க்ரோம் பிரவுஸரிற்கான ஒரு புத்தம் புதிய extension
ஒரு பயனுள்ள புதிய Chrome (extension) நீட்சியை கூகுல் நேற்று வெப் ஸ்டோரில் வெளியிட்டுளளது. Link to Text Fragment எனும் இந்த நீட்சி யின் மூலம் வலைப் பக்கமொன்றில் உள்ள ஒரு குறித்த உரைப் பகுதிக்கு நேரடியாக இணைப்பை (links) உருவாக்கலாம்.

அதாவது ஒரு வலைப் பக்கத்தில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உரைப்பகுதியின் மீது ரைட் க்ளிக் செய்து வரும் கண்டெக்ஸ்ட் மெனுவில் “Copy Link to Selected Text” ஊடாக ஒரு இணைப்பை எளிதாக உருவாக்க இந்த நீட்டிப்பு அனுமதிக்கிறது.
புரியாவிட்டால் வீடியோ பார்க்கலாம்
அந்த இணைப்பை நண்பர்களோடு பகிர முடிவதோடு இணைப்பில் நண்பர் தட்டும் போது அவரது கணினியில் இந்த நீட்சிக்கு இணக்கமான இணைய உலாவி இருப்பின் நீங்கள் தெரிவு செய்த அதே உரைப் பகுதியைக் நண்பருக்குக் காண்பிப்பதோடு அதனை ஹைலைட் செய்து முன்னிலைப்படுத்தும்.

இதன் மூலம் அறிக்கைகள் மற்றும் கட்டுரைகளில் மேற்கோள்கள் இடும் போது ஒரு முழு கட்டுரையை அல்லது வலைத்தளத்தை காண்பிக்காமல் தேவையான ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோளிட வசதியாக இருக்கும்.
பயன்பாட்டு வழிமுறை
இதனைப் பயன் படுத்துவதற்கு முதலில் உங்கள் க்ரோம் உலாவியில் Link to Text Fragment நீட்சியை நிறுவிக் கொள்ள வேண்டும்.
அடுத்து இணைக்க விரும்பும் வலைப் பக்க உரைப் பகுதியைத் தேர்ந்தெடுங்கள்.
பின்னர் உரைப் பகுதியின் மீது ரைட் க்ளிக் செய்து ” Copy Link to Selected Text ” என்பதைத் தேர்வு செய்

இணைப்பு உருவாக்கம் சரியாக இருக்குமானால், தேர்ந்தெடுக்கப்பட்ட உரைப் பகுதி மஞ்சள் நிறத்தில் முன்னிலைப்படுத்தப்படும்.இந்த இணைப்பை உங்கள் நீங்கள் பகிர விரும்பும் இடங்களில் பேஸ்ட் Paste செய்து விடுங்கள்.