Macro என்றால் என்ன?


ஒரு ஹோட்டலுக்கு தினமும் போகிறீர்கள். ஒரு பீஸா, இரண்டு ரோல்ஸ், ஒரு டீ என்று ஒவ்வொரு நாளும் தவறாமல் அதே ஹோட்டலில் ஓடர் செய்து சாப்பிடுகிறீர்கள். ஒரு நாள் உங்களைப் பார்த்ததுமே ஹோட்டல் சர்வர், “வழக்கம் போல் தானே ஐயா?” எனக் கேட்கிறார். “ஆம்” என்று நீங்கள் தலையசைக்க சர்வர் செயற்படுத்துவது ஒரு மேக்ரோ ஆணைத் தொடரை. பீஸா, ரோல்ஸ், டீ என்பதற்குப் பதிலாக ஒரு தலையசைப்பின் மூலம் மூன்றையும் ஓடர் செய்கிறீர்கள் அல்லவா? இது தான் மேக்ரோ.
மேலே நீங்கள் படித்தது மேக்ரோ என்பதற்கு மறைந்த எழுத்தாளர் சுஜாதா சொன்ன விளக்கம்.
கணினியில் ஒரே செயலை திருமபத் திரும்ப செய்கிறீர்கள். அவ்வாறு செய்வது சோர்வை உண்டாக்குவதோடு நேரத்தையும் சக்தியையும் கூட வீணாக்குகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நமக்கு உதவுகிறது மேக்ரோ எனும் வசதி. மேக்ரோவைப் பயன்படுத்துவதன் மூலம் எமது வேலையை இலகுவாக்க முடிவதோடு மன மகிழ்ச்சியையும் தருகிறது..

திருமபத் திருமபச் செய்யப்படும் செயற்பாடுகள் எதுவாயிருந்தாலும் அனைத்தையும் மேக்ரோ கொண்டு இலகுவாகச் செய்யலாம். கணினியில் நாம் ஒரே வேலையைப் பல முறை திரும்பத் திரும்பச் செய்கிறோம்.
இந்த மேக்ரோ மூலம் நீண்ட மற்றும் சலிப்பை உண்டாக்கும் வேலைகளை ஒரே க்ளிக்கின் மூலம் செய்து முடிக்கலாம்.
விண்டோஸ் இயங்கு தளத்திற்கான பயன்பாட்டு மென்பொருள்களில் மேக்ரோ அதிகம் பாவனையிலுள்ளது. எம்.எஸ்.வர்ட், எக்ஸல், பவர்பொயிண்ட் போன்ற பல எப்லிகேசன் மென்பொருள்களில் மேக்ரோ வைப் பயன்படுத்தும் வசதி இணைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள்களில் மேக்ரோவைப் பதிவு செய்யும் வசதி, மற்றும் புதிதாக தங்கள் தேவைகளுக்கேற்ப மேக்ரோவை விசுவல் பேசிக் எனும் கணினி மொழி மூலம் வடிவமைப்பதற்கான வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறே சில நிறுவனங்கள் பொதுவான தேவைக்கான எந்தவொரு எப்லிகேசன் மென்பொருளுடனும் பயன் படுத்தக் கூடியவாறான மேக்ரோ நிரல்களையும் வெளியயிட்டுள்ளன.

ஒரே வேலையே திரும்பத் திரும்ப உங்களால் செய்யப்படுவதாக உணர்ந்தால் அந்த செயறபாட்டுக்கென ஒரு மெக்ரோவினை உருவாக்கி வைப்பதன் மூலம் அடுத்த முறை அதே வேலையை மறுபடியும் செய்யு வேண்டிய தேவை ஏற்படும்போது ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ள மெக்ரோவினை இயக்கி ஒரே க்ளிக்கில் அந்த வேலையை செய்து முடிக்கலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட இமெயில் கணக்குகள் வைத்திருப்பின் அவை ஒவ்வொன்றினையும் லொகின் செய்து மின்னஞ்சல்களைப் பார்த்தல், டைப் செய்த ஒரு டொகியுமென்டை போமட் செய்தல், திகதி பக்க இலக்கம் போன்றவற்றை உள்ளீடு செய்தல், அறிக்கைகளை தயாரித்தல், வெவ்வெறு எப்லிகேசன் மென்பொருள்களுக்கிடையே டேட்டாவை பிரதி செய்தல் என எண்ணிலடங்கா செயற்பாடுகளை மேக்ரோவினை உருவாக்குவதன் மூலம் இலகுவாக செய்து கொள்ளலாம்.

இப்போது எம்.எஸ். எக்ஸலில் மேக்ரோவை எவ்வாறு செயற்படுத்துவது எனப் பார்ர்ப்போம். முதலில் எக்ஸலைத் திறந்து மெக்ரோவை செயற்படுத்தவிருக்கும் பைலை அல்லது வேர்க்புக்கை திறந்து கொள்ளுங்கள். அடுத்து Tools மெனுவில் Macro தெரிவு செய்து அதிலிருந்து வரும் சப் மெனுவிலிருந்து Record New Macro தெரிவு செய்யுங்கள். அப்போது படம் 1 இல் இருப்பது போன்ற ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றும் .

இங்கு Macro Name – எனுமிடத்தில் மேக்ரோவுக்குப் பொருத்தமான ஒரு பெயரை வழங்க வேண்டும்.

Shortcut Key – இங்கு ஏதேனுமொரு ஆங்கில எழுத்தை வழங்கலாம். படத்தில் S எனும் எழுத்து வழங்கப்பட்டுள்ளது. CTRL +Shift உடன் S விசையை அழுத்த மேக்ரோவை ஓட விடலாம். எனினும் இது கட்டாயமன்று.
Store macro in – இது வழமையாக நீங்கள் பணியார்றும் வேர்க்புக் ஆக இருக்கும்.. புதிதாகத் திறக்கும் ஒவ்வொரு வேர்க்புக்கிலும் இந்த மேக்ரோ வினைப் பயன்படுத்த வேண்டுமானால் New Workbook என்பதைத் தெரிவு செய்யுங்கள்.

Description – இங்கு நீங்கள் உருவாக்கும் மேக்ரோவை பற்றி சிறுது விவரிக்கலாம் இவ்வாறு விவரிப்பதன் மூலம் பிரிதொரு நேரம் பயன் படுத்தும் போது எதற்கான மேக்ரோ என்பதை எமக்கு ஞாபகமூட்டும்., இதுவும் கட்டாயமன்று.

இந்த விவரங்கள் அனைத்தையும் வழங்கிய பிறகு ஓகே சொல்ல மேக்ரோ ரெகோடர் பதிவு செய்ய ஆரம்பிக்கும். அத்தோடு Stop Recording என ஒரு சிறிய டூல்பாரும் (படம் 2 ) திரையில் தோன்றும்.

இப்போது எக்ஸலில் நீங்கள் தினமும் செய்யும் வேலைகளை வழமை போல் செய்ய ஆரம்பியுங்கள். உதாரணமாக ஒரே அட்டவணைய தினமும் டைப் செய்ய வேண்டியிருப்பதாக வைத்த்துக் கொள்ளுங்கள். அந்த அட்டவணையை மறுபடியும் இங்கு டைப் செய்யுங்கள். அடுத்து உங்கள் செயற்பாடுகள் அனைத்தும் முடிய டூல்பாரில் Stop Recording பட்டனில் க்ளிக் செய்து மெக்ரோவை நிறுத்தி விடுங்கள்.
அடுத்து பதிவு செய்த மேக்ரோவை இயக்குவதற்கு மறுபடியும் Tools மெனுவில் Macro, தெரிவு செய்து வரும் சப் மெனுவிலிருfது Macros தெரிவு செய்யுங்கள். அப்போது படம் – 3 ல் உள்ளது போல் ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றும். அங்கு உருவாக்கப்பட்டுள்ள மேக்ரோக் களின் பெயரும் காண்பிக்கப்படும். அதிலிருந்து உரிய மேக்ரோவை தெரிவு செய்து Run பட்டனில் க்ளிக் செய்யுங்கள். இப்போது அடிக்கடி நீங்கள் சிரமப்பட்டு செய்து வந்த ஒரு வேலை ஒரே க்ளிக்கில் செயற்படுத்தப்டுவதைக் காணலாம்.

-அனூப்-

About admin

Check Also

Microsoft Officially Released Windows 11

Microsoft Officially Released Windows 11 Microsoft Officially Released Windows 11 விண்டோஸ் 11 பதிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது; …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *