13 தொடக்கம் 14 வரையுள்ள வினாக்கள் தரப்பட்டுள்ள பின்வரும் விரிதாள் கூறை அடிப்படையாய்க் கொண்டவை.
சமன்பாடு y = px + qx + r ஐப் பயன்படுத்தித் தரப்பட்டுள்ள x இன் பெறுமானங்களுக்கு ஒத்த y இன் பெறுமானங்களைக் கணிக்கவேண்டியுள்ளது.
p, q, r ஆகிய மாறிலிகளின் பெறுமானங்கள் முறையே B1, B2, B3 ஆகிய கலங்களிலும் X இன் பெறுமானங்கள் வீச்சு C2:C6 இலும் தரப்பட்டுள்ளன.
13. x =-2 ஆக இருக்கும்போது y இன் பெறுமானத்தைப் பெறுவதற்கு D2 கலத்தில் எழுத வேண்டிய சூத்திரம் யாது?
(1) =$B$1*C2*C2+$B$2*C2+$B$3 (2) =B1+C2*C2+B2*C2+SBS3
(3) =(B1*C2)^2+$B$2*C2+$B$3 (4) =$B$1*$C$2*$C$2+$B$2+C2+$B$3
14. y இன் ஏனைய பெறுமானங்களைப் பெறுவதற்கு D2 இல் உள்ள சூத்திரத்தைக் கல வீச்சு D3:D6 இற்கு நகல் செய்துள்ளதாகக் கொள்க. y இன் மிகப் பெரிய பெறுமானத்தைப் பெறுவதற்குக் கலம் D7 இல் எழுதப்பட வேண்டிய சூத்திரம் யாது?
(1) =AVERAGE(D2:D6) (2) =COUNT(D2:D6) (3) =MAX(D2:D6) (4) =MIN(D2:D6)
15. ஒரு விரிதாள் கலத்திற்குச் சூத்திரம் =(6-2)^2+(5+4)/3 ஐ நுழைக்கும்போது காட்சிப்படுத்தப்படுவது யாது?
(1) 5 (2) 8.33 (3) 19 (4) 22.3
14. (i) இரு மடிக்கணினி மாதிரியங்களினதும் (models) அவற்றின் துணையுறுப்புகளினதும் விலைகளைக் கொண்ட பின்வரும் விரிதாள் கூறைக் கருதுக.
பொருளைக் கொண்டு செல்லும் கிரயம் ரூ. 350 ஆக இருக்கும் அதே வேளை இது கலம் B10 இற் காட்டப்பட்டுள்ளது. மாதிரியம் ஒவ்வொன்றினதும் ‘மொத்தம்’ (Total), ‘கொண்டு செல்லும் கிரயத்துடன் மொத்தம்’ (Total Including Delivery Cost) ஆகியன கணிக்கப்பட வேண்டும்,
(a) மாதிரியம் A இற்குரிய ‘மொத்தத்தை’க் கலம் B6 இற் கணிப்பதற்குத் தேவையான சூத்திரத்தை= function (cell1:cell2) வடிவத்தில் எழுதுக.
(b) இச்சூத்திரம் கலம் C6 இற்கு நகல் செய்யப்படுமெனின், அதில் காட்சிப்படுத்தப்படும் பெறுமானம் யாது?
(c) கல முகவரிகள், சார்புகள், எண்கணிதச் செயலிகள் ஆகியவற்றை மாத்திரம் பயன்படுத்திக் கொண்டு செல்லும் கிரயத்துடன் மொத்தத்தைக்’ கலம் B7 இற் பெறுவதற்கு உகந்த இரு சூத்திரங்களை எழுதுக.
(d) கலம் B7 இல் உள்ள சூத்திரத்தைக் கலம் C7 இல் நகல் செய்கையில் C7 இன் பெறுமானம்73600 ஆகக் கிடைத்தால், கலம் C7 இல் உள்ள சூத்திரம் யாது?