MS-Office 2007 ற்கு இன்னும் மாறவில்லையா?


எம்.எஸ்.வர்ட் 2007 பதிப்பில் உருவாக்கிய docx , மற்றும்.docm பைல் நீட்டிப்புகளைக் (File Extension) கொண்ட பைல்களை எம்.எஸ்.வர்ட் 2003 மற்றும் அதற்கு முந்திய பதிப்புகளில் திறக்க முடியாது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.. அவ்வாறு திறக்க வேண்டுமானால் அந்த பைலை உருவாக்கும்போதே வர்ட் 2003 பதிப்பிலும் திறக்கக் கூடியவாறு அதனை சேமித்துக் கொள்ள வேண்டும்.

வர்ட் 2007 ல் மட்டுமன்றி பவர்பொயிண்ட் 2007 மற்றும் எக்சல் 2007 லும் இதே நடை முறையையே பின்பற்ற வேண்டும்.. இந்த சிக்களுக்கு மைக்ரொஸொப்ட் நிறுவனம் ஒரு மென்பொருள் கருவியை வெளியிட்டுத் தீர்வு சொல்லியுள்ளது. உங்கள் பழைய ஒபிஸ் மென்பொருள் தொகுப்புடன் Microsoft Office Compatibility Pack for Word, Excel, and PowerPoint 2007 File Formats எனும் மென்பொருள் பொதியை நிறுவிக் கொள்வதன் மூலம் ஒபீஸ் 2007 போமட்டில் சேமிக்கப்பட்ட பைல்களைத் திறந்து பார்க்க முடிவதோடு அதனை எடிட் செய்யவும் முடிகிறது.
37 எம்பீ பைல் அளவு கொண்ட இந்த மென்பொருள் பொதியை மைக்ரோஸொப்ட் நிறுவன இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

-அனூப்-

About admin

Check Also

Steps Recorder-Windows 10

Steps Recorder-Windows 10 விண்டோஸ் 10 இல்  ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் என்பது உங்கள் கம்பியூட்டரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *