OL ICT 2020 Word Processing
16. சமன் Microsoft Word மற்றும் Libre Office Writer ஆகியவற்றைப் பயன்படுத்தி முறையாக வடிவமைத்தல் செய்யப்பட்ட (formatted) ஆவணங்களின் ஒரு சேகரிப்பை வைத்திருக்கின்றார். சரவை பார்த்தலுக்காக அவருக்கு அந்த ஆவணங்களை எந்தவித வடிவமைத்தல்களுமின்றி சேமிக்க வேண்டியுள்ளது. இத்தேவைக்கு மிகவும் உகந்த கோப்பு நீட்சி எதுவாகும்?
(1) .odt (2) .txt (3) .docx (4) .pdf
vi) ஒரு சொல் முறைவழிப்படுத்தப்பட்ட பாட (text) ஆவணத்தின் துண்டமானது மேற்கொள்ளப்பு வடிவமைப்புகளுடன் (formatting) கீழே காட்டப்பட்டுள்ளது.
1-4 எனும் முகப்படையாளங்களினால் காட்டப்பட்டுள்ள வடிவமைப்புப் பணிகளைச் செய்வதற்குத் தேவைப்படும் P-V எனும் முகப்படையாளங்களினால் காட்டப்பட்டுள்ள வடிவமைப்புக் கருவிகளின் படவுருக்களை இனங்காண்க.
ஒவ்வொரு வடிவமைப்புப் பணியினதும் 1முகப்படையாளத் தையும் அதற்குப் பொருத்தமான வடிவமைப்புக் கருவியின் படவுருவின் முகப்படையாளத்தையும் எழுதுக.
OL ICT 2019 Word Processing
பதிப்பிக்கும்போது அவ்வாவணத்தின் தெரிவுசெய்யப்பட்ட ஒரு பகுதியை இன்னொரு ஆவணத்தில் பிரதி செய்ய நீங்கள் தீர்மானித்துள்ளீர்கள். இச்செயலுக்காக பின்வரும் எச்சாவி சேர்க்கைகளை நீங்கள் பயன்படுத்த வேண்டும்?
(1) Ctrl + C 914601 160rctis Ctrl + V (2) Ctrl + N அதன் பின்னர் Ctrl + V
(3) Ctrl + P 915601 L1601) Ctrl + V (4) Ctrl + V அதன் பின்னர் Ctrl + C
vi) சொல் முறைவழியாக்கம் செய்யப்பட்ட பாடத்திற்கு (text) சில வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ள (formatted) விதமானது கீழே காட்டப்பட்டுள்ளது:
முகப்படையாளம் A தொடக்கம் D வரை முகப்படையாளமிடப்பட்ட வடிவமைப்பு பணிகளைச் செய்வதற்கு தேவையான P முதல் V வரை முகப்படையாளமிடப்பட்ட வடிவமைப்புக் கருவிகளை அடையாளம் காண்க.
ஒவ்வொரு வடிவமைப்புப் பணியின் முகப்படையாளத்தையும் அதற்குப் பொருந்துகின்ற வடிவமைப்புக் கருவியின் படவுருவின் முகப்படையாளத்தையும் எழுதுக.
OL ICT 2018 Word Processing
11. ஒரு சொல் முறைவழிப்படுத்திய ஆவணத்தில் உள்ள ஒரு தரப்பட்ட சொல்லைத் தேடுவதற்குப் பின்வரும் எக்கருவியைப் பயன்படுத்தலாம்?
12. ஒரு சொல் முறைவழிப்படுத்தி மென்பொருளில் உள்ள அஞ்சல் ஒன்றிணைப்பு (mail merge) வசதியைப் பயன்படுத்தி அழைப்பாளர்கள் பட்டியல் ஒன்றுக்கான அழைப்பிதழ்களை அச்சிடுவதற்குரிய பின்வரும் படிமுறைகளைக் கருத்திற்கொள்க.
A – அழைப்புக் கடிதத்தை …….. (P) ….. என உருவாக்கல்
B – அழைப்பாளர்களின் பட்டியலை முகவரிகளுடன் உருவாக்கி ………… (Q) ………. ஆகச் சேமித்தல்
C- அஞ்சல் ஒன்றிணைப்பு வசதியைப் பயன்படுத்தி ……… (Q) …….. இல் உள்ள உரிய தகவல்களை ……….(P) ………. இற் செருகி அழைப்பிதழ்களை அச்சிடுதல்
மேற்குறித்த படிமுறைகளில் முறையே (P), (Q) என முகப்படையாளங்கள் இடப்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்குப் பொருத்தமான பதச் சோடி யாது?
(1) தரவு மூலம் (data source), முதன்மை ஆவணம் (master document)
(2) முதன்மை ஆவணம், தரவு மூலம்
(3) முதன்மை ஆவணம், நிகண்டு (thesaurus)
(4) நிகண்டு, முதன்மை ஆவணம்
OL ICT 2017 Word Processing
சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருள்களில் ஓர் ஆவணத்தில் உள்ள பாடத்தை (text) நேர்ப்படுத்துவதற்கு (align) என முகப்படையாளமிடப்பட்ட பின்வரும் நான்கு படவுருக்களும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A – P ஆனது பாடத்தை இடமாக நேர்ப்படுத்தும் அதே வேளை R ஆனது பாடத்தை வலமாக நேர்ப்படுத்துகின்றது.
B – P ஆனது பாடத்தை இடமாக நேர்ப்படுத்தும் அதே வேளை S ஆனது பாடத்தை வலமாக மாத்திரம் நேர்ப்படுத்துகின்றது.
C – Q ஆனது பாடத்தை மையத்திற்கு நேர்ப்படுத்தும் அதே வேளை S ஆனது பாடத்தைச் சீர்ப்படுத்துகின்றது (justify)
மேற்குறித்த கூற்றுகளில் உண்மையானவை யாவை?
(1) A, B ஆகியன மாத்திரம் (2) A, C ஆகியன மாத்திரம்
(3) B, C ஆகியன மாத்திரம் (4) A, B, C ஆகிய எல்லாம்
14. சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருள்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் குறுக்குவழிச் சாவிகள் தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A – பாடத்தை/இலக்குப் பொருள்களை நகல் செய்வதற்கு Ctrl + C பயன்படுத்தப்படுகிறது.
B – ஓர் ஆவணத்தில் எல்லாப் பாடங்களையும் இலக்குப் பொருள்களையும் தெரிந்தெடுப்பதற்கு (select) Ctrl + A பயன்படுத்தப்படுகின்றது.
C – ஏற்கனவே நகல் செய்த பாடத்தை இலக்குப் பொருள்களை ஓட்டுவதற்கு Ctrl+V பயன்படுத்தப்படுகின்றது.
மேற்குறித்த கூற்றுகளில் சரியானவை யாவை?
(1) A, B ஆகியன மாத்திரம் (2) A, C ஆகியன் மாத்திரம்
(3) B, C ஆகியன மாத்திரம் (4) A, B, C ஆகிய எல்லாம்
10. ஒரு சொல் முறைவழிப்படுத்திய ஆவணத்தில் உள்ள வெற்று அட்டவணைக்குப் பின்வரும் எவற்றைப் பயன்படுத்தலாம்?
A- அட்டவணையின் கலங்களுக்கு நிறமூட்டல்
B – அட்டவணையில் அடுத்துள்ள கலங்களை ஒன்றிணைத்தல்
C – அட்டவணைக்குள்ளே கலங்களைச் செருகல்
(1) A, B ஆகியன மாத்திரம் – (2) A, C ஆகியன மாத்திரம்
(3) B, C ஆகியன மாத்திரம் (4) A, B, C ஆகிய எல்லாம்
OL ICT 2016 Word Processing
9. சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளைப் பயன்படுத்தி உருவாக்கிய ஓர் அட்டவணையுடன் தொடர்புபட்ட பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
- ஓர் அட்டவணையிலுள்ள பாடத்தை வடிவமைத்தல் சாத்தியமாகும்.
- ஓர் அட்டவணையின் ஒரு நிரலில் உள்ள சொற்களை நெடுங்கணக்கு ஒழுங்குமுறையில் ஒழுங்குபடுத்தலாம்.
- ஓர் அட்டவணையின் ஒரு நிரலில் உள்ள எண்களை ஒன்றாகக் கூட்டலாம்.
மேற்குறித்தவற்றில் சரியானவை யாவை?
(1) A, B ஆகியன மாத்திரம் (2) A, ஆகியன் மாத்திரம்
(3) B, ஆகியன மாத்திரம் (4) A, B, C ஆகிய எல்லாம்
10. பின்வருவனவற்றில் சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருள், மின்னனு முன்வைப்பு மென்பொருள் ஆகிய இரண்டிற்கும் பொதுவான ஓர் அம்சம் (Feature) அல்லாதது எது?
(1) கண்டு பிடித்து மாற்றீடு செய்தல் (Find and replace) (2) அஞ்சல் ஒன்றிணைப்பு (Mail merge)
(3) நிரைகளுக்கிடையே உள்ள இடைவெளியை மாற்றல்
(4) எழுத்துச் சரிபார்த்தல்
(vi) ரமனி ஒரு சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளுடன் ஓர் ஆவணத்தை உருவாக்கி அதனைக் கீழே 1 தொடக்கம் 4 வரையான எண்களினால் காட்டப்பட்டுள்ளவாறு வடிவமைத்தாள்.
சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளில் உள்ள சில வடிவமைத்தல் கருவிகள் A தொடக்கம் N வரையான முகப்படையாளங்களுடன் கீழே காட்டப்பட்டுள்ளன.
தொடக்கம் (4) வரையான எண்களினால் காட்டப்பட்டுள்ள ஒவ்வொரு வடிவமைத்தல் பணிக்கும் பயன்படுத்தப்படும் கருவியை கருவிகளை இனங்காண்க.
வடிவமைத்தல் பணிக்குக் குறித்தொதுக்கப்பட்ட எண்ணையும் கருவியின் உரிய முகப்படையாளத்தையும் முகப்படையாளங்களையும் எழுதுக.
(குறிப்பு: உமது விடையில் தேவைக்கு அதிகமாக வடிவமைக்கும் கருவிகள் தரப்பட்டிருப்பின் புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது).
OL ICT 2015 Word Processing
சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட கோப்புகளுக்கு மேற்குறித்தவற்றில் எவை செல்லுபடியானவை?
(1) A, B ஆகியன மாத்திரம். (2) B, C ஆகியன மாத்திரம்.
(3) C, D ஆகியன மாத்திரம். (4) A, B, C, D ஆகியன எல்லாம்.
14. சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளைப் பயன்படுத்தி வாக்கியம் A ஆனது வாக்கியம் B ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது (formatted).
வாக்கியம் A. Many people believe that Abacus is the foundation of the present computer.
வாக்கியம் B: Many people believe that AbaCLS is the foundation of the present computer.
வாக்கியம் A யை வாக்கியம் B ஆக வடிவமைப்பதற்குப் பின்வரும் படவுருக்களில் எவை பயன்படுத்தப்பட்டுள்ளன?
15. ஓர் ஆவணத்தில் உள்ள பாடத்தைத் (text) தேடுவதற்குச் (find) சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளில் உள்ள பின்வரும் படவுருக்களில் எதனைப் பயன்படுத்தலாம்?
OL ICT 2014 Word Processing
10. சொல்முறை வழிப்படுத்தல் ஆவணமொன்றில் அச்சிடமுடியாத வரியுருக்களை (non printing characters) மறைப்பதற்கு அல்லது காட்சிப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் கருவி பின்வருவனவற்றுள் எது ?
11. கீழே தரப்பட்ட A எனும் வாக்கியம் சொல்முறை வழிப்படுத்தல் மென்பொருளைப் பாவித்து வடிவமைக்கப்பட்டு (formatting) B எனும் தோற்றத்தைப் பெற்றுள்ளது.
A – The new curricula for Grades 6 and 10 will be effective from 2015.
B – The new curricula for Grades 6 and 10 will be effective from 2015.
A யிலிருந்து B ஐப் பெறுவதற்குப் பயன்படுத்திய கருவிகள் பின்வருவனவற்றுள் எவை ?
12. கீழே தரப்பட்ட பெட்டியினுள் உள்ள வாக்கியங்களையும் அவற்றின் பாட நேர்ப்படுத்தல்களையும் (text alignments) கருதுக:
(A) ICT is an optional subject for the GCE (OL) examination.
(B) ICT is an optional subject for the GCE (OL) examination
(C) ICT is an optional subject for the GCE (OL) examination
மேலே காட்டப்பட்டுள்ள A, B, C எனும் ஒவ்வொரு வாக்கியத்திலும் பயன்படுத்தப்பட்ட பாட நேர்ப்படுத்தல்கள் முறையே
(1) வலது, இடது மற்றும் மத்தி. (2) இடது, வலது மற்றும் மத்தி.
(3) இடது, மத்தி மற்றும் வலது. (4) வலது, மத்தி மற்றும் இடது.
OL ICT 2013 Word Processing
பின்வருவனவற்றுள் எதை பாட வடிவமைப்பாகக் (formatting text) கருதலாம் ?
(1) இலத்திரனியல் நிகழ்த்துகையின் படவில்லைத் தளக்கோலத்தை (slide layout) மாற்றுதல்
(2) விரிதாள் மென்பொருள் கலமொன்றிலுள்ள உள்ளடக்கத்தினைத் (content) தடிப்பாக்குதல் (bold)
(3) சொல்முறை வழிப்படுத்தல் ஆவணமொன்றில் விம்பத்தை (image) உட்புகுத்துதல்
(4) சொல்முறை வழிப்படுத்தல் ஆவணமொன்றில் எழுத்துகளைச் (spellings) சரிபார்த்தல்
15. சொல்முறை வழிப்படுத்தல் மென்பொருளினால் வடிவமைப்புச் செய்யப்பட்ட (A) எனும் வாக்கியத்தையும் (B) எனும் வாக்கியத்தையும் கருதுக:
(A) – அடுத்த ஒலிம்பிக் விளையாட்டுகள் ஜப்பானில் ரோக்கியோவில் நடைபெறும்.
(B) – அடுத்த ஒலிம்பிக் விளையாட்டுகள் ஜப்பானில் ரோக்கியோவில் நடைபெறும்.
பின்வரும் வடிவமைப்புக் கருவிகளுள் எவை ( A) யிலிருந்து (B) ஐப் பெறப் பயன்படுத்தப்பட்டன?
சொல்முறை வழிப்படுத்தல் மென்பொருளைப் பாவித்து. ஆவணத்தைப் பதிப்பிக்கும்போது ஒரு பகுதிப் பாடத்தை (text) ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்துவதற்குப் பாடத்தை தெரிவு செய்து …… செய்து, பின்பு நிலைக்காட்டியைத் தேவையான இடத்தில் நிலைநிறுத்திய பின்பு பாடத்தை …… செய்தல் வேண்டும்.
மேற்குறித்த வெற்றிடங்களான .R இனை நிரப்புவதற்கு மிகப் பொருத்தமானவை எவை?
(1) A = நகல் செய்தல் (Copy) A = உட்புகுத்தல் (Insert)
(2) A = நகல் செய்தல், B = ஒட்டுதல் (Paste)
(3) A = வெட்டுதல் (cut), B = உட்புகுத்தல்
(4) A = வெட்டுதல். B = ஒட்டுதல்
OL ICT 2012 Word Processing
14. ஒரு சொல் முறைவழிப்படுத்தல் (word processing) மென்பொருளில் உள்ள ஓர் ஆவணத்திற்குப் பிரயோகிக்கப்படும் படிமுறைகளைச் செயல்நீக்கப் (undo) பயன்படுத்தப்படும் படவுரு (icon) யாது ?
15. ஒரு சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளில் உதவியைப் (help) பெறுவதற்கான செயற் சாவி (function key) யாது ?
(1) F1 (2) F2 (3) F5 (4) F7
OL ICT 2011 Word Processing
16. ஒரு சொல் முறைவழிப்படுத்தும் மென்பொருள் Texti.rtf எனப்படும் ஒரு கோப்பைப் படைக்கப் பயன்படுத்தப்படு கின்றது. பயனர் அந்த ஆவணத்தைப் பதிப்பித்த பின்னர் Backup.txt ஆகச் சேமித்து வைக்க விரும்புகின்றார். இந்நோக்கத்திற்குப் பின்வரும் எக் கட்டளையைப் பயன்படுத்தலாம்?
(1) File->Save (2) File ->Save As (3) Ctrl+S (4) Ctrl+B
17. சொல் முறைவழிப்படுத்தும் மென்பொருளில் பயன்படுத்தும் அட்டவணைகள் (tables) தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
(1) இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கலங்களை (cells) ஒன்றிணைக்கலாம் (merge).
(2) ஒரு நிரலை அல்லது நிரையை நீக்குதல் சாத்தியமன்று.
(3) நிரல் அகலத்தைச் செப்பஞ்செய்யத்தக்கதாக (adjust) இருக்கின்ற போதிலும் நிரை உயரத்தைச் செப்பஞ்செய்ய முடியாது.
(4) ஒரு கலத்தைப் பிளக்க (split) முடியாது.
OL ICT 2010 Word Processing
14. சொல் முறைவழிப்படுத்தல் (word processing) மென்பொருள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A – அது வரியுருக்களை (characters) வெவ்வேறு பருமன்களிலும் நிறங்களிலும் வடிவமைப்பதை (format) அனுமதிக்கின்றது.
B- அது ஓர் ஆவணத்தில் வடிவங்களையும் (shapes) வரிப்படங்களையும் (diagrams) வரைவதற்கு அனுமதிக்கின்றது.
C- அது காணொளி மற்றும் ஒலிக் கோப்புகளைப் பதிப்பிப்பதற்கு (edit digital video and audio files) அனுமதிக்கின்றது.
மேற்குறித்தவற்றில் சரியானது/ சரியானவை
(1) A மாத்திரம். (2) A, B ஆகியன. (3) A, B, C ஆகியன. (4) மேற்குறித்தவற்றில் எதுவுமன்று.
15. சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக
A- ஓர் ஆவணத்தில் ‘Ceylon’ எனும் சொல் வரும் எல்லா இடங்களிலும் ‘Sri Lanka’ என்னும் இரு சொற்களினால் மாற்றீடு செய்ய முடியும் .
B – ஓர் ஆவணத்தின் இடது / வலது ஓரத்தின் வழியே உரைப் பகுதிகளை நேர்ப்படுத்தலாம் (justify text)
C– ஓர் ஆவணத்தின் அடியில் மாத்திரம் பக்க எண்களை புகுத்தலாம்.
மேற்குறித்தவற்றில் சரியானது/ சரியானவை
A மாத்திரம். (2) B மாத்திரம். (3) A, B ஆகியன. (4) A, B, C ஆகியன
OL ICT 2009 Word Processing
19. செயல் முறை வழிப்படுத்தலில் ஆகிய குறியீடுகளால் காட்டப்படுபவை முறையே எவை?
(1) இடது, மைய , வலது தத்தல் நிறுத்திகளாகும் (tab stops).
(2) வலது, இடது, மைய தத்தல் நிறுத்திகளாகும்.
(3) இடது, வலது, மைய தத்தல் நிறுத்திகளாகும்.
(4) வலது, மைய , இடது தத்தல் நிறுத்திகளாகும்.
தகவல். தொடர்பாடல் தொழினுட்ப முன்னேற்றத்துடன் இலங்கைச் சமூகத்தினரின் பாரம்பரியமான வேலைக் கோலங்களில் தெளிவான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. திருமதி. சாரதா, தொழினுட்பத்தின் அநுகூலங்கள் அதிக அளவில் பெறப்படும் அலுவலகமொன்றில் பிரதான நிறைவேற்று அதிகாரியின் செயலாளராகக் கடமையாற்றுகிறார். அவரது அன்றாட பணிப் பட்டியலின் ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது.
மு.ப . 8.30 வேலை ஆரம்பம்
மு.ப. 9.30 வரை நாட்குறிப்பேட்டை வாசித்தல், முந்திய தினம் கிடைத்த தொலைநகல் (faxes) செய்திகளையும் அஞ்சலில் கிடைத்த கடிதங்களையும் பரிசீலித்து அவற்றை உரிய அதிகாரிகளுக்கு வழிப்படுத்தல்
மு.ப. 10.30 வரை கணினியை இயக்கி, அலுவலக உள்ளக இணையத்துடன் (Intranet) இணைந்து மின்னஞ்சல் செய்திகளை வாசித்து, அவற்றுக்குப் பதில் அனுப்புதல், பிரதான நிறைவேற்று அதிகாரியின் இணக்கத்துடன் அறிவித்து நாளுக்குரிய முன்னுரிமை வேலைப் பட்டியலொன்று தயாரித்து, அவற்றை நடைமுறைப்படுத்தத் தேவையான நடவடிக்கையை எடுத்தல்
மு.ப 10.45 வரை தேநீர் இடைவேளை. தனது கணவருக்கு SMS செய்தியொன்றை அனுப்பி, தனது மகளைப் பாடசாலையிலிருந்து அழைத்து வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்
பி ப. 12.30 வரை முந்திய தினம் நடத்தப்பட்ட கூட்டங்களின் அறிக்கைகளைத் தயாரித்து கணினியில் களஞ்சியப் படுத்தல்; அவ்வறிக்கைகளின் வன்பிரதி (hardcopy) களை உரிய அதிகாரிகளுக்கு அனுப்புதல்
பி.ப. 1.30 வரை பகல்போசன இடைவேளை. சில நாட்களில் அலுவலகத்தின் எதிரே உள்ள ATM பொறிக்குச் சென்று தமது ATM அட்டையைப் பயன்படுத்தி அமையச் செலவுகளுக்குப் பணம் மீளப் பெறல்
(i) திருமதி சாரதா தமது பணிகளை நிறைவேற்றுவதற்காக தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்தைப் பயன்படுத்தும் மூன்று சந்தர்ப்பங்களைக் குறிப்பிடுக.
(ii) அவர் தமது வேலைகளை இலகுவாக்குவதற்காகப் பயன்படுத்தும் பிரயோக மென்பொருள்கள் மூன்றைக் குறிப்பிடுக. உமது தெரிவுகளை நியாயப்படுத்துக. (iii) இவ்வாறான அலுவலகமொன்றில் உள்ளக இணையம் (Intranet) காணப்படுவதனால் கிடைக்கும் இரண்டு அநுகூலங்களைக் குறிப்பிடுக.
(iv) வன் வட்டில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள முக்கியமான தரவுகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அவர் பயன்படுத்தத்தக்க இரண்டு முறைகளைக் குறிப்பிடுக.
OL ICT 2008 Word Processing
19. சொல்முறை வழிப்படுத்தலில் (word processing) பின்வரும் எந்தக் குறியீடு, ஆவணத்தின் வலது இடது ஆகிய இரு ஓரங்களிலும் (margins) பாடத்தை (text) நேரப்படுத்துவதைக் (aligning) காட்டுகிறது?
20. ஆவணமொன்றின் பிரதான உடலில் (body) ஒரு பகுதி பற்றிக் குறிப்பிட்டு பக்கத்தின் கீழ்ப்பகுதியில் இடும் பாடம் (text) …………………………. எனப்படும்.
(1) ஒதுக்கிவைத்தல் (offset) (2) தலைப்பு (header)
(3) அடி (footer) (4) அடிக்குறிப்பு (footnote)
OL ICT 2007 Word Processing
22. Microsoft Word பொதியைப் (package), பயன்படுத்தி. ஆவணத்தைத் தயாரித்தல் பற்றி உண்மையானது யாது ?
(1) ஆவணத்தை அச்சடிக்கும்போது ஒவ்வொரு கோட்டின் இறுதியிலும் நுழைவுச் சாவியை (Enter key) அழுத்த வேண்டும்.
(2) பாடப் பெட்டியைப் (text box) படைப்பதன் மூலம் மாத்திரம் பாடத்தைச் செருகலாம்.
(3) ஆவணத்தின் வெவ்வேறு பக்கங்களை வெவ்வேறு தாள் அளவுகளுக்கு அமைக்கலாம்.
(4) நிறத்தை மாற்றுதல் போன்ற பாடப் படிவச் செய்பணிகளின் (text formatting operations) வெவ்வேறு வகைகளைப் பயன்படுத்தலாம்.
23. Microsoft Word இல் வெட்டுவதற்கும் ஒட்டுவதற்கும் பயன்படுத்தப்படும் விசைப்பலகைக் குறுக்கு வழிகள் முறையே
(1) ctrl +X, ctrl +V ஆகும். (2) ctrl + A, ctrl + P ஆகும்.
(3) ctrl+S, ctrl + V ஆகும். (4) ctrl + C, ctrl + P ஆகும்.
நீர் உமது பாடசாலையின் ஆண்டுக் கல்விச் சுற்றுலாவின் பிரதம ஒழுங்கு செய்யுநரெனக் கருதுக. கணினி அறையில் கிடைக்கத்தக்க கணினியைப் பயன்படுத்துவதற்கான சுதந்திரம் உமக்கு இருக்குமெனின் கீழே பட்டியற்படுத்திய கொள்பணிகள் (tasks) ஒவ்வொன்றையும் ஆற்றுவதற்கு நீர் பயன்படுத்தும் மென்பொருள் பொதியைத் தெரிவிக்க. உமது தெரிவுக்கான காரணங்களைத் தருக.
(i) மாணவர்களின் பெற்றோர்களுக்கு நிகழ்ச்சி பற்றி அறிவிப்பதற்குக் கடிதங்களைத் தயாரிக்க.
(ii) சுற்றுலாவின் பாதீட்டைத் (budget) தயாரிக்க,
(iii) சென்று பார்வையிடப்பட வேண்டிய இடங்கள் பற்றிய ஓர் அறிக்கையைத் (presentation) தயாரிக்க.
(iv) சுற்றுலாவில் செல்லும் மாணவர் ஒவ்வொருவரையும் பற்றிய பதிவுகளை அவர்களுடைய பெற்றோர்கள் பற்றிய விவரங்களுடன் தரவுத்தளத்தில் வைத்திருக்க.
(v) சென்று பார்வையிட வேண்டிய இடங்கள் பற்றி இணையத்திலிருந்து மேலும் தகவல்களை அறிக.