11. பின்வருவனவற்றில் எது ஒரு தரவுத்தள முகாமைப் பிரயோகத்தினால் (Application) வழங்கப்படாத ஓர் அம்சமாகும்
(1) தரவுகளை வரிசையாக்கல் (Sorting)
(2) தரவுகளை இற்றைப்படுத்தல்
(3) அறிக்கைகளை உருவாக்கல்
(4) வரைபடங்களை (Chart) உருவாக்கல்
12 தொடக்கம் 14 வரையுள்ள வினாக்கள் பின்வரும் தரவுத்தள அட்டவணைகளை அடிப்படையாகக் கொண்டவை.
12. பின்வருவனவற்றில் எது வாடகை வாகன அட்டவணைக்கான (Taxi Table) முதற் சாவியாகத் (Primary key) தெரிந்தெடுப்பதற்கு மிகவும் உகந்த புலம் (Field) ஆகும்?
(1) Taxi_NO
(2) Rate_Type
(3) Driver_Name
(4) Driver_City
13. பின்வரும் புலங்களில் எது தரவுத்தளத்தில் ஓர் அந்நியச் (Foreign) சாவிக்கு ஓர் உதாரணமாகும்?
(1) வாடகை வாகன அட்டவணையில் உள்ள Taxi_No
(2) வாடகை வாகன அட்டவணையில் உள்ள Rate_Type
(3) விலை அட்டவணையில் உள்ள Rate_Type
(4) வாடகை வாகன அட்டவணையில் உள்ள Driver_City
.14. விலை அட்டவணையில் இருக்கும் புலங்களின் எண்ணிக்கையும் பதிவேடுகளின் (Record) எண்ணிக்கையும் முறையே
(1) 2, 2 ஆகும். (2) 2, 3 ஆகும். (3) 3, 2 ஆகும். (4) 3,3 ஆகும்.
5. பாடசாலை ஒன்றின் பான்ட் வாத்தியக் குழுவில் இசைக் கருவிகளின் தொகுதியொன்று உள்ளது. இசைக் கருவிகளைக் கொண்டிராத, ஆனால் பாடசாலை பான்ட் குழுவில் இருக்க விரும்பும் மாணவர்களுக்கு இக்கருவிகள் இரவலாக வழங்கப்படுகின்றன.
மாணவர்களுக்கு இசைக் கருவிகளை இரவலாகக் கொடுப்பதை முகாமிப்பதற்குப் பாடசாலை பான்ட் குழு தரவுத் தளமொன்றைப் (Data basc) பேணுகின்றது. அத்தரவுத் தளம் கீழே தரப்பட்டுள்ளவாறான அட்டவணைகளைக் கொண்டுள்ளது.
(i) மேற்குறித்த தரவுத் தளத்தின் இரண்டு முதன்மைச் சாவிகளை (Primarykey) அவற்றிற்கு உரிய அட்டவணைப் பெயர்களுடன் பட்டியற்படுத்துக.
(ii) 2016 டிசெம்பர் 2 ஆம் திகதி பாடசாலை பான்ட் குழுவுக்கு 2 புதிய மேளங்கள் (Drums) அன்பளிப்பாகக் கிடைத்தன.
(a) தரவுத் தளத்தில் இற்றைப்படுத்தப்பட வேண்டிய அட்டவணை அட்டவணைகள் யாது / யாவை?
(b) தரவுத் தளத்தில் அட்டவணையின் அட்டவணைகளின் இற்றைப்படுத்திய நிரைகளை (Rows) எழுதுக.
(iii) 2016 டிசெம்பர் 8 ஆம் திகதி சயந்தன் பான்ட் குழுவில் இணைந்து அதே நாளில் ஓர் எக்காளத்தை (Trumpet) இரவலாகப் பெற்றான்.
(a) தரவுத் தளத்தில் இற்றைப்படுத்தப்பட வேண்டிய அட்டவணை அட்டவணைகள் யாது யாவை ?
(b) தரவுத் தளத்தில் அட்டவணையின் அட்டவணைகளின் இற்றைப்படுத்திய நிரைகளை எழுதுக