InfotechTamil

Input Devices – உள்ளீட்டுக் கருவிகள்

கணினிக்குத் தரவுகளை உள்ளீடு செய்யப் பயன் படும் சாதனங்கள் உள்ளீட்டுக் கருவிகள்  எனப்படுகின்றன.

கணினிக்குத் தரவுகளை உள்ளீடு செய்யப் பயன் படும் பொதுவான பயன் பாட்டிலுல்ள  ஒரு கருவி சாவிப்பலகையாகும். அது அமைப்பில் தட்டெழுத்துப்பொறியின் சாவிப்பலகை போல் இருந்தாலும் அதில் மேலதிகச் செயற்பாடுகளுக்காக மேலதிக சாவிகள் உள்ளன. பொதுவாகச் சாவிப்பலகைகளில்  101 / 102 தொடக்கம் 104 அல்லது 108 வரையான சாவிகள உள்ளன. சாவிப்பலகையில் ஆங்கில் எழுத்துக்களின் அமைவிடத்தைப் பொருத்து  QWERTY / DVORAK  என இரு சாவிப் பலகை வகைகள் உள்ளன. எனினும் QWERTY  வகை சாவிப்பலகைகளே அதிகம் பயன் பாட்டிலுள்ளன.

சுட்டியானது கணினியின் பொதுவான ஒரு உள்ளீட்டு கருவியாகும். இது ஒரு சுட்டும் கருவி (pointing device) எனவும் அழைக்கப்படும்.  

சுட்டிகளில mechanical mouse (ball mouse), optical mouse, laser mouse  எனப் பல வகைகள் உள்ளன. எனினும் தற்போது optical mouse என்பதே அதிக பயன் பாட்டிலுள்ளது.

Left mouse button, right mouse button, scroll button என மூன்று பட்டன்கள் காணப்படும்

Click(left), Right click, Double click, Scrolling, Pointing, Drag & drop என்பன மவுஸ் மூலம்  (Mouse actions) செயற்பாடுகளாகும்.

தற்போது வயரில்லா (wireless mouse) சுட்டிகளும் பயன் பாட்டிலுள்ளன.

Exit mobile version