Introduction to Software

மென்பொருள்


Software –  a set of programs மென்பொருள் என்பது ஒரு குறித்த பணியை நிறைவேற்றத்  தேவையான கணினி செய் நிரல்களின்; (programs) திரட்டாகும்.  

உதாரணமாக எம்.எஸ்.வர்ட் மென்பொருளில் Bold, Italic, Underline, alignment, highlight, bullets, numbering, table என பல வசதிகளைப் பெறுகிறோம்.

இவை ஒவ்வொன்றும் தனித்தனியான செய்நிரல்களாகும். இவற்றை ஒரு திரட்டாக ஒன்று சேர்த்தே எம்.எஸ்.வர்ட் எனும் மென்பொருள் (Software) எமக்குக் கிடைக்கிறது.

கணினி நிரல்  (programs) என்பது கணினிக்கு வழங்கப்படும் அறிவுறுத்தல்களின் திரட்டாகும்.  கணினி மூலம் எப்பணியை நிறைவேற்ற விரும்பினாலும் அதற்கேற்றவாறு கணினிக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். 

எமது அறிவுறுத்தல்களுக்கேற்பவே கணினி செயற்படுகிறது. இவ்வறிவுறுத்தல்கள் ஏதேனுமொரு கணினி மொழியூடாக வழங்கப்படும். Program – a set of instructions

மென்பொருள் வகைகள்

  • System Software முறைமை மென்பொருள்
  • Application Software – பிரயோக மென்பொருள்

System Software  முறைமை மென்பொருள்

கணினி வன்பொருளை உயிர்ப்பிப்பது முறைமை மென்பொருளாகும். இவை கணினியை இயக்குவதற்கும் கட்டுப் படுத்துவதற்கும்  உதவுவதோடு  ஏனைய பயன் பாட்டு மென்பொருள்கள் இயங்குவதற்கான ஒரு தளமாகவும் தொழிற்படுகின்றன. 

முறைமை மென்பொருளின் இரண்டு பிரதான வகைகள்

  • Operating System (OS)  (இயங்கு தளம் /பணிசெயல் முறைமை)
  • System Utilities and Service Programs பயனர் சேவை மென்பொருள்

பணிசெயல் முறைமை /இயங்கு தளம்  Operating System (OS) 

கணினி எனும் வன்பொருள் எவ்வாறு தொழிற்பட வேண்டுமென்ற கட்டளையை வழங்குகின்ற ஒரு மென்பொருளே பணிச்செயல் முறைமை மென்பொருளாகும். பணிச்செயல் முறைமை  இன்றி கணினியை பயன்படுத்த முடியாது.

எனவே கணினியில் கட்டாயமாக ஒரு பணிச்செயல் முறைமை மென்பொருள் இருத்தல் அவசியம். ஒரு கணினியில் பணிச்செயல் முறைமையே முதன் முதலில் நிறுவப்படும். இதன் மீதே பிற மென்பொருள்கள் நிறுவப்படும்.

வன்தட்டில் நிறுவப்படும் பணிச்செயல் முறைமையானது கணினியை இயக்கியதும் நினைவகத்திற்கு ஏற்றப்பட்டு கணினியை பயன்படுத்த தேவையான சூழலை ஏற்படுத்துகிறது. வன்தட்டில் இருந்து  நினைவகத்திற்கு ஏற்றப்படும் செயற்பாட்டை booting அல்லது  loading  எனப்படும்.

OS used in PC’s  : MS-DOS, Windows , Unix, Ubundu , Mac OS
OS used in mobile phones : IOS, Android, Symbian, Windows mobile  

பணிச்செயல் முறைமையின் அடிப்படைத் தொழிற்பாடுகள்;

01. Process management
ஒவ்வொரு கணினி செய்நிரல்களையும் இயக்குவதோடு ஒரே நேரத்தில் இயக்கப் படும் பல்வேறு செய்நிரல்களிடையே மோதல்கள் ஏர்படாது தடுத்தல்

02.  Memory Management  நினைவக முறைமை
நினைவகத்தை முகாமை செய்தல் – ஒரே நேரத்தில் இயக்கப்படும் வெவ்வேறு செய்நிரல்களுக்குப் போதிய நினைவகத்தை ஒதுக்குதல் 

03. Integrating input / output / storage devices
கணினியின் வன்பொருள் பாகங்களை ஒன்றிணைத்து இயக்குதல்

04. Providing user interface  பயனர் இடை முகத்தை வழங்குதல்
கணினிக்கும் பயனருக்குமிடையே தொடர்பை ஏற்படுத்தும் பயனர் இடை முகத்தை வழங்குதல்

CLI- Command Line Interface– கட்டளைக் கோட்டு இடைமுகப்பு

GUI- Graphical User Interface– வரைவியல் பயனர் இடைமுகப்பு

05. File Management கோப்புக்களை உருவாக்குதல், இடம் பெயர்த்தல், பிரதி செய்தல், நீக்குதல் போன்ற  செயற்பாடுகளை முகாமை செய்தல்.  

Command Line Interface (CLI)  கட்டளைக் கோட்டு இடைமுகப்பு

இங்கு கணினியின் சகல செயற்பாடுகளும் எழுத்து வடிவப் கட்டளைகள் மூலமே நிறைவேற்றப்படுகின்றன.  இந்த இடை முகப்பில் பணியாற்றுவது கடினமாகும். இங்கு கட்டளைகளை நினைவில் வைத்திருக்க வேண்டியதுடன் அவற்றைப் பிழையின்றி உள்ளீடு செய்தலும் அவசியம்.   Eg: MS-DOS , Unix

Graphical User Interface (GUI)  வரைவியல் பயனர் இடைமுகப்பு

இங்கு கணினி பயனா; கணினியை இலகுவாகப் பயனபடுத்துவதற்கு கணினியின் செயற்பாடுகள் அனைத்தும் window,  Menu, Pointer, Dialog Box  என உருவ  வடிவில் தரப்படுகின்றன.  

இந்த இடை முகப்பில் இலகுவாக சிறுவர்கள் முதல் வளர்ந்தவர்கள் வரை எவராலும் பணியாற்ற முடிவதுடன் கணினி பயன் பாட்டில் அனுபவமோ தேர்ச்சியோ இருக்க வேண்டியதில்லை
Eg: Windows, Ubundu.  Mac OS (Apple Machintosh)

System Utilities and Service Programs பயன்பாட்டு மென்பொருள்

கணினியின் இயக்கத்தை சீராக வைக்கவும் பராமரிக்கவும் உதவும் மென்பொருள்களை System Utilities and Service Programs  எனப்படுகிறது.   
Eg: Backup Software, Anti Virus Program, Scan Disk, Disc Defragmenter, Device Driver,

  1. Backup Software காப்பு மென்பொருள்

கணினி வன்தட்டில் தேக்கி வைக்கப்படும் முக்கியமான தரவுகள்  தகவல்கள் மென்பொருள்கள் போன்றவற்றை பாதுகாப்பாக வேறொரு ஊடகத்தில் சேமித்து வைப்பதை Backup எனப்படும்.

இவ்வாறு பாதுகப்பாக சேமித்து வைக்க உதவும் மென்பொருள்களை Backup Software எனப்படுகிறது.

  1. Anti Virus Program / Virus Guard நச்சி நிரல் எதிர்ப்பு மென்பொருள்

வைரஸ் போன்ற கணினியின் இயக்கத்தைப் பாதிக்கக் கூடிய செய்நிரல்களிலிருந்து கணினியைப் பாதுகாக்கவும் அவ்வாறான செய்நிரல்களைத் தேடி அழிக்கவும் உதவும் மென்பொருள்களை வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் எனப்படுகிறது.

  1. Scan Disk வட்டு வருடி

இது வன்தட்டின் (hard disk) பௌதிக நிலையைக் கண்டறிகிறது. வன்தட்டில் பாதிப்படைந்த (bad sectors) பகுதிகள் இருப்பின் அவ்வாறான் இடங்களில் பைல்கள் சேமிக்கப்படாது தடுக்கிறது.

  1. Disk Defragmenter வட்டு ஒழுங்கமைப்பான் /

வன்தட்டில் பைல் ஒன்றை சேமிக்கும் போது அந்த பைலுக்குரிய பகுதிகள் அனைத்தும் ஒரே இடத்தில் சேமிக்கபடுவதில்லை. வன் தட்டு வேகமாக சுழலும் போது ஒரு ஃபைலுக்குரிய பகுதிகள் சிதறலாக (fragments) ஆங்காங்கே சேமிக்கப்பட்டு விடும்.

நாம் ஒரு பைலை திறக்க முயலும் போது அந்த பைலுக்குரிய பகுதிகள் அனைத்தையும் தேடி எடுத்து ஒன்று சேர்த்தே பணிச்செயல் முறைமை எமக்குக் காண்பிக்கிறது.

நாளாந்தம் இவ்வாறு பைல்கள் சேமிக்கப் படும் போது வன்தட்டில் அதிக  fragments உருவாகுகின்றன. அதனால் அவற்றைத் தேடிக் கண்டு பிடிப்பதில் பணிச்செயல் முறைமை சிரமத்தை எதிர் நோக்கும்.

இதனால் கணினியின் வேகம் மந்தமடைவதை உணரலாம். இதனைத் தவிர்ப்பதற்கு குறித்த கால இடை வெளிகளில் வன் தட்டை Defragment செய்தல் அவசியம்.

இதன் காரணமாக பைல் பகுதிகள் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டு கணினி மறுபடி வேகமாக இயங்க ஆரம்பிக்கும்.  

  1. Device Driver சாதன இயக்கி

கணினியில் பொருத்தப்படும் அனைத்து வன்பொருள் சாதனங்களும் இயங்கும் விதம் குறித்து பணிச்செயல் முறைமையானது அறிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கணினியால் குறித்த அந்த சாதனத்தை இயக்க முடியாது. நாம் பொருத்த விரும்பும் வன்பொருள் சாதனத்தை வாங்கும் போதே அச்சாதனம் எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றிய விவரங்களை ஒரு சிடியில் மென்பொருள் வடிவில் தரப்படும் அதனையே டீவைஸ் ட்ரைவர் எனப்படுகிறது. 

Application Software  பயன்பாட்டு மென்பொருள்

ஒரு கணினிப் பயனருக்குத் தேவையான வேலைகளைக் கணினி மூலம் செய்து கொள்ள உதவும் மென்பொருள்களைப்  பயன் பாட்டு மென்பொருள் எனப்படும். பயனரின் தேவைக் கேற்ப ஒரு கணினியில் விரும்பிய அளவு பயன்பாட்டு மென்பொருள்களை நிறுவிக் (install) கொள்ளலாம்.

பொதி செய்த மென்பொருள் Packages / Off the Shelf Software

கணினிப் பயனர்களின் பொதுவான தேவைக்கென உருவாக்கப் படும் மென்பொருள்களை பொதிசெய்த மென்பொருள்கள் எனப்படும்.  இவை நாம் துணிக் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் தைத்த ஆடை (ready-made) வாங்குவது  போன்ற செயலுக்கு ஒத்தது.

Programming Languages நிரலாக்க மொழிகள்

எந்தவொரு கணினி  செய்நிரலும் / மென்பொருளும் Programming Language மூலமே உருவாக்கப் படுகின்றன. உதாரணம் Visual Basic, Java, C, C++, C#

மேலே உதாரணமாகக் குறிப்பிடப்பட்ட  இக்கணினி மொழிகள் உயர் மட்டக் கணினி மொழிகள் எனப்படும்.

உயர் மட்டக் கணினி மொழிகள் ஆங்கில மொழி போன்ற மனித மொழியுடன் நெருக்கமானவையாகும்.

இவற்றின் மூலம் இலகுவாக கணினி செய்நிரல்களை உருவாக்கலாம். எனினும் உயர் மட்ட மொழிகளில் எழுதப்பட்ட செய்நிரல்களை கணினியால் புரிந்து கொள்ள முடியாது.

ஏனெனில் கணினியால் புரிந்து கொள்ளக் கூடிய ஒரே மொழி (Machine Language) இயந்திர மொழியாகும். இது 0, 1 எனும் இலக்கங்களால் ஆன குறியீடுகளைக் கொண்டிருக்கும்.

இயந்திர மொழியானது தாழ் மட்ட மொழி எனவும்  (Low Level Language) அழைக்கப்படும்.

Low Level Language
கீழ் நிலை மொழிகள்
High Level Language
உயர் மட்ட மொழிகள்
Machine Language
Assembly Language
FORTRAN, COBOL, Pascal, Visual Basic, Java, C, C++, C#, Python, Ruby

(HTML, ASP.net, PHP, CSS, JavaScript  போன்ற மொழிகள்  Web programming Languages (scripting languages) எனப்படும். இவை இணைய தளங்கள வடிவமைக்கவே பயன் படுகின்றன. இவற்றின் மூலம் மென்பொருள்கள் உருவாக்கப் படுவதில்லை)

மொழி மாற்றிகள் Language Translators

கம்பைலர் (Compiler) தொகுப்பிஉயர் மட்ட மொழியில் எழுதிய மூலநிரலை (Source Code)  கணினி புரிந்து கொள்ளும் வகையில் முழுமையாக ஒரே தடவையில் இயந்திர மொழிக்கு (machine code) மாற்றும்  
இண்டர்ப்ரீட்டர் (Interpreter)
மொழி மாற்றி
உயர் மட்ட மொழியில் எழுதப்பட்ட ஒரு மூல நிரலை கணினி புரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு வரியாக இயந்திர மொழிக்கு மாற்றும்  

Tailor-made Software விசேட தேவைகளுக்குரிய மென்பொருள்

ஒரு தனி நபர் அல்லது நிறுவனம் தனது தேவைக்கு பொதிகள் பொருத்தமற்றது என உணர்ந்து தமது தேவைக்கேற்றவாறு தாங்களே மென்பொருளை உருவாக்கிக் கொள்வதாகும். இது தையல் காரிடம் போய் எமது உடல் அளவுக்கேற்றவாறு எமது ஆடைகளை தைத்துக் கொள்வது போன்றதாகும்.. 

உதாரணம்
வங்கிகளில் பயன் பாட்டிலுள்ள கணக்கீட்டு மென்பொருள் (Accounting System),
நூல் நிலைய முகாமை மென்பொருள் (Library Management System)பாடசாலை முகாமை மென்பொருள் School Management System

Commercial Software / Proprietary Software
வணிக நோக்கில் உருவாக்கப் படும் மென்பொருள்கள்.

பொதுவாக நாம் பயன் படுத்தும் அனேகமான மென்பொருள்கள் வணிக நோக்கில் உருவாக்கப்படுபவையாகும். இவற்றின் விலை அதிகமாக இருப்பதோடு மூல நிரல்களையும்  (source code) பார்வையிட முடியாது.  

MS-Windows, Adobe Photoshop, Corel Draw, MS-Office

Open Source Software திறந்த மூல மென்பொருள்கள்

வணிக நோக்கில் உருவாக்கப்படும் மென்பொருள்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருப்பதனால் அவற்றை எல்லோராலும் நுகர முடிவதில்லை.

இதன் காரணமாக கணினிப் பயன்பாடு ஒரு சாராரிடம் அறவே அற்றுப் போகும் நிலை உருவாகும் அல்லது தவறான வழிகளில் அவற்றைப் பெற முயல்வர்.

இவ்வாறான தீய விளைவுகள் ஏற்படா வண்ணம் சமூகத்தின் எம்மட்டத்தினரும் எதுவித தடையுமின்றி கணினியின் உச்ச பயனைப் பெற இலவசமாகவே வழங்கப்படும் மென்பொருள்களே திறந்த மூல மென்பொருள்களாகும்.

திறந்த மூல மென்பொருள்கள் உலகெங்குமுள்ள மென்பொருளாக்க வல்லுனர்களால் அவர்களின் ஓய்வு நேரங்களில் எவ்வித கட்டணமும் பெறாமல் இலவசமாகவே இணையத்தினூடாக உருவாக்கப்படுகின்றன.

எவரும் இவற்றை இணையத்தினூடு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தடையின்றிப் பயன் படுத்தலாம்.

பிரதி செய்யலாம். எனினும் இவற்றை எவரும் விற்பனை செய்ய முடியாது.

வணிக மென்பொருள்கள் போலன்றி இவற்றின் மூல நிரல்களையும்  (source code) பார்வையிடலாம்.

விரும்பிய எவரும் மேம்படுத்தலாம். மூல நிரல்களை எவரும் பார்வையிட முடிவதனாலும் வணிக மென்பொருள்களில் போன்று கட்டுப்பாடுகள் இல்லாமல் இருப்பதாலும் இவை திறந்த மூல மென்பொருள்  (Open Source) அல்லது கட்டற்ற மென்பொருள் எனப்படுகின்றன்

உதாரணம். :
Linux, Ubuntu, Open Office, Mozilla Firefox, VLC Media Player, Audacity, PHP, mysql

உதாரணம். : Linux, Ubuntu, Open Office, Mozilla Firefox, VLC Media Player, Audacity, PHP, mysql

Word Processing software                              சொல் முறை வழிப்படுத்திMS-Word, Open Office-Writer,
Canva, Google Docs
Data Base Management System                     தரவுத்தள முகாமைMS-Access, Open Office Base,
Oracle, mysql, dbaseIII+,
Presentation Software                                     நிகழ்த்துகை மென்பொருள்MS-Power Point, Open Office- Impress,
Canva, Google Slides
Spreadsheet Software                                     விரிதாள் மென்பொருள்MS-Excel, Open Office-Calc, Tally,
Quick Book, MYOB, Google Sheet
Graphic Designing Software                           வரைகலை மென்பொருள்Corel Draw, Adobe Photoshop, Illustrator,
3D Studio Max. Canva, Affinity
Desktop Publishing Software                          பதிப்புத்துறை சார் மென்பொருள்Affinity, Corel Draw, In Design, Canva
Educational Software  
கல்வி சார் மென்பொருள்
Google Classroom, Quizlet, Edmodo, Schoology
Computer Aided Designing / Drafting  (CAD) கணினி மூலம் வரைதல்Auto Cad,  Fusion 360,  TinkerCAD
Web Designing                                               இணைய தள வடிவமைப்புMS-Front Page, Adobe Dreamviewer,

(Content Management System-CMS)
WordPress, Joomla, Drupal
Web Browsers                                                இணைய உலாவிGoogle Chrome, Opera, Edge,
Mozilla Firefox, Planet
Video Editing Software
காணொளி திருத்தி
Adobe Premiere, Filmora,
CapCut, After Effects,
Photo Editing Software           
புகைப்பட திருத்தி
Adobe Photoshop, Affinity, Gimp,
Animation Software
அசைவூட்டல் மென்பொருள்
Blender, After Effects, Adobe Animate
Audio Editing ஒலிக் கோப்பு திருத்தி Adobe Audition, Audacity
Media Player  பல்லூடக இயக்கிகள்Windows Media Player, VLC Media Player

About Anoof Sir

Check Also

YouTube Premium now available in Sri Lanka

யூடியூப் பிரீமியம் வசதி தற்போது இலங்கையிலும் யூடியூப் தளத்தின் சந்தா சேவையான பிரீமியம் தற்போது இலங்கையிலும் கிடைக்கிறது. Netflix மற்றும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *