயன்படுத்தி, Siri, Alexa, Google Assistant போன்ற துணைமுனைவர்கள் (virtual assistants) செயல்படுகின்றன. Python, R, MATLAB போன்ற நிரலாக்க மொழிகள் இவ்வுறையில் பயன்படுகின்றன.
  6. தகவல் நிர்வாகம் (Data Management):
    • பெரிய அளவில் உள்ள தரவுகளை (Big Data) நிர்வகிக்க, தகவல்களை எளிதில் செயல்படுத்த Python, SQL, R போன்ற மொழிகள் பயன்படுகின்றன. வணிகத்துறைகளில் இவை முக்கிய பங்காற்றுகின்றன.
  7. ரகசியப் பாதுகாப்பு (Cyber Security):
    • கணினி பாதுகாப்பு மற்றும் ஹேக்கிங் தடுப்பு முறைகள் நிரலாக்கம் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. ரகசிய தரவுகளை பாதுகாக்க, Java, C++, Python போன்ற மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன.
  8. தானியக்க வாகனங்கள் (Autonomous Vehicles):
    • தானியக்க கார்கள், டிரோன்கள் போன்றவை இயங்க, நிரலாக்கம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கார் இயக்க முறைமைகளை கட்டுப்படுத்தும் நிரல்களை உருவாக்க, Python, C++ போன்ற மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன.

 

 

 

About admin

Check Also

Health Issues & Solutions

நீண்ட நேர கணினி பயன் பாட்டால் ஏற்படும் உடல் நல பிரச்சினைகளும் தீர்வுகளும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *