19. ஒரு தொடர்புடைமை தரவுத்தள அட்டவணையின் (relational database table) முதல் சாவி (primary key) தொடர்பாகப் பின்வருவனவற்றில் எது சரியானது ?
(1) அது ஒரு தனியானதாக (unique) இருக்க வேண்டும்.
(2) அது எண் (numeric) தரவு வகையாக இருக்க வேண்டும்.
(3) அது வெற்றாக இருக்கலாம்.
(4) அது பாடத் (text) தரவு வகையாக இருக்க வேண்டும்.
20, 21 ஆகிய வினாக்களுக்கு விடை எழுதுவதற்குப் புத்தகங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெறும் பின்வரும் அட்டவணையைப் பயன்படுத்துக.
20. மேற்குறித்த அட்டவணையில் பதிவேடுகளின் எண்ணிக்கையையும் புலங்களின் எண்ணிக்கையையும் முறையே வகைகுறிக்கும் சரியான பெறுமானச் சோடியைத் தெரிந்தெடுக்க.
(1) 4,6
(2) 5,6
(3) 6,4|
(4) 6,5
21. பின்வருவனவற்றில் எது மேற்குறித்த அட்டவணைக்கு முதல் சாவியாக மிகவும் உகந்தது ?
(1) தலைப்பு (புத்தகத்தின் பெயர்)
(2) விலை
(3) ISBN எண்
(4) ஆசிரியர் (எழுத்தாளர்)
3. ஒரு பாடசாலையின் ஆசிரியர்கள் பற்றிய தகவல்கள் இடம்பெறும் பின்வரும் அட்டவணையைக் கருதுக.
ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு குறித்த ஆசிரியர் உண்டு. ஓர் ஆசிரியர் ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களைக் கற்பிக்க இயலும்.
(i) மேற்குறித்த உதாரண அட்டவணையைப் பயன்படுத்தி “தர மறுபதிவை” (data duplication) விளக்குக.
(ii) தரவு மறுபதிவு ஏன் தவிர்க்கப்பட வேண்டும் என்பதைச் சுருக்கமாக விளக்குக. (iii) மேற்குறித்த அட்டவணையில் புலங்கள் ஒவ்வொன்றையும் வகைகுறிப்பதற்கு மிகவும் உகந்த தரவு வகைகளை (data types) இனங்காண்க.