Difference between News Feed and Your story on Facebook

Difference between News Feed and Your story on Facebook ஃபேஸ்புக்கில்  முன்னர்  ஒரு பதிவை  இடும்போது   ​​அது தானாகவே நியூஸ் ஃபீட் (News Feed ) எனும் செய்தி ஊட்டத்தில் வெளியிடப்பட்டது. ஆனால்  இப்போது ​​ News Feed, Your story கதை என இரண்டு தெரிவுகள் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

பதிவுகளை இடுவதற்கு நியூஸ் ஃபீட் என்பதே இயல்புநிலைத் தெரிவு  என்றாலும், யுவஸ்டோரி எனும் மற்றுமொரு தெரிவைப் பார்க்கும் போது நிச்சயம்  ஒரு சிறு குழப்பம் பலருக்கும் ஏற்படும்.  

Difference between News Feed and Your story on Facebook ஃபேஸ்புக்கில் நியூஸ் ஃபீட், யுவஸ்டோரி என்ன வேறுபாடு?

நியூஸ் ஃபீட் எனும் செய்தி ஊட்டமானது பேஸ்புக்கின் முக்கிய அம்சமாகும். பேஸ்புக்கின் ஆரம்ப காலத்திலிருந்தே நியூஸ் ஃபீட் அதன் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. உங்கள் பதிவுகளை இட நீங்கள் நியூஸ் ஃபீட் தெரிவு செய்தால், அதன் உள்ளடக்கம் உங்கள் நியூஸ் ஃபீட் பகுதியில் அல்லது வோல் அல்லது டைம்லைனில் காண்பிக்கப்படும். (அனைத்தும் ஒன்றுதான்) . புதிய உள்ளடக்கத்தைப் பார்க்க நீங்கள் கீழ் நோக்கித் ந்கர்த்த வேண்டும்.

ஃபேஸ்புக் நியூஸ் ஃபீடில் இப்போது பதிவுகளை இடுவது கூட சலிப்பான விடயமாகத்  தெரிகிறது. நாம் பதிவுகள் இட்டாலும் எல்லா நண்பர்களையும் அது அடைகிறதா என்பதும் நிச்சயமில்லை. அல்லது மிகத் தாமதமாக நன்பரைப் போய்ச் சேர்கிறது.  பேஸ்புக் அதன் ஊட்ட வழிமுறையில் (feed algorithm) பல்வேறு மாற்றங்களை அடிக்கடி செய்து வருகிறது. மேலும் ஃப்பேஸ்புக் முன்னரை விட வணிக பக்கங்கள் மற்றும் விளம்பரங்களினால் நிரம்பியுள்ளது.  அதனால் ஃபீட் அல்கோரித்ம் படி தனி நபர் பதிவுகளினால் அவற்றை முந்திச் செல்ல முடிவதில்லை.

tamiltech.lk

Difference between News Feed and Your story on Facebook

இதன் காரணமாகவோ என்னவோ ”யுவ ஸ்டோரீஸ்” (உங்கள் கதை) எனும் தெரிவு 2017 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. யுவஸ்டோரீஸ் கதைகளும் ஒரு வகையில் மற்றொரு நியூஸ்ஃபீட்தான் ஆனால் எழுத்து வடிவ தகவல்களை ( text) விட படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளைப் இடவே இது சிபாரிசு செய்யப்படுகிறது.

யுவஸ்டோரீஸ் கதைகள் புகைப்படம் மற்றும் வீடியோவை ஸ்லைடட்-ஷோ போல இயக்குகின்றன. யுவஸ்டோரீஸ் இணைப்பில் க்ளிக் செய்ததும் முதலில் ஒரு நண்பரின் பதிவில் ஆரம்பித்து , அதன் பட்டியல் முடிந்ததும், வேறொரு நண்பரின் ’கதைகள்’ இயங்க ஆரம்பிக்கும்.

யுவஸ்டோரீஸ் நீங்கள் விரும்பும் உள்ளடக்கத்தைப் பார்க்கவும் விரும்பாத ஒன்றை புறக்கணிக்கவும் கூடிய வசதியை வழங்குகிறது..

நியூஸ் ஃபீட் எனும் செய்தி ஊட்டமானது உங்கள் பதிவுகளை காலவரையறையின்றி அல்லது நீங்களாக நீக்கும் வரை வைத்திருக்கும். ஆனால் ஸ்டோரீஸ் எனும்  கதை ஒரு பதிவை  ஒரு நாள் மட்டுமே வைத்திருக்கும். பின்னர் அவை நண்பர்களின் பார்வையில் இருந்து தானாகவே மறைக்கப்பட்டு . அதாவது யுவஸ்டோரீஸ் பதிவுகளின் ஆயுட்காலம் ஒரேயொருநாள்தான்

யுவஸ்டோரீஸ் கதைகள் உங்கள் டைம் லைனில் அல்லது செய்தி ஊட்டத்தில் இயல்புநிலையில் தோன்றாது. ஆனால் நீங்கள் விரும்பினால் யுவஸ்டோரீஸ் பதிவுகளையும் நியூஸ்ஃபீடில் தோன்றுமாரு ஒரே நேரத்தில் இரண்டையும் தெரிவு செய்து பதிவுகள் இடலாம்.

யுவ ஸ்டோரீஸில் பதிவிடும் போது நண்பர்கள் அதனைப் பார்க்கத் தவற மாட்டார்கள என்பது ஸ்டோரீஸில் இருக்கும் சிறப்பம்சம் எனலாம்.

About admin

Check Also

Microsoft Officially Released Windows 11

Microsoft Officially Released Windows 11 Microsoft Officially Released Windows 11 விண்டோஸ் 11 பதிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது; …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *