Microsoft Officially Released Windows 11 விண்டோஸ் 11 பதிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது;
விண்டோஸ் 11 இன் பதிப்பின் அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 05 ஆம் திகதி வெளியிடும் என கடந்த ஜூன் மாதமே அறிவித்திருந்தது மைக்ரோசாஃப்ட். ஆனால் ஒரு நாளுக்கு முன்னதாக அக்டோபர் 4 ம் திகதியே விண்டோஸ் 11 பதிப்பை வெளியிட்டுள்ளது.
விண்டோஸ் 11 பதிப்பை இப்போது மைக்ரோசாப்ட் இணைய தளத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக பதிவிறக்கம் செய்ய முடியும். மேலும் இதனை இலவசமாகக் கிடைக்கச் செய்துள்ளது.,
ஆனால் விண்டோஸ் 10 அசல் பதிப்பை (Genuine) முன்னரே பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இலவசமாக பதிவிறக்கம் செய்ய முடியும். விண்டோஸ் 7 அல்லது முந்தைய பதிப்புகளைப் பயன்படுத்தும் பயனர்கள் அதற்குப் பணம் செலுத்த வேண்டும். (இலங்கை. இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் சாதாரண கம்பியூட்டர் பயனர்கள் அனைவரும் பணம் செலுத்தியே விண்டோஸைப் பயன் படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது)
மைக்ரோசாப்ட் பிசி ஹெல்த் செக் (PC Health Check) என்ற ஒரு சிறிய மென்பொருள் கருவியையும் மேம்படுத்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் கம்பியூட்டர் விண்டோஸ் 11 பதிப்போடு இணக்கமானதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.