PDF பைல்களை எளிதாக உருவாக்க CutePdf Writer

Cute1 பலருக்கும் பல்வேறு விதமான எப்லிகேசன் களிலிருந்து ஆவணங்களை அச்சிட்டுக் கொள்ள் வேண்டிய தேவை அவ்வப்போது வரலாம். எனினும் கணினி வைத்திருப்பவர்கள் எல்லோருமே ப்ரிண்டரும் வைத்திருப்ப தில்லை.. அப்போது தமது கணினியில் உருவாக்கிய ஆவணத்தை ப்ரிண்டர் பொருத்தியுள்ள் வேறொரு கணினிக்கு சீடி அல்லது பென் ட்ரைவ் மூலம் எடுத்துச் சென்று அச்சிட்டு கொள்வதைப் பார்க்கிறோம். .
ஆவணத்தை உருவாக்கிய எப்லிகேசன் அந்தக் கணினியிலும் நிறுவப் பட்டிருந்தால் பிரச்சினை அத்தோடு முடிந்து விடும்.. ஆனால் கணினிப் பயனர்கள் எல்லோருமே பொதுவாகப் பாவனையிலுல்ள மென்பொருள் களைத் தவிர எல்லா விதமான எப்லிகேசன்களையும் கணினியில் நிறுவிக் கொள்வதில்லை. ப்ரிண்டர் பொருத்தியுள்ள் நண்பரின் கணினியில் உரிய எப்லிகேசன் நிறுவப்படாதிருந்தால் எப்படி அச்சிட்டுக் கொள்வது? இவ்வாறன சந்தர்ப்பங்களில் கை கொடுக்கிறது Adobe நிறுவனம் உருவாக்கிய PDF (Portable Document Format) எனும் பைல் வடிவம்.
Cute2
இணைய தளங்களிலும் மின்னஞ்சல் ஊடாகவும் மென்பொருள் உதவிக் குறிப்புகள், வழிகாட்டி நூல்கள், விண்ணப்பப் படிவங்கள் போன்ற பல வகையான ஆவணங்கள் மற்றும் மின் புத்தகங்கள் (e-books) பீ.டீ.எப் பைல்களாகவே பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. பீ.டீ.எப் பைல்கள் எழுத்துக்கள், வெக்டர் கிரபிக்ஸ் (Vector Graphics), நிழற் படங்கள், அட்டவணைகள், ஹைபலிங்ஸ் (hyperlinks) எனப் பல்வேறு விடயங்களைத் கொண்டிருக்கும். பல நிறுவனங்கள் தங்கள் நிறுவனம் சார்ந்த ஆவணங்களை அறிக்கைகளை வலையமைப்பிலோ, இணையத்திலோ வெளியிட இந்த பீ.டீ.எப் பைல்களையே பெரிதும் நம்பியிருக்கின்றன. ஏனெனில் பீ.டி.எப் பைல்களை யாரும் எளிதில் மாற்றி விட முடியாது.
அதாவது இலத்திரனியல் ஆவணங்களைப் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் பரிமாறிக் கொள்ளக் கூடிய ஒரு பைல் வடிவமாக PDF உலகம் முழுதும் பயன் படுத்தப்படுகிறது.. இந்த பீ.டீ.எப் பைல்களை எடோபி நிறுவனத்தின் எக்ரொபெட் ரீடர் (Acrobat Reader) மென்பொருள் மூலம் (read) வாசித்தறியலாம். எந்தவொரு எப்லிகேசனில் உருவாக்கிய ஆவணத்தையும் பீ.டி.எப் பைலாக மாற்றிக் கொள்வதன் மூலம் குறிப்பிட்ட அந்த எப்லிகேசன் இல்லாமலேயே எக்ரோபெட் ரீடர் கொண்டு வாசித்தறியவோ அச்சிடவோ முடியும். பி.டி.எப் பைல்களைக் கையாளக் கூடிய எக்ரொபெட் ரீடர் மென்பொருள் அனேகமாக எல்லாக் கணினிகளிலும் நிறுவப் பட்டிருக்கும்.
எனினும் எக்ரோபெட் ரீடர் மூலம் புதிதாக பீ.டீ.எப் பைல்களை உருவாக்கவோ அல்லது அதனை மாற்றியமைக்கவோ (edit) முடியாது.. புதிதாக பீ.டி.எப் பைல்களை உருவாக்கவென (write) எடோபீ நிறுவனத்தால் உருவாக்கப் பட்டிருப்பது Adobe Acrobat மற்றும் Adobe LiveCycle எனும் மென்பொருள்கள். இவை மட்டுமன்றி பீ.டீ.எப் பைல்களை உருவாக்கும் வசதி எடோபீ நிறுவனத்தின் பதிப்புதுறை (Desktop Publishing) சார்ந்த வேறு மென்பொருள்களிலும் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் இங்கு சொல்ல வருவது எடோபி நிறுவனத்தின் தயாரிப்பல்லாத CutePdf Writer எனும் சிறிய மென்பொருள் பற்றியே.
CutePdf Writer .மூலம் ஆவனங்களை பீ.டீ.எப் பைலாக மாற்றி கொள்ள லாம். விண்டோஸில் இயங்கும் அச்சிடும் வசதி கொண்ட அனேகமான எப்லிகேசன்களில் உருவாக்கிய ஆவணங்களை பீ.டி.எப் பைலாக இலகுவாக் மாற்றித் தருகிறது இந்த கியூட் பீ.டி.எப். ரைட்டர்.
கியூட் பீ.டி.எப் ரைடடரோடு PS2PDF எனும் converter மென்பொருளையும் ஐயும் சேர்த்தே நிறுவிக் கொள்ள வேண்டும், கியூட் பீ.டி.எப் ரைட்டர் (3.36 MB) மற்றும் PS2PDF (5.01 MB) அளவு கொண்ட மாற்றி ஆகிய இரண்டு மென்பொருள்களையும் www.cutepdf.com எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

ஒரு ஆவண்த்தை பீ.டி.எப் பைலாக மாற்றுவதெப்படி?

மேற் சொன்ன இரண்டு மென்பொருள்களையும் நிறுவிய பின்னர் உங்கள் ஆவணத்தை உரிய எப்லிகேசன் மூலம் திறந்து கொள்ளுங்கள். அடுத்து File மெனுவில் Print தெரிவு செய்யுங்கள். அப்போது ப்ரிண்ட் டயலொக் பொக்ஸ் தோன்றும். அந்த டயலொக் பொக்ஸில் பிரிண்ட்டர் பெயராக CutePdf Writer ஐத் தெரிவு செய்து ஓகே சொல்லுங்கள். அப்போது Save as என மேலுமொரு டயலொக் பொக்ஸ் தோன்றக் காணலாம். அங்கு பைலுக்கு பொருத்தமான ஒரு பெயரையும் பைல் வடிவமாக பீ.டி.எப் என்பதையும் தெரிவு செய்து தேவையான இடத்தில் சேமித்துக் கொள்வதன் மூலம் அந்த ஆவணம் பீ.டீ.எப் பைலாக் மாற்றப் பட்டிருப்பதைக் காணலாம்.. .

-அனூப்-

About admin

Check Also

Steps Recorder-Windows 10

Steps Recorder-Windows 10 விண்டோஸ் 10 இல்  ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் என்பது உங்கள் கம்பியூட்டரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *