22, 23 ஆகிய வினாக்கள் ஒரு நூலகத்தில் உள்ள புத்தகங்கள் பற்றிய அறிக்கையைப் பேணுவதற்குப் பயன்படுத்தப்படும் பின்வரும் Books அட்டவணையை அடிப்படையாகக் கொண்டவை.
22. முதற் சாவிக்கு உகந்த புலம் (field) யாது?
(1) BookID (2) BookName (3) ISBN (4) PublisherID
23. அந்நியச் சாவிக்கு (foreign key) உகந்த புலம் யாது?
(1) BookID (2) BookName (3) Edition (4) PublisherID
24. பின்வரும் Marks (புள்ளிகள்) அட்டவணையையும் Subjects (பாடங்கள்) அட்டவணையையும் பார்க்க.
22 மேற்குறித்த Marks அட்டவணை, Subjects அட்டவணை ஆகியன தொடர்பாகக் கீழே உள்ள கூற்றுகளில் பிழையானது யாது?
(1) Marks அட்டவணையில் உள்ள Admission_No (அனுமதி எண்) உம் Subject_Code (பாடக் குறிமுறை) உம் ஓர் ஒருங்குசேர் சாவி (composite key) ஆகும்.
(2) Marks அட்டவணையில் உள்ள Admission_No (அனுமதி எண்) ஒரு முதற் சாவி (primary key) ஆகும்.
(3) Marks அட்டவணையில் உள்ள Subject_Code (பாடக் குறிமுறை) ஓர் அந்நியச் சாவி (foreign key) ஆகும்.
(4) Subjects அட்டவணைக்கும் Marks அட்டவணைக்குமிடையே ஓர் ஒன்று – பல (one-to-many) தொடர்புடைமை உள்ளது.
25. ஒரு தரவுத்தளம் (database) தொடர்பாகப் பின்வரும் எது சரியானது?
(1) புலங்களின் (field) தொகுப்பு ஒரு பதிவேட்டை (record) ஆக்குகின்றது; பதிவேடுகளின் தொகுப்பு ஓர் அட்டவணையை ஆக்குகின்றது; அட்டவணைகளின் தொகுப்பு ஒரு தரவுத்தளத்தை ஆக்குகின்றது
(2) புலங்களின் தொகுப்பு ஓர் அட்டவணையை ஆக்குகின்றது; அட்டவணைகளின் தொகுப்பு ஒரு பதிவேட்டை ஆக்குகின்றது; பதிவேடுகளின் தொகுப்பு ஒரு தரவுத்தளத்தை ஆக்குகின்றது.
(3) பதிவேடுகளின் தொகுப்பு ஒரு புலத்தை ஆக்குகின்றது; புலங்களின் தொகுப்பு ஓர் அட்டவணையை ஆக்குகின்றது; அட்டவணைகளின் தொகுப்பு ஒரு தரவுத்தளத்தை ஆக்குகின்றது.
(4) அட்டவணைகளின் தொகுப்பு ஒரு பதிவேட்டை ஆக்குகின்றது; பதிவேடுகளின் தொகுப்பு ஒரு புலத்தை ஆக்குகின்றது; புலங்களின் தொகுப்பு ஒரு தரவுத்தளத்தை ஆக்குகின்றது
5. பின்வருவது ஒரு வியாபாரத் தகவல் முறைமையின் தொடர்புநிலைத் தரவுத்தளத்தின் ஒரு பகுதியெனக்
கொள்க. இவ்வியாபாரத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சில பாடசாலைகளில் கடைகள் உள்ளன.
(i) இரு முதற் (piimaly) சாவிகளை அவற்றிற்குரிய அட்டவணைப் பெயர்களுடன் எழுதுக.
(ii) இரு அந்நியச் (foreign) சாவிகளை அவற்றிற்குரிய அட்டவணைப் பெயர்களுடன் எழுதுக.
(iii) ஒவ்வொரு கடையினதும் தொலைபேசி எண்ணை உட்படுத்துவதற்கு எந்த அட்டவணை மாற்றப்பட வேண்டும்?
(iv) ABC கல்லூரியில் உள்ள மொத்த விற்பனைகளைக் (total sales) காண்பதற்கு ஒரு வினவலைச் (query) செயற்படுத்துவதற்குச் சேர்க்கப்பட (joined) வேண்டிய அட்டவணைகள் (tables) யாவை?
(v) ShopID 004 என்ற புதிய கடை Milk & Photocopy ஐச் சந்தைப்படுத்துவதற்காக HIJ College இல் திறக்கப்பட்டுள்ளதெனக் கொள்க. இத்தகவலை உட்படுத்துவதற்காக இற்றைப்படுத்தப் பட வேண்டிய அட்டவணைகள் யாவை?
(vi) மேலே (v) இற் குறிப்பிடப்பட்டுள்ளவாறு புதிதாகச் சேர்த்த பதிவேடுகளை (records) அவற்றுக்குரிய அட்டவணைப் பெயர்களுடன் எழுதுக.