15. விரிதாளொன்றில் (A3:C4) என வழங்கப்பட்ட கலங்களின் வீச்சினைக் கருதுக. வழங்கப்பட்டவீச்சினுள் உள்ளடக்கப்படும் கலங்கள் பின்வருவனவற்றுள் எவை?
(1) A3, C4 மாத்திரம் (2) A3, B3, C3 மாத்திரம்
(3) A3, A4, C3, C4 மாத்திரம் (4) A3, B3, C3, A4, B4, C4 மாத்திரம்
16. கலம் C2 இல் = B2*B$5 எனும் சூத்திரம் எழுதப்பட்டுள்ள பின்வரும் விரிதாள் பகுதியை கருதுக.C2 என்ற கலத்தில் உள்ள சூத்திரம் C3 என்ற கலத்திற்கு பிரதிசெய்யப்பட்டிருக்குமாயின் பின்வருவனவற்றுள் எது C3 என்ற கலத்தில் காட்சிப்படுத்தப்படும்?
(1) 0 (2) 5000 (3) 6000 (4) 60000
பாடசாலைத் தவணைப் பரீட்சையொன்றில் ஒரு வகுப்பிலுள்ள 40 மாணவர்கள் அவர்களின் மூன்று பாடங்களிலும் பெற்றுக்கொண்ட புள்ளிகளை உள்ளடக்கியுள்ள பின்வரும் விரிதாள் பகுதியைக் கருதுக.
மாணவர்களுடைய பாடம் 1, பாடம் 2 மற்றும் பாடம் 3 இற்கான புள்ளிகள் முறையே C, D மற்றும் E நிரல்களில் காட்டப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாணவனதும் ஒவ்வொரு பாடத்திற்குமான Z-புள்ளியையும் (Z-score), ஒவ்வொரு மாணவனினதும் இறுதி Z-புள்ளியையும் (Final Z-Score) இவ்விரிதாளைப் பயன்படுத்தி கணிப்பிடப்படல்.
(i) பாடம் | இன் சராசரி பெறுமானத்தை கணிப்பிடுவதற்கு கலம் C43 இல் உள்ளிடப்பட வேண்டியசூத்திரத்தை =சார்பு (கலம் 1: கலம் 2) என்ற வடிவத்தில் எழுதுக.
(ii) இந்தச் சூத்திரத்தை கலங்கள் D43 மற்றும் E43 எனும் கலங்களுக்கு பிரதி (copy) செய்யின், கலம் D43 இல் தோன்றக்கூடிய சூத்திரத்தை எழுதுக.
(iii) மாணவரொருவரின் பாடமொன்றுக்கான 7-புள்ளியை கணிக்கும் போது பயன்படுத்தப்படும் சூத்திரம் கிழே காட்டப்பட்டுள்ளது. 7- புள்ளி= (அப்பாடத்திற்கான மாணவன் பெற்ற புள்ளி – அப்பாடத்தின் சராசரிப்புள்ளி) / அப்பாடத்தின் SD பெறுமானம்
ஒவ்வொரு பாடத்துக்கும் அவசியமான SD பெறுமதிகள் முறையே C44, D44, F44 ஆகிய கலங்களில் தரப்பட்டுள்ளன.
(a) பாடம் 1 இற்கு கமலினுடைய (Kamal) Z – புள்ளியை கணிப்பிடுவதற்காக கலம் F3 இல் உள்ளீடு செய்ய வேண்டிய சூத்திரத்தை எழுதுக. குறிப்பு :- குறித்த சூத்திரத்தை ஏனைய எல்லா மாணவர்களினதும் பாடம் 1 இற்கான Z-புள்ளிகளை கணிப்பிடுவதற்கும் பிரதிசெய்ய (copy) வேண்டிள்ளது என்பதையும் கவனத்திற் கொள்க.
(b) இந்த சூத்திரமானது F4 தொடக்கம் F42 வரையான கல வீச்சுக்கு பிரதிசெய்யப்படுமாயின், கானுடைய(Khan’s) பாடம் இற்கான Z-புள்ளியை காட்டும் கலம் F42 இல் தோன்றும் சூத்திரத்தை எழுதுக.
(iv) மாணவரொருவருடைய இறுதி Z-புள்ளியானது மூன்று பாடங்களுக்குமான Z-புள்ளிகளின் சராசரியாகும், கமலின் (Kamal) இறுதி 7-புள்ளி பெறுமானத்தைக் கணிப்பிடுவதற்கு கலம் I3 இல் உள்ளீடு செய்ய வேண்டிய சூத்திரத்தை COUNT மற்றும் SUM சார்புகளை மாத்திரம் பயன்படுத்தி எழுதுக.
(v) எல்லா மாணவர்களினதும் மூன்று பாடங்களுக்குமான Z-புள்ளி பெறுமானங்களும் மற்றும் எல்லா மாணவர்களுக்குமான இறுதி Z-புள்ளி என்பனவும் கணிப்பிடப்பட்டுள்ளன எனக் கருதிக்கொண்டு, அதிகூடிய இறுதி Z-புள்ளி (highest Z-score) பெறுமானத்தைக் காண்பதற்கு கலம் I44 இல் உள்ளீடு செய்யப்பட வேண்டிய சூத்திரமொன்றை =சார்பு2(கலம்.3:கலம்4) என்ற வடிவில் எழுதுக,