Pinterest – பிண்டரஸ்ட்

நீங்கள் இணையத்தில் உலாவும் போது உங்களைக் கவர்ந்த எத்தனையோ விடயங்களை பல்வேறு தளங்களில் காண்கிறீர்கள். அவற்றை நீங்கள் பிரிதொரு நாளில் மறுபடி பார்க்க விரும்பினால் அந்த விடயங்களை அல்லது இணைய தளத்தின் பெயரை உங்களுக்கே மின்னஞ்சலில் அனுப்பி விடலாம், அதனைக் காகிதத்தில் அச்சிட்டுக் கொள்ளலாம் அல்லது  பிரவுஸரிலேயே புக்மார்க் (Bookmark) செய்து விடலாம்.

தற்போது நீங்கள் இனையதளங்களில் பார்வையிடும் அனைத்து சுவாரஸ்யமான விடயங்களையும் இனையத்திலேயே தொகுப்பதற்கு உதவுகிறது Pinterest எனும் மற்றுமொரு இணைய தளம்.

Pinterest என்பது பேஸ்புக், ட்விட்டர் போன்ற ஒரு சமூக வலைத்தளம் ஆகும். இது உங்கள் என்ணங்களையும் கருத்துக்களையும் ஒழுங்குபடுத்துவதோடு அவற்றைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் வழி வகை செய்கிறது. மேலும் உங்கள் கருத்துக்களோடு வேறு ’பின்’டரஸ்ட் பயனர்களின் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள முடியும்.

பிண்டரஸ்ட் தளத்தில் சென்று ஒரு கணக்கை உருவாக்கிய பின்னர் உங்களுக்கே உரிய (bulletin board) தகவல்  ”பலகை” யை  (மரத்தினால் செய்த பலகையல்ல) உருவாக்கிக் கொள்ள முடியும். உதாரணமாக புகைப்படக்கலை, வீட்டு அலங்காரம், சமையல் குறிப்புகள், அறிஞர் பொன்மொழிகள், கிரிக்கட், சினிமா  என விரும்பிய தலைப்புக்களுடன் உங்கள் செய்திப் பலகையில் உருவாக்கலாம். அப்படி உருவாக்கிய தலைப்புக்களுக்குப் பொருத்தமான படங்களை தனியாக அப்லோட் செய்யவோ அல்லது வேறு இணைய தளங்களிலுள்ள படங்களைப் ’பின்’ செய்யவோ முடியும். மேலும் பிற பின்டரஸ்ட் பயனர்கள் உங்கள் பலகையை பார்வையிட முடிவதோடு நீங்கள் பின் செய்த  ஒவ்வொரு உருப்படி (item)  பற்றிக் கருத்துக்களைப் பதியவும் முடியும்.

அதே போன்று பிற பயனர்களின் பலகைகளைப் நீங்கள் பார்வையிட முடிவதோடு அவற்றை லைக் (like)  செய்யவோ மறுபடி பின் செய்யவோ (re-pin)  கருத்துக்களைப் பதியவோ முடியும்.

பேஸ்புக், ட்விட்டர் போன்று இங்கும் அடுத்த பயனர்களை பிந்தொடரவும் முடியும். வேறு பயனர் ஒருவரின் பதிவுகளும் முக்கியமானதாயிருந்தால் “Follow All”  க்ளிக் செய்து  அவரின் அனைத்து பலகைகளும் உங்கள் கனக்கில் காண்பிக்குமாறும் செய்யலாம்.

கூகில் க்ரோம் வலையோடிக்கென பிண்டரஸ்ட் எக்ஸ்டென்சனும் (extension- நீட்சி)  வெளியிடப்பட்டுள்ளது. இதனை டவுன்லோட் செய்து பிரவுசரில் நிறுவிக் கொள்வதன் மூலம்  க்ரோம் இணைய உலாவியில் நீங்கள் பார்வையிடும் படங்களின் மேல் பின்டரஸ்ட் ஐக்கன் தோன்றும் அதன் மேல் க்லிக் செய்து நீங்கள் விரும்பிய தலைப்புக்களோடு பின் செய்து விடலாம்.

பிண்டரஸ்ட் ஒவ்வொரு இணையப் பயனரும் அவசியம் பயன் படுத்திப் பார்க்க வேண்டிய சமூக வலையமைப்பு.

About admin

Check Also

Redit என்றால் என்ன அதனைப் பயன் படுத்துவது எப்படி?

Reddit என்றால் என்ன? Reddit என்பது உலகளவில் மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்ட ஒரு பிரம்மாண்டமான ஆன்லைன் சமூக மன்றம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *