20. ஒரு தரவுத்தளம் (database) பாடசாலை ஒன்றில் உள்ள மாணவர்கள் பற்றிய தரவுகளைக் கொண்டுள்ள ஓர் அட்டவணையை உடையது. அட்டவணையில் ஒரு மாணவன் தொடர்பான தரவு
(1) புலம் (field) ஆகும்.
(2) பதிவு (record) ஆகும்.
(3) படிவம் (form) ஆகும்.
(4) வினவல் (query) ஆகும்.
21. மாணவர்கள் பற்றிய தரவுகளைத் தேக்கி வைப்பதில் ஒரு தரவுத்தள அட்டவணையில் முதன்மைச் சாவியாகப் (primary key) பின்வருவனவற்றில் எது பயன்படுத்தப்படலாம் ?
(1) பிறந்த திகதி
(2) பெயர் (surname)
(3) வகுப்பு
(4) மாணவர் அனுமதி எண்
22. தொடர்புத் தரவுத்தளங்கள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A – இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட தரவுத்தளங்களுக்கிடையே உள்ள சேர்மானம் தொடர்புடைமையாகும்.
B- தொடர்புத் தரவுத்தளத்தில் உள்ள தொடர்புடைமைகளின் வகைகளில் ஒன்றுக்கொன்றான, ஒன்றுக்குப் பலவான. பலவுக்குப் பலவான என்னும் தொடர்புடைமைகள் அடங்கும்.
C – ஒரு தொடர்புத் தரவுத்தளம் மடங்கு அட்டவணைகளைக் கொண்டிருக்கலாம்.
மேலுள்ளவற்றில் சரியானது சரியானவை
(1) A மாத்திரம்.
(2) C மாத்திரம்.
(3) B, C ஆகியன.
(4) A, B, C ஆகிய எல்லாம்