விளையாட்டுப் பொருள்கள் விற்பனைக்குள்ள கடையொன்றில் கிடைக்கக்கூடிய விளையாட்டுப் பொருள்கள் பற்றிய தரவுகளை தரவுத்தள அட்டவணையொன்று கொண்டுள்ளது. கிடைக்கக்கூடிய விளையாட்டுப் பொருள்களாவன கிரிக்கெற் மட்டைகள், ரென்னிஸ் பந்துகள், கரப் பந்துகள், வலைப் பந்துகள் மற்றும் பட்மின்ரன் மட்டைகள் ஆகியனவாகும். அட்டவணையிலுள்ள ஒரு விளையாட்டுப் பொருள் பற்றிய தரவானது
(1) புலம் (field) எனப்படும். (2) அந்நியச் சாவி (foreign key) எனப்படும்.
(3) படிவம் (form) எனப்படும். (4) பதிவு (record) எனப்படும்.
17. துணிகளை விற்பனை செய்யும் கடையொன்றுக்குப் பல விநியோகத்தர்கள் உள்ளனர். ஒவ்வொரு விநியோகத்தருக்கும் பல துணி வகைகளை விநியோகிக்க முடியும். இக்கடையில் விற்பனைக்குக் கிடைக்கக்கூடிய துணி வகைகளின் தரவுகள் அடங்கிய தரவுத்தள அட்டவணைக்கு மிகப் பொருத்தமான முதன்மைச் சாவி பின்வருவனவற்றுள் எது ?
(1) பொருளின் குறியீட்டு எண் (2) விலை (3) அளவு (4) விநியோகத்தரின் குறியீட்டு எண்
18. பின்வருவனவற்றுள் தொடர்பு நிலை தரவுத்தளம் பற்றிய கூற்றுகளுள் சரியானது
(1) தொடர்புடைமை என்பது அட்டவணையிலுள்ள இரு நிரைகளுக்கிடையிலான இணைப்பு (association) ஆகும்.
(2) தொடர்புடைமை என்பது அட்டவணையிலுள்ள இரு நிரல்களுக்கிடையிலான இணைப்பு ஆகும்.
(3) தொடர்புடைமை என்பது இரண்டு அட்டவணைகளுக்கிடையிலான இணைப்பு ஆகும்.
(4) தொடர்புடைமை என்பது இரண்டு தரவுத்தளங்களுக்கிடையிலான இணைப்பு ஆகும்.
3. பாடசாலை நூலகத்தில் உள்ள புத்தகங்கள், மாணவர்கள் மற்றும் மாணவர் புத்தகங்களை இரவல் பெற்ற விபரம் ஆகிய விவரங்களைச் சேகரிக்கும் கீழேயுள்ள தரவுத்தள அட்டவணைகளை கருதுக
(i) முதன்மைச் சாவிப் பெறுமானங்கள் இரண்டைப் பட்டியலிடுக.
(ii) Book_Title “Lion King’ஐயும் BookID *B1008′ ஐயும் கொண்ட புதிய புத்தகம் நூலகத்தில் சேர்க்க ப்படுகிறது.
(a) இற்றைப்படுத்தப்பட வேண்டிய அட்டவணை(கள்) எது/எவை ?
(b) அட்டவணையில்/அட்டவணைகளில் இற்றைப்படுத்த வேண்டிய நிரை/நிரைகளைக் காட்டுக.
(iii) குமார் 25/10/2014 அன்று நூலகத்திற்குச் சென்று ‘Arthur’ எனும் புத்தகத்தை இரவலாகப் பெற்றார்.
(a) இற்றைப்படுத்தப்பட வேண்டிய அட்டவணை(கள்) எது/எவை ?
(b) அட்டவணையில்/அட்டவணைகளில் இற்றைப்படுத்த வேண்டிய நிரை/நிரைகளை எழுதுக