தரப்பட்டுள்ள அட்டவணைக் கூறில் எத்தனை பதிவுகள் (records) தேக்கி வைக்கப்பட்டுள்ளன?
(1) 2 (2) 3 (3) 4 (4) 6
- தரப்பட்டுள்ள அட்டவணைக் கூறில் தரவுகளைத் தேக்கி வைப்பதற்கு எத்தனை புலங்கள் (fields) பயன்படுத்தப்படுகின்றன ?
(1) 2 (2) 3 (3) 4 (4) 6 - ‘ளுவரனநவெ_ரெஅடிநச’ இற்கு மிகவும் பொருத்தமான தரவு வகை யாது ?
(1) நாணயம் (currency) (2) தேதி நேரம் (date/time) (3) எண் (number) (4) பாடம் (text)
- பின்வரும் மூன்று அட்டவணைகளும் ஆசிரியர்களினதும் அவர்களுடைய பாடங்களினதும் விவரங்களைத் தேக்கிவைக்கும் பாடசாலை முகாமைத் தகவல் முறைமை ஒன்றின் ஒரு பகுதியாகும்.
ஓர் ஆசிரியர் ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களைக் கற்பித்தல் கூடும்; அதே வேளை ஒரு பாடம் ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்களினால் கற்பிக்கப்படுதல் கூடும்.
(i) இரு முதற் சாவிகளை (primary key) அவற்றின் ஒத்த அட்டவணைப் பெயர்களுடன் பட்டியற்படுத்துக.
(ii) தரவுகளைத் தேக்கிவைப்பதற்கு மூன்று அட்டவணைகளுக்குப் பதிலாக ஒரு தனி அட்டவணை பயன்படுத்தப்படு மெனின், ஏற்படும் ஒரு பிரதிகூலத்தைச் சுருக்கமாக விளக்குக.
(iii) அன்னியச் சாவி (foreign key) என்பது யாது ?
மேற்குறித்த அட்டவணைகளைப் பயன்படுத்தி உமது விடையை எடுத்துக்காட்டுக.