1. Column Chart நிரல் வரைபு
நிரல் வரைபுகள் பெறுமானங்களை (values) ஒன்றோடொன்று ஒப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
2. பார் (சலாகை) வரைபு Bar Charts
சலாகை வரைபுகள் நிரல் வரைபுகளைப் போன்றtதே, எனினும் உருப்படி வகைகள் (item categories) செங்குத்தாக இல்லாமல் கிடையாகத் தோன்றும்.
பட்டை வரைபுகளும் வெவ்வேறு வகையான தரவுகளை ஒப்பிடுவதற்கே பயன் படுத்தப்படுகின்றன.
3. பை வரைபு Pie charts
உருப்படி வகைகளை அளவிட்டு சதவீதமாகக் (percentages) காட்ட விரும்பும்போது பை வரைபு பயன்படுத்தப்படும்.
4. கோட்டு வரைபு Line charts
Line வரைபுகள் நேரம் அல்லது காலம் சார்ந்ததாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் தரவுப் புள்ளி மாறுவதைக் காண்பிக்க வரி வரைபுகள் பயன் படுத்தப்படும்..
5. பிரதேச வரைபு Area charts
பிரதேச வரைபுகள் கோட்டு வரைபுகளுக்கு ஒத்ததாக இருக்கும், ஆனால் கோடுகளுக்கிடைப்பட்ட பிரதேசம் நிழல்படுத்தப்பட்டிருக்கும்.
ஒரு பிரதேச வரைபின் நோக்கம் காலப்போக்கில் மாறும் மதிப்புகளின் அளவை முன்னிலைப்படுத்துவதாகும். .
6. XY Scatter Chart சிதறல் வரைபு
“சிதறல் வரைபுகள் கோட்டு வரைபடங்களைப் போலவே இருக்கும், அவை தரவுப் புள்ளிகளைத் திட்டமிடுவதற்கு கிடைமட்ட மற்றும் செங்குத்து அச்சுகளைப் பயன்படுத்துகின்றன. ஒரு மாறி (variable) மற்றொன்றால் எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்பதை சிதறல் வரைபுகள் காட்டுகின்றன.
இரண்டு வகையான மாறும் தரவுகளிடையே ஒரு தொடர்பு அல்லது இணைப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய சிதறல் வரைபுகள் உதவுகின்றன
மிகப் பெரிய அளவிலான தரவுகளை எதிர்கொள்ளும் போது, சிதறல் வரைபுகள் பயன்படுத்துகின்றன. சிதறல் வரைபடங்கள், தரவுகளில் உள்ள முரண்பாடுகளை மிக எளிதாகக் கண்டறிய அனுமதிக்கின்றன