2008
3. சாரதிகளுக்குப் பெயர் தெருவொன்றில் வாகனங்களின் பயன நிலைமைகள் பற்றிய தகவல்களை வழங்கும் முறைமையொன்று தொடர்பான் சுருக்க விவரம் கிழே தரப்பட்டுள்ளன.
இம்முறைமை பெருந்தெருவொன்றில் ஒரு குறித்த பிரதேசத்தில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை அவற்றின் கதி போன்ற மூலத் தரவுகளைச் (raw data) சேகரித்து. அவற்றை அத்தெருவுக்கு அருகில் உள்ள ஒரு கணினிக்குச் செலுத்துகின்றது (transmit).
கணினி அத்தகவல்களைப் பகுப்பாய்வு செய்த பின் வாகன நெரிசல் காணப்படும் சந்தர்ப்பங்களில் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துவதற்கு உதவிபுரியும் வகையில் சாரதிகளுக்கு பயன்மிக்க தகவல்களை வழங்குகிறது.”
இப்பந்தியினால் மிக நன்கு விளக்கப்படுவது
(1) நிகழ்நேர (real time) முறைமை
(2) தொகுதி முறைவழியாக்க (batch processing) முறைமை.
(3) பின்தொட ((offline) முறைமை
(4) தன்னியக்க (automated) முறைமை
32. முறைமை பேணலில் (System maintenance) அடங்காதது பின்வருவனவற்றுள் எது?
(1) மென்பொருள் மேம்படுத்தல் (upgrading)
(2) ஆற்றுகை (performance) மேம்படுத்தல்
(3) முறைமையில் பிரதான மாற்றங்கள் செய்தல்
(4) சிறு வழுக்களைத் திருத்துதல்
நடமாடும் வைத்தியம் என்பது துரிதமாக வைத்திய சிகிச்சை தேவைப்படுவோருக்காக அவசர சேவைகளை வழங்கும் நோயாளர் வண்டிச் சேவையாகும். தற்போது அவர்கள் கணினித் தகவல் முறைமையொன்றினைப் பயன்படுத்துவதில்லை.
அச்சேவையைப் பெற எதிர்பார்ப்போர் அங்கு தம்மைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். நடமாடும் வைத்திய’ சேவையின் உதவி தேவைப்படுவோர் உதவிச் சேவை முகாமையாளருடன்’ தொடர்பு கொள்ள வேண்டும்.
குறுகிய உரையாடலின் பின்னர் அவர் நோயாளி இருக்கும் இடத்துக்கு வைத்தியருடனும் ஒரு தாதியுடனும் நோயாளர் வண்டியை அனுப்பி வைப்பார். பின்னர் அவசர சிகிச்சை வழங்கப்பட்டு நோயாளி அருகே உள்ள வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுவார்.
(i) இச்சேவைகைளை வழங்குவதற்கு உதவிச் சேவை முகாமையாளருக்குத் தேவையான தரவுகளையும் தகவல்களையும் வெவ்வேறாகப் பட்டியற்படுத்துக.
(ii) பணச் சிட்டையைத் தயாரிப்பதற்குத் தேவையான மேலதிக தரவுகளைப் பட்டியற்படுத்துக.
(iii) கணினித் தகவல் முறைமையொன்றைப் பயன்படுத்துவதால் அவர்களுக்குக் கிடைக்கும் பிரதிபலன்கள் எவை எனக் குறிப்பிடுக.
2009
33. தரப்பட்டுள்ள முறைமையொன்றின் இயலுமை (feasibility) ஆய்வு யாரால் நடத்தப்படும்?
(1) குறித்த முறைமையின் பயனர்களால்
(2) நிறுவன முகாமையாளர்களால்
(3) நிறுவன முகாமையாளர்களின் அறிவுறுத்தல்களின்படி முறைமைப் பகுப்பாய்வாளரால்
4) முறைமையைப் பயன்படுத்த எதிர்பார்க்கும் பயனர்கள், நிறுவன முகாமையாளர்கள் ஆகிய இரு பிரிவினரதும் அறிவுறுத்தல்களின்படி சிரேட்ட நிரலாளர்களால்
34. வணிக நிறுவனமொன்றில் செய்பணி மட்டத்தில் பயன்படும் கணினித் தகவல் தொகுதி எது?
(1) தீர்வுகாண் துணை முறைமை (Decision Support System)
(2) பரிமாற்ற முறைவழியாக்க முறைமை (Transaction Processing System)
(3) முகாமைத்துவ தகவல் முறைமை (Management Information System)
(4) தகவல் முகாமைத்துவ முறைமை (Information Management System)
2010
29. முறைமை அபிவிருத்தி ஆயுள் வட்டத்தைப் (System Development Life Cycle – SDLC) பயன்படுத்தி ஒரு தகவல் முறைமையை (information system) விருத்தி செய்யும் போது பின்வருவனவற்றில் எது இடமிருந்து வலமாகச் செயற்பாடுகளின் (activities) சரியான தொடரியாகும் (sequence)?
(1) சாத்தியக்கூற்றுக் கற்கை (feasibility study) முறைமை வடிவமைப்பு (system design) – முறைமைப் பகுப்பாய்வு (system analysis) – முறைமையை நடைமுறைப்படுத்தல் (system implementation)
(2) முறைமைப் பகுப்பாய்வு – முறைமையை நடைமுறைப்படுத்தல் – முறைமை வடிவமைப்பு – சாத்தியக்கூற்றுக் கற்கை
(3) சாத்தியக்கூற்றுக் கற்கை முறைமை வடிவமைப்பு – முறைமையை நடைமுறைப்படுத்தல் – முறைமைப் பகுப்பாய்வு
(4) சாத்தியக்கூற்றுக் கற்கை முறைமைப் பகுப்பாய்வு முறைமை வடிவமைப்பு – முறைமையை நடைமுறைப்படுத்தல்
30. கணினிப்படுத்தலுக்குப் (computerization) பின்வருவனவற்றில் எது உகந்ததன்று?
(1) ஒரு பாடசாலையில் மாணவர் அனுமதிகள்
(2) பாடசாலை நூலகம்
(3) ஒரு பரீட்சையில் கட்டுரை வகை விடைகளுக்குப் புள்ளி வழங்குதல்
(4) விடைத்தாள்களுக்குப் புள்ளிகளை வழங்கிய பின்னர் மாணவர் சராசரிகளையும் தரங்களையும் கணினிப்படுத்தல்
31. பின்வரும் செயற்பாடுகளைக் கருதுக.
A- நூலகத்திற்குப் பொறுப்பான ஆசிரியரைப் பேட்டி காணல்
B- நூலகத்தின் வரலாற்றையும் அது 20 ஆண்டுகளுக்கு முன்னர் தாபிக்கப்பட்ட விதத்தையும் விவரிக்கும் ஒரு
சஞ்சிகைக் கட்டுரை (ஆவணம்)
C- நூலகம் மாணவர்களினால் எங்ஙனம் பயன்படுத்தப்படுகின்றது என்பதை அவதானித்தல்
ஒரு பாடசாலைக்கான நூலக முகாமை முறைமையை விருத்தி செய்வதில் உள்ள தேவைகளைச் சேகரிப்பதற்கு மேலுள்ளவற்றில் எதனை/ எவற்றைப் பயன்படுத்தலாம்?
(1) A மாத்திரம்.
(2) C மாத்திரம்.
(3) A, C ஆகியன மாத்திரம்.
(4) A, B, C ஆகிய எல்லாம்.
(x) முறைமை அபிவிருத்தி ஆயுள் வட்டத்தைப் (SDLC) பயன்படுத்தி ஒரு பாடசாலை நூலகத்திற்கான தகவல் முறைமையை உருவாக்கும் கொள்பணி உம்மிடம் தரப்பட்டுள்ளதெனக் கொள்க.
இக்கொள்பணிக்காகப் பயன்படுத்தப்படும் SDLC இன் முதல் இரு படிமுறைகளைச் சுருக்கமாக விவரிக்க.
வித்தியாலோக வித்தியாலயத்தின் நூலகத்தில் பல நூல்கள் உள்ளன. சில நூல்களில் பல பிரதிகள் உள்ளன. மாணவர்கள் ஒரு தடவை இரு நூல்களை இரு வாரங்களுக்கு இரவலாகப் பெறலாம்.
(i) ஒரு நூல் தொடர்பாக நூலகம் தேக்கிவைக்க வேண்டிய தரவுகளின் இரு உருப்படிகளை எழுதுக.
(ii) மாணவன் ஒருவன் ஒரு நூலை இரவலாகப் பெறும்போது நூலகப் பணியாளர் பதிவு செய்ய வேண்டிய தரவுகளின் மூன்று அத்தியாவசிய உருப்படிகளை எழுதுக.
(iii) நூலக முறைமையைப் பயன்படுத்தித் தரவுக்கும் தகவலுக்குமிடையே உள்ள வேறுபாட்டை விளக்குக. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் உதாரணம் தருக.
(iv) நூலக முறைமை தற்போது கையின் மூலம் மேற்கொள்ளப்படுகிறதெனக் கொண்டு நூலகத்தைக் கணினிப் படுத்துவதற்கு ICT ஐப் பயன்படுத்துவதன் இரு அனுகூலங்களை எழுதுக.
2011
28. முறைமைச் செயற்றிறன் (System functionality), பயனியின் தேவைகளை நிறைவேற்றல் (meeting user requirements), வளங்களின் பயனுறுதிவாய்ந்த பயன்பாடு (effective use of resources), கிரயப் பயனுறுதி (cost effectiveness) ஆகியன முறைமை அபிவிருத்தி ஆயுள் வட்டத்தின் (SDLC) ………………… அவத்தையில் (phase) கருதப்படுகின்றன.
மேற்குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்குப் பின்வருவனவற்றில் எது மிகவும் உகந்தது?
(1) முறைமைப் பகுப்பாய்வு (system analysis)
(2) முறைமை வடிவமைப்பு (system design)
(3) செய்முறைப்படுத்தல் (implementation)
(4) இயலுமை ஆய்வு (feasibility study)
29. முறைமை அபிவிருத்தியில் பயன்படுத்தப்படும் நேரடிச் செய்முறைப்படுத்தல் (direct implementation) என்பதைப்
பின்வருவனவற்றில் எது மிகச் சிறந்த விதத்தில் விவரிக்கின்றது?
(1) புதிய முறைமை ஏற்கெனவே உள்ள முறைமையுடன் அறிமுகஞ் செய்யப்படும்.
(2) ஒரு கூறு செய்முறைப்படுத்தப்பட்டு, அது வெற்றிகரமானதெனின், மற்றைய கூறுகள் செய்முறைப்படுத்தப்படும்.
(3) கைமுறை (manual) முறைமையின் செய்பணி நிற்பாட்டப்பட்டு, புதிய முறைமை புகுத்தப்படும்.
(4) புதிய முறைமை பகுதிகளாகச் செய்முறைப்படுத்தப்படும்.
முறைமை அபிவிருத்திச் செயற்பாடுகள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A – வன்பொருளிலும் மென்பொருளிலும் மாற்றங்களைச் செய்தல்
B – பயனுறுதி வாய்ந்த விதத்தில் வழிப்படுத்திய பின்னர் முறைமையில் கண்டுபிடிக்கப்படும் வழுக்களைத் திருத்தல்
C – முறைமைக்குப் புதிய பயனித் தேவைகளை (user requirements) அறிமுகஞ் செய்தல்
முறைமை அபிவிருத்தி ஆயுள் வட்டத்தின் (life cycle) பராமரிப்பு அவத்தையுடன் (maintenance phase) மேற்குறித்த எச்செயற்பாடுகள் சம்பந்தப்பட்டுள்ளன ?
(1) A, B ஆகியன மாத்திரம்
(2) A, C ஆகியன மாத்திரம்
(3) B, C ஆகியன மாத்திரம்
(4) A, B, C ஆகிய எல்லாம்
(ii) உமது பாடசாலையில் தற்போது உள்ள நூலகத் தகவல் முறைமையை வலை அடிப்படை. முறைமையினால் பிரதியிடுவதற்கு (replace) நீர் திட்டமிட்டுள்ளீரெனக் கொள்க.
(a) புதிய முறைமையின் இயல் தகவை (feasibility) உறுதிப்படுத்துவதற்கு நீர் கருதும் மூன்று அம்சங்களை எழுதுக.
(b) நேரடிச் செய்முறைப்படுத்தல் (direct implementation), சமாந்தரச் செய்முறைப்படுத்தல் (parallel implementation) ஆகியவற்றில் புதிய நூலக முறைமைக்கு மிகப் பொருத்தமான செய்முறைப்படுத்தல் யாது? உமது விடையை நியாயப்படுத்துக
2012
32. பின்வருவனவற்றில் எது முறைமை அபிவிருத்தி ஆயுள் வட்டத்தில் (SDLC) தரப்பட்டுள்ள கட்ட நிலைகளின் (phases) சரியான வரிசையைக் காட்டுகின்றது ?
(1) வடிவமைப்பு (design), குறிமுறை (coding), சோதனை (testing)
(2) வடிவமைப்பு, இயலுமைக் கற்கை (feasibility study), பராமரிப்பு (maintenance)
(3) வடிவமைப்பு, சோதனை, இயலுமைக் கற்கை
(4) சோதனை, பராமரிப்பு, இயலுமைக் கற்கை
பாடசாலை ஒன்றில் ஒரு புதிய தன்னியக்க (automated) நூலகத் தகவல் முறைமையை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.
அதிபர் தற்போதைய கைமுறை (manual) முறைமையை முற்றாக நிற்பாட்டி இப்புதிய முறை மையை நேரடியாகத் தொடக்குதல் அவ்வளவு பாது காப்பானதன்றென நம்புகின்றார்.
பின்வருவனவற்றில் எது அதிபரின் கரிசனையைக் குறித்து நிற்கும் பொருத்தமான முறைமை மாற்றலாகும்?
(1) நேர் (direct) அல்லது கட்ட நிலை (phased)
(2) நேர் (direct) அல்லது மூலவகைமாதிரி (prototype)
(3) சமாந்தர (parallel) அல்லது கட்டநிலை
(4) சமாந்தர அல்லது மூலவகைமாதிரி
7. (ii) ரவி என்பவர் பின்வரும் வரிப்படத்தில் காணப்படுகின்றவாறு முறைமை அபிவிருத்தி ஆயுள் வட்ட (SDLC) முறையியலைப் பயன்படுத்தித் தனது பாடசாலைக்கு ஒரு புதிய நூலகத் தகவல் முறைமையை நடைமுறைப் படுத்தத் திட்டமிட்டுள்ளார்.
(a) X, Y, Z என்னும் கட்ட நிலைகளின் (phases) பெயர்களை எழுதுக.
(b) இயலுமை ஆய்வுக் (Feasibility Study) கட்ட நிலையின் போது அவர் மதிப்பிட விரும்பும் இயலுமையின் இரு வகைகளைப் பட்டியற்படுத்துக.
(c) முறைமைப் பகுப்புக் கட்டநிலையின் போது ரவி உரிய தகவல்களைச் சேகரிக்கப் பயன்படுத்தத்தக்க மூன்று முறைகளைப் பட்டியற்படுத்துக.
2013
20. முறைமை அபிவிருத்தி ஆயுள் வட்டத்தின் (SDLC) படிமுறைகளான வடி வமைத்தல் (design) மற்றும் குறிமுறைப்படுத்தல் (coding) நிலைகளுக்குரிய இலக்காக அமையாதது பின்வருவனவற்றுள் எது?
(1) செய்நிரல்களை எழுதுதல்
2) பொருத்தமான இடைமுகப்புகளை உருவாக்கல்
(3) பயனர்களின் தேவைப்பாடுகளை அடையாளம் காணல்
(4) செய்நிரலாக்கும் மொழியைத் தெரிவு செய்தல்
7. (i) கணினியை அடிப்படையாகக் கொண்ட நூலக தகவல் முறைமை யொன்றைத் தனது பாடசாலைக்கு விருத்தி செய்யுமாறு ஆசிரியரால் நஸீர் கேட்கப்பட்டுள்ளார்.
நூலகத் தகவல் முறைமையினை உருவாக்குவதற்காக நஸீர் சில செயற்பாடுகளை P-U வரை பட்டியற்படுத்தினான்.
P- முறைமையின் இலக்குகளையும் தேவைப்பாடுகளையும் கண்டறிதல்
Q – புதிய நூலகத் தகவல் முறைமை அபிவிருத்தியின் போது சாத்திய வளத்தைச் (feasibility) சரிபார்த்தல்
R – தற்போதுள்ள கைமுறை (manual) முறைமையினைப் பல்வேறு தரவு சேகரித்தல் நுட்பங்களைப் பயன்படுத்திக் கற்றல்
S- நூலகச் செயற்பாடுகளை முகாமை செய்யக்கூடிய சிறந்த முறைமை ஒன்றை வடிவமைத்தல்
T – தெரிவு செய்த செய்நிரல் மொழியைப் பயன்படுத்திக் கணினி செய்நிரலை எழுதுதல்
U- தவறுகளைக் கண்டறிய பரீட்சித்து புதிய நூலகத் தகவல் முறைமையினை வெளியிடுதல்
(a) முன்வைக்கப்பட்ட தகவல் முறைமையில் நஸீர் கருத்திற் கொள்ளவேண்டிய இரண்டு வகையான சாத்தியக்கூறுகளை எழுதுக.
(b) முறைமை அபிவிருத்தி ஆய்வு வட்டத்தில் (SDLC) R இனால் முகப்பு அடையாளமிடப்பட்ட செயற்பாட்டுப் படிமுறையைப் (stage) பெயரிடுக.
(c) R என முகப்பு அடையாளமிடப்பட்ட செயற்பாட்டைக் கொண்டு செல்ல நஸீர் பயன்படுத்தும் இரண்டு தரவு சேகரித்தல் நுட்பங்களை எழுதுக.
(d) T என முகப்பு அடையாளமிடப்பட்ட செயற்பாடானது முறைமை அபிவிருத்தி ஆயுள் வட்டத்தின் (SDLC) எப் படிமுறையைச் சேர்ந்தது எனப் பெயரிடுக.
(e) U என முகப்பு அடையாளமிடப்பட்ட படிமுறையை முடித்த பின்னர் நஸீர் செய்ய வேண்டிய செயற்பாட்டை எழுதுக.
(ii) ஊடகம் தொடர்பில் புராதன காலத்தில் நிறுவனங்கள் அச்சுப்பிரதி செய்த ஆவணங்களையும் தொலைபேசிகளையும் உபயோகித்தன. தற்காலத்தில் பல நிறுவனங்கள் தொடர்பாடலுக்கு மின்னஞ்சலையும் ஏனைய இணைய அடிப்படைச் சேவைகளையும் உபயோகிக்கின்றன.
(a) மின்னஞ்சலைப் பாவிப்பதன் இரண்டு அனுகூலங்களை எழுதுக.
(b) மின்னஞ்சலைப் பாவிப்பதன் இரண்டு பிரதிகூலங்களை எழுதுக.
(c) மின்னஞ்சலைத் தவிர நிறுவனங்கள் தொடர்பாடலுக்கு பயன்படுத்தும் ஏனைய இரு இணைய அடிப்படையிலான தொடர்பாடல் முறைகளை எழுதுக.
2014
31. கீழே தரப்பட்ட முற்றுப்பெறாத வாக்கியத்தைக் கருதுக:
………….. என்பது முறைமை விருத்தி வாழ்க்கை வட்டத்தின் (SDLC) ஒரு முக்கிய படிமுறையாகும்.
மேற்குறித்த வாக்கியத்தின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு மிகப் பொருத்தமானது பின்வருவனவற்றுள் எது?
(1) நேர்முகத்தேர்வினை நடாத்துதல்
(2) குறிமுறையைப் பரீட்சித்தலும் (testing) வழு நீக்குதலும் (debugging)
(3) பரீட்சார்த்த த் தரவுகளைச் (test data) சேகரித்தல்
(4) பயனர் கைமுறையிலான குறிப்பை எழுதுதல் 32. உங்கள் பாடசாலையில் நடைமுறையிலுள்ள கைமுறையிலான (manual) மாணவர் நிர்வாக முறைமையை தன்னியக்க
முறைமையாக்கிய பின்பு, சமாந்தர அமுலாக்கலுக்குப் பதிலாக நேரடி அமுலாக்கல் முறை முன்மொழியப்பட்டது. பின்வருவனவற்றுள் நேரடி அமுலாக்கல் பற்றிய சரியான கூற்று எது ? (1) சமாந்தர அமுலாக்கலை விட நேரடி அமுலாக்கலுக்கு அதிக தொகை செலவாகும். (2) நேரடி அமுலாக்கலுக்குத் தேவையான மனித வலு சமாந்தர அமுலாக்கலுக்குத் தேவையான மனித வலுவை
விட அதிகமாகும். (3) தன்னியக்க முறைமையில் பிரச்சினைகள் தோன்றுமிடத்து கைமுறை முறைமைக்கு மீண்டும் செல்லுதல் கடினமாகும். (4) நேரடி அமுலாக்கலுக்குச் சமாந்தர அமுலாக்கலை விட பாடசாலை காரியாலயத்தில் அதிகளவு பௌதிக இடம் தேவை. உங்கள் பாடசாலை அதன் நூலக நடவடிக்கைகளைத் தன்னியக்க முறைமையாக்கத் தீர்மானித்துள்ளது. புதிய முறைமையின் தேவைப்பாடுகளை சேகரிக்கும் குழுவில் நீங்களும் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளீர்கள். இந்நோக்கத்திற்காக உங்கள் குழுவின் அங்கத்தவரொருவர் கீழ்வரும் நுட்பமுறைகளை (techniques) முன்மொழிகிறார்.
A- நேர்முகத்தேர்வினை நடாத்துதல் B- வினாக்கொத்தொன்றை விநியோகித்தல்
C- ஆவணங்களை அவதானித்தல் மேற்குறித்த நுட்பமுறைகளில் தகவல்களைச் சேகரிப்பதற்கு ஏற்றது எது ? (1) A, B மாத்திரம் (2) A, C மாத்திரம் (3) B, C மாத்திரம் (4) A, B, C ஆகிய எல்லாம்
7. (i) முறைமை விருத்தி வாழ்க்கை வட்டம் (System Development Life Cycle) தொடர்பான கூற்றுகள் கீழே அட்டவணையில் X, Y நிரல்களில் தரப்பட்டுள்ளன.
1. ஒரு முறைமையின் பண்பு
A. ஒரு முறைமையில் பரீட்சித்தல், வழு நீக்குதல் (testing
and debugging) இன் இறுதிப் படிமுறை
2. முறைமைக்கு ஓர் உதாரணம் B. வாடிக்கையாளருடன் கலந்துரையாடுதல் 3. தகவல் சேகரிக்கும் பிரதான நுட்ப | C. தற்போதைய படிமுறை வெற்றிகரமாக நிறைவேறினால் முறை மட்டுமே அடுத்த படிமுறை கருத்தில் கொள்ளப்படும். 4. விளக்க வடிவமைப்பில்
D. இது பல்வேறு பாகங்களால் உருவானது. பயன்படுத்தப்படும் கருவி ஆகும். 5. பயனரின் ஏற்புச் (acceptance) E. பாய்ச்ச ல் கோட்டுப் படம் (flowchart)
சோதனை 6. படிமுறையில் அமைந்த
F. பாடசாலைச் சிற்றுண்டிச்சாலையின் கொடுக்கல்வாங்கல் அமுலாக்கலின் ஒரு நன்மை (phased implementation)
நிரல் X இலுள்ள கூற்றானது நிரல் Y இலுள்ள ஏதாவதொரு கூற்றுக்குப் பொருத்தமானதாக உள்ளது.
நிரல் X இலுள்ள ஒவ்வொரு கூற்றினையும் தெரிவுசெய்து அதற்கொத்த நிரல் Y இலுள்ள கூற்றினை எழுதுக.
உதாரணம் :1 — D
2015
11. முறைமை விருத்தி ஆயுள் வட்டத்தில் இடம்பெறும் சில செயற்பாடுகள்
A தொடக்கம் H வரை முகப்படையாளமிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
A – முறைமை விருத்தி (System development)
B – QUIQILD AW164 (Feasibility study)
C- முறைமையை அமுல்படுத்தல் (System implementation)
D – முறைமையைப் பராமரித்தல் (System maintenance)
E- பிரச்சினையை வரைவிலக்கணப்படுத்தல் (Problen definition)
F- முறைமைப் பகுப்பாய்வு (System analysis)
G- முறைமை வடிவமைப்பு (System design)
H – சோதித்தல் (Testing)
இச்செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சரியான ஒழுங்குமுறை
(1) A, E, H, B, F, G, C, D
(2) C, B, G, F, A, D, E, H
(3) E, B, F, G,A, H, C, D
(4) G, F, B, A,E, C, D, H
2016
15. கடந்த ஐந்து ஆண்டுகளின்போது கண்டறியப்பட்ட டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையைக் காட்டுவதற்கான ஒரு வரைபை வரைவதற்கு நிமலன் ஒரு கணினிச் செய்நிரலை எழுதுகின்றான். செய்நிரலுடன் தொடர்புபட்ட உள்ளீடு , முறைவழி (Process) வெளியீடு ஆகியன கீழே A தொடக்கம் வரைக்குமான சரியான ஒழுங்கின்றிய படிமுறைகளின் மூலம் தரப்பட்டுள்ளன.
A – கடந்த ஐந்து ஆண்டுகளில் இருந்த டெங்கு நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையைக் காட்டும் வரைபைக் காட்சிப்படுத்துக.
B – ஒவ்வோர் ஆண்டிலும் இருந்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை
C – நடப்பு ஆண்டு
D – கடந்த ஐந்து ஆண்டுகளில் இருந்த டெங்கு நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையைக் கணிக்க பின்வருவனவற்றில் எது உள்ளீடு, முறைவழி, வெளியீடு ஆகியவற்றைச் சரியாகக் காட்டுகின்றது?
(1) உள்ளீடுகள் : A உம் B உம் முறைவழி :C வெளியீடு
(2) உள்ளீடுகள் : B உம் உம் முறைவழி 😀 வெளியீடு A
(3) உள்ளீ டு :B முறைவழிகள் : (உம் D உம் வெளியீடு :A
(4) உள்ளீடுகள் : B உம் D உம் முறைவழி A வெளியீடு :
16. முறைமை அபிவிருத்தி ஆயுள் வட்டத்தின் சோதனைப் (Testing) படிமுறையில் பின்வரும் செயற்பாடுகள் அடங்கியுள்ளன.
A – ஏற்புச் (Acceptance) சோதனை B – ஒருங்கிணைப்புச் (Integration) சோதனை
C — முறைமைச் (System) சோதனை
D – அலகுச் (Unit) சோதனை மேற்குறித்த செயற்பாடுகளின் சரியான சோதனை வரிசை யாது ?
(1) A, B, C, D
(2) B, C, D, A
(3) C, D, A, B
(4) D, B, C, A
17. கபொ.த. (சா.தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள் மதிப்பிடுவதற்காக விண்ணப்பிப்பதற்கு தற்போது காணப்படும் கைம்முறைக்கு (Manual) பதிலாக ஒரு புதிய தொடரறா முறைமையை அறிமுகஞ் செய்வதற்கான ஒரு யோசனை உள்ளது. அந்த யோசனையுடன் தொடர்புடைய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A – பிரேரிக்கப்பட்ட முறைமை மீளமதிப்பிடும் செயன்முறையின் வினைத்திறனை மேம்படுத்தும்.
B – பிரேரிக்கப்பட்ட முறைமை மீளமதிப்பிடும் செயன்முறையின் செம்மையை அதிகரிக்கச் செய்யும்.
C- பிரேரிக்கப்பட்ட முறைமை இணையத்திற்குப் பிரவேசிப்பதற்கான வாய்ப்பு இல்லாத பரீட்சார்த்திகளில் ஒரு மறையான விளைவைக் கொண்டிருக்கும். இக்கூற்றுகளில் எவை வலிதானவை?
(1) A, B ஆகியன மாத்திரம்
(2) A, (ஆகியன் மாத்திரம்
(3) B, C ஆகியன மாத்திரம்
(4) A, B, C ஆகிய எல்லாம்
6. (i) உமது பாடசாலை மாணவர்களின் முன்னேற்ற அறிக்கைகளைத் தயாரிப்பதற்குத் தற்போது பயன்படுத்தப்படும் கைம்முறைக்குப் (Manual) பதிலாகக் கணினி அடிப்படையிலான புதிய தன்னியக்க முறைமையொன்றை விருத்தி செய்யுமாறு அதிபர் உம்மிடம் கேட்டுள்ளார் எனக் கொள்க.
முன்னேற்ற அறிக்கைகளின் செம்மை மிக முக்கியமான ஒரு காரணியாகையால் அதற்குத் தகுந்த ஒரு நிறுவுதல் (Deployment) முறையைத் துணியுமாறு உமது தகவல் தொழினுட்ப ஆசிரியர் அறிவுறுத்துகிறார்.
(a) புதிய முறைமையின் தேவைகளை இனங்காண்பதற்குப் பயன்படுத்தத்தக்க தகவல் சேகரிக்கும் ஒரு முறையைக் குறிப்பிடுக.
(b) புதிய முறைமையை விருத்தி செய்வதற்கு நீர்வீழ்ச்சி மாதிரியைப் பயன்படுத்துவதற்கு நீர் தீர்மானித்துள்ளீர்.
(1) நீர்வீழ்ச்சி மாதிரியின் ஒரு வரையறையை குறைபாட்டைத் (Limitation) தருக.
(2) நீர்வீழ்ச்சி மாதிரிக்குப் பதிலாகப் பயன்படுத்தத்தக்க மாற்று விருத்தி அணுகுமுறை ஒன்றை எழுதுக.
(c) (1) இம்முறைக்கு மிகவும் உகந்த நிறுவுதல் முறை யாதாக இருக்கலாம்?
(2) மேலே (c) (1) இற்குரிய உமது விதப்புரைக்கான ஒரு காரணத்தைக் குறிப்பிடுக.
2017
29, 30 ஆகிய வினாக்களுக்கு விடை எழுதுவதற்குப் பின்வரும் பந்தியைப் பயன்படுத்துக.
பாடசாலை நூலகத்திலிருந்து நூல்களை ஒதுக்கி வைத்தல் (reserve) பணியானது இப்போது பயனரால் ஒரு படிவத்தை நிரப்புவதன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.
நூல் கிடைக்கத்தக்கதாக இருக்கும்போது நூலகம் பயனருக்கு ஒரு கடிதத்தை அனுப்புவதன் மூலம் அறிவிக்கின்றது. சிலவேளைகளில் நூலகம் தவறுதலாகப் பிழையான பயனர்களுக்கு அறிவிக்கின்றது. நூலகர் நடப்புக் கையாட்சி முறைமைக்குப் பதிலாக ஒரு புதிய தகவல் முறைமையை அறிமுகஞ் செய்வதற்கு உத்தேசித்துள்ளார்.
இப்புதிய முறைமையில் ஒரு பயனர் ஒரு நூலை நிகழ்நிலை (online) முறையில் ஒதுக்கி வைக்கலாம்.
ஒதுக்கி வைக்கப்பட்ட நூல் இரவலாகப் பெறப்படுவதற்குக் கிடைக்கத்தக்கதாக இருக்கும் போது இம்முறைமையின் மூலம் பயனருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படுகின்றது.
புதிய முறைமை பிரச்சினை எதுவுமின்றித் தொழிற்படுகின்றமை உறுதிப்படுத்தப்படும் வரைக்கும் கையாட்சி முறைமை,
புதிய முறைமை ஆகிய இரண்டும் தொழிற்பட வேண்டுமென நூலகர் தெரிவித்துள்ளார்.
29. நூலகரின் யோசனை தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கருதுக
A – புதிய முறைமை ஒதுக்கி வைக்கும் செயன்முறையின் திறனை மேம்படுத்தும்.
B – புதிய முறைமை ஒதுக்கி வைக்கும் செயன்முறையின் செம்மையை மேம்படுத்தும்.
C – புதிய முறைமை இணையத்தை அணுகமுடியாத பயனர்களில் ஓர் எதிர்மறை விளைவைக் கொண்டிருக்கும். மேற்குறித்த கூற்றுகளில் செல்லுபடியானவை யாவை?
(1) A, B ஆகியன மாத்திரம்
(2) A, C ஆகியன மாத்திரம்
(3) B, C ஆகியன மாத்திரம்
(4) A, B, (ஆகிய எல்லாம்
30. பின்வருவனவற்றில் எது மேற்குறித்த தகவல் முறைமைக்கு நடைமுறைப்படுத்தல் அணுகுகையாக (Implementation) முன்மொழியப்பட்டுள்ளது?
(1) சமாந்தரம் (parallel)
(2) கட்டநிலை (phased)
(3) நேரடி (direct)
(4) வழிகாட்டி (Pilot)
7. நூலகத் தகவல் முறைமையொன்றை விருத்தி செய்தல் தொடர்பான பின்வரும் நிகழ்ச்சியைக் கருதுக:
நூலகர் அதன் செயற்பாடுகளை முகாமிப்பதற்கு ஒரு புதிய கணினிப்படுத்திய தகவல் முறைமையை அறிமுகஞ்செய்வதற்கு முன்மொழிந்தார். அன்வர் புதிய முறைமைக்கான தேவைகளை இனங்கண்டார். பின்னர் அவர் அத்தேவைகளைத் திருப்தியாக்கும் ஒரு முறைமையை வடிவமைத்தார். அன்வர் உருவாக்கிய வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு மாலினி மென்பொருளை விருத்தி செய்தார். புதிய முறைமை பிரச்சினைகளின்றித் தொழிற்படுவதை நிச்சயப்படுத்துவதற்குக் கிருஷ்ணா மென்பொருளைச் சோதித்தார். சமன் நூலகத்தில் இம்முறைமையை நிறுவினார். சில மாதங்களுக்குப் பின்னர் மாலினி இப்புதிய முறைமையில் ஏற்பட்ட சில பிரச்சினைகளைத் தீர்த்து, இரு மேலதிக அறிக்கைகளை அச்சிடுவதற்காக மென்பொருளில் மாற்றங்களையும் மேற்கொண்டார்.
(a) முறைமை விருத்தி ஆயுள் வட்டத்தின் முறைமை விருத்திக் (குறிமுறைப்படுத்தல்) கட்டத்துடன் சம்பந்தப்பட்டுள்ளவர் யார்?
(b) சமனினால் முறைமை விருத்தி ஆயுள் வட்டத்தின் எந்தக் கட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது?
(c) கிருஷ்ணாவினால் முறைமை விருத்தி ஆயுள் வட்டத்தின் எந்தக் கட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது?
d) முன்மொழியப்பட்ட முறைமையின் தேவைகளை விளங்கிக்கொள்வதற்கு அன்வர் பயன்படுத்தத்தக்க வெவ்வேறு முறைகள் இரண்டை எழுதுக.
(e) நூலகத்தில் கிடைக்கத்தக்க கணினிகளில் இந்தப் புதிய முறைமையைத் தொழிற்படச் செய்ய முடியுமாவென அன்வர் மதிப்பிட்டார். இதன்போது மதிப்பீட்டிற்குட்பட்ட இயலுமை யாது?
2018
30. முறைமை அபிவிருத்தி ஆயுள் வட்டத்துடன் (SDLC) தொடர்புபட்ட நீர்வீழ்ச்சி மாதிரியம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது எவை உண்மையானது உண்மையானவை?
A – இம்மாதிரியத்தில் ஒவ்வொரு கட்டநிலையினதும் செயற்பாடுகள் அடுத்த கட்ட நிலையில் உள்ள பணியைத் தொடங்குவதற்கு முன்பாக நிறைவேற்றப்படும்.
B – இம்மாதிரியம் ஓர் ஊடாட்ட விருத்தி மாதிரியத்தில் ஒரு முழு முறைமையாக விருத்தி செய்யப்படும்
ஒரு தொடக்க அடிப்படை முறைமையை விருத்தி செய்வதற்கு உதவுகின்றது. இம்மாதிரியத்தில் பொதுவாகப் பயனர் ஆயுள் வட்டத்தின் முதற் கட்டநிலையிலேயே முறைமையைக் காண்பார்.
(1) A மாத்திரம்
(2) A, B ஆகியன் மாத்திரம்
(3) A, C ஆகியன மாத்திரம்
(4) B, C ஆகியன மாத்திரம்
31. ஒரு புதிய முறைமையை நடைமுறைப்படுத்தும் நிலைமைக்குக் கொண்டு வருவதற்குப் பயன்படுத்தத்தக்க முறைமை நிறுவுதல் முறைகளின் நான்கு வகைகள் கிழே இடப்பக்க நிரலில் A-D முகப்படையாளமிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
வலப் பக்க நிரலில் முகப்படையாளங்கள் P-S இனால் நான்கு வெவ்வேறு நிறுவுதல் முறைகளுக்கான விவரணங்கள் தரப்பட்டுள்ளன.
பின்வரும் எதன் மூலம் A-D நிறுவுதல் முறைமைகள் – விவரணங்களுடன் சரியாகப் பொருந்தச் செய்யப்படும்?
(iii) (a) நீர்வீழ்ச்சி (waterfall) ஆயுள் வட்ட மாதிரியத்திற்கும் ஊடாட்ட விருத்தி ஆயுள் வட்ட மாதிரியத்திற்குமிடையே (iterative incremental life cycle model) உள்ள பிரதான வேறுபாடு யாது?
(b) ஊடாட்ட விருத்தி ஆயுள் வட்ட மாதிரியத்தின் ஓர் அனுகூலத்தை எழுதுக
2019
25. மென்பொருள் முறைமைச் சோதனையின் (software system testing) சரியான ஒழுங்குமுறையை பின்வருவனவற்றுள் எது காட்டுகின்றது?
(1) ஏற்புச் சோதனை, ஒருங்கிணைப்புச் சோதனை, அலகுச் சோதனை, முறைமைச் சோதனை
(2) முறைமைச் சோதனை, ஒருங்கிணைப்புச் சோதனை, ஏற்புச்சோதனை, அலகுச் சோதனை
(3) அலகுச் சோதனை, ஏற்புச் சோதனை, முறைமைச் சோதனை, ஒருங்கிணைப்புச் சோதனை
(4) அலகுச் சோதனை, ஒருங்கிணைப்புச் சோதனை, முறைமைச் சோதனை, ஏற்புச் சோதனை
6. (i) பின்வரும் அட்டவணையானது முறைமை விருத்தி வாழ்க்கை வட்டத்துடன் (SDLC) தொடர்புடைய ஐந்து கட்டங்களையும் ஒவ்வொரு கட்டத்துக்குமான ஒரு செயற்பாட்டையும் காட்டுகின்றது.
A-E வரையுள்ள ஒவ்வொரு முகப்படையாளத்துக்கும் பொருத்தமான பெயரை கீழே முகப்படையாளமிடப்பட்டுள்ள பட்டியலிலிருந்து P-T தெரிவுசெய்க,
உமது விடையாக ஒவ்வொரு அட்டவணை முகப்படையாளத்தையும் அதற்குரிய பட்டியலிலுள்ள முகப்படையாளத்தையும் எழுதுக.
பட்டியல் : {P – தீர்வை குறிமுறையாக்கல், Q – தீர்வை வடிவமைத்தல், R ஒன்றிணைப்பு சோதனை,S – நேரமுகங்காணல், T- முறைமையை பராமரித்தல்}
(ii) உங்களது பாடசாலையின் புத்தக வியாபார நிலையமானது கணினியை அடிப்படையாகக் கொண்ட தகவல் முறைமையை செயற்படுத்துகின்றது. மாணவரொருவர் காகிதாதியை கொள்வனவு செய்யச் செல்லும்போது, விற்பனையாளர் மாணவர் கொள்வனவு செய்யவிருக்கும் ஒவ்வொரு உருப்படியினதும் உருப்படி குறியீட்டையும் உருப்படி எண்ணிக்கையையும் நுழைவு செய்வார் ஆயின் முறைமையானது. ஒவ்வொரு உருப்படிக்குமான மொத்த கிரயத்தையும் மொத்த பற்றுச்சீட்டுப் பெறுமதியையும் கணிப்பிடும். பின்னர் முறைமையானது இறுதிப் பற்றுச்சீட்டை திரையில் காட்சிப்படுத்துவதுடன் அதனை தட்டச்சும் செய்யும். மேற்குறித்த சூழ்நிலைக் காட்சிக்கேற்ப பின்வரும் வினாக்களுக்கு விடை தருக,
(a) உள்ளீடு (input) ஒன்றினை எழுதுக.
(b) முறைவழியாக்கம் {process) ஒன்றினை எழுதுக,
{c) வெளியீடு (output) ஒன்றினை எழுதுக.
(iii) A தொடக்கம் D வரை முகப்படையாளமிடப்பட்ட பின்வரும் ஒவ்வொரு சூழ்நிலைக் காட்சிகளுக்குமான சரியான பதத்தினை கிழே P-T வரை தரப்பட்டுள்ள பட்டியலிலிருந்து இனங்காண்க,
ஒவ்வொரு சூழ்நிலைக்கான முகப்படையாளத்தையும் பொருத்தமான பதத்தையும் எழுதுக.
A – சுனில் என்பவர் நூலக முகாமைத்துவ முறைமையொன்றை விருத்திசெய்கின்றார். அத்தோடுமுறைமை முழுமையாக விருத்தி செய்யப்படும் வரை அவரால் அந்த முறைமையின் எந்தவொரு பகுதியையும் பயன்படுத்த முடியாமலிருக்கும் என ஆசிரியரிடம் கூறினார்.
B – பாடசாலை சிற்றுண்டிச்சாலைக்கு சிறியதொரு தகவல் முறைமையை விருத்தி செய்து முடிந்தவுடன், அஸ்மா நடைமுறையிலுள்ள முறைமையை நிறுத்திவிட்டு புதிய முறைமையை பரப்பிவைப்பதற்கு (deploy) தீர்மானித்தாள்.
C – தொடக்கத்தில் 6 ஆம் தர வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு புதிதான மாணவர் தகவல் முறைமையின் செயற்பாடுகளை கண்காணித்த பின்னர் பாடசாலையின் ஏனைய வகுப்புகளுக்கும் அந்த முறைமையை அறிமுகப்படுத்துவதற்கு அதிபர் திட்டமிடுகிறார்,
D ஆரம்ப முறைமையானது இரண்டு உள்ளீடு திரைகள் (input screen) மற்றும் ஒரு அறிக்கையுடன் விருத்தி செய்யப்பட்டது. பயனரின் (user) பின்னூட்டலின் அடிப்படையில் மேலும் உள்ளீட்டு திரையும் இரண்டு அறிக்கைகளும் முறைமைக்கு சேர்க்கப்பட்டன. பயனரின் பின்னூட்டலுக்கேற்ப மேலதிக அம்சங்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளன.
பட்டியல் : (P – நேரடி நிறுவுதல் (direct deployment), Q – ஊடாட்ட மென்பொருள் விருத்தி(interactive software clevelopment), R – கட்டநிலை பரப்பிவைத்தல் (plased deployment), S – வெள்ளோட்ட பரப்பிவைத்தல், (pilot deployment), T – நீர்வீழ்ச்சி மாதிரி (waterfall model)
(iv) கைமுறை (manual) தகவல் முறைமையைவிட கணினியை அடிப்படையாகக் கொண்ட முறைமையொன்றின் இரண்டு அனுகூலங்களைப் பட்டியலிடுக,
2020
10. நீர், உமது பாடசாலைக்கென ஒரு புதிய தகவல் முறைமையை – விருத்தி செய்வதற்கான பல குறித்தொதுக்கப்பட்ட ஒரு குழுவின் தலைவரெனக் கொள்க. இம்முறைமையின் தேவைகளை இனங்காண்பதற்குப் பின்வரும் நுட்பங்களில் எவற்றைப் பயன்படுத்தலாம்?
A – அவதானிப்பு
B – நேர்காணல்கள்
C – மூலவகைமாதிரி (prototyping)
(1) A மற்றும் B மாத்திரம்
(2) A மற்றும் C மாத்திரம்
(3) B மற்றும் C மாத்திரம்
(4) A, B மற்றும் C எல்லாம்
1. பின்வருவனவற்றில் எது மென்பொருள் விருத்தி வாழ்க்கை வட்டத்திலுள்ள (SDLC) செயற்பாடுகளி சரியான வரிசையாகும்?
A – நடைமுறைப்படுத்தல் (implementation)
B – தேவைச் சேகரிப்பு (requirement identification)
C – வடிவமைப்பு (design)
D – நிறுவுதல் (deployment)
E – சோதித்த ல் (testing)
F – பராமரிப்பு (maintenance)
(1) D, B, C, A, E மற்றும் F
(2) B, D, C, A, F மற்றும் E
(3) B, C, A, E, D மற்றும் F
(4) B, C, D, A, E மற்றும் F
6. (1) ஒரு விடுதி முகாமைத்துவ முறைமையின், முறைமை விருத்தியுடன் தொடர்பு பட்ட பின்வரும் சூழ்நிலைக்காட்சியைக் கருதுக;
முறைமையின், முறைமை விருத்தியுடன் தொடர்புபட்ட பின்வரும் “StayHere Hotel” எனும் விடுதியின் தகவல் தொழி florer” எனும் விடுதியின் தகவல் தொழில்நுட்பப் பிரதிப் பொது முகாமையாளரான மாலனி, விடுதிக்கென ஒரு புதிய கணினிமயப்படுத்திய முறைமையை .புதிய கணினிமயப்படுத்திய முறைமையை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவை மேற்கொண்டார்.
இது பிரதானமாக, ஏலவே இருந்த விடுதி முகாமைத்துவ முறைமையானது செய மற்றும் பாதுகாப்பு முதலிய தரநிர்ணய தேவைகளை பூர்த்தி செய்வதில் கொண்டிருந்த குறைபாடுகள் காரணமாகவாகும்.
மாலனி இதற்கென நிமால் மற்றும் அன்வர் ஆகிய இரு செய்நிரலரகளை (programmers) முறையே அறை ஒதுக்குதல் (Room reservation) மற்றும் கையிருப்பு முகாமைத்துவம் (Inventory Management) ஆகிய கூறுகளை விருத்தி (develop) செய்வதற்கு நியமித்தார்.
இந்த கரு கூறுகளும் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் அவை ஒன்றிணைக்கப்பட்டன. இவ்வாறு ஒன்றிணைக்கப்படம் முறைமையின் நடப்புப் பதிப்பைச் சோதிப்பதற்கு சோதிப்பு அணியினரின் உறுப்பினரான கிருஷ்ணாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதன் பின்னராக முறைமைக்கு மேலும் பல புதிய கூறுகள் சேர்க்கப்பட்டன. புதிய விடுதி முறைமை பூர்த்தி செய்யப்பட்டதும், சோதிப்பு அணியினரின் தலைவரான பிரதிபா, விடுதி முகாமைத்துவ முறைமையின் இறுதிப் பயனர்களான (end-users) விடுதி ஊழியர்களுடன் ஒரு சோதிப்பு) அமர்வினை ஏற்பாடு செய்தார்.
இந்த அமர்வின்போது இறுதிப் பயனர்களில் பலரும் புதிய முறைமையன் தொழிற்பாடுகளுடன் பரிச்சயமாவதற்குப் பயிற்சி அமர்வுகளை ஏற்பாடு செய்யுமாறு வேண்டிக்கொண்டனர்.
எனவே, இரண்டு முறைமைகளையும் ஒன்றாகச் செயற்படுத்துவது சிறந்தது என்றும், அனைத்து இறுதிப் பயனர்களும் முறையாகப் பயிற்றப்பட்டதன் பின்னரே பழைய முறைமையை நிறுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது,
(a) கிருஷ்ணாவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை வகை எது? (b) விடுதி ஊழியர்களினால் எந்த வகைச் சோதனை மேற்கொள்ளப்பட்டது? (c) புதிய விடுதி முகாமைத்துவ முறைமையின் அலகுச் சோதனையை (unit testing) மேற்கொண்டவர் யார்?
(d) புதிய முறைமையை விருத்தி செய்வதற்கு விருத்தி அணியினர் ஊடாட்ட விருத்தி மாதிரியத்தைப் (iterative-incremental model) பயன்படுத்தினர். இந்தத் தீர்மானத்திற்கான நியாயப்படுத்தலை ஒரு காரணத்துடன் கூறுக.
(e) மேற்படி விடுதி முகாமைத்துவ முறைமைக்குப் பயன்படுத்தப்பட்ட நிறுவல் அணுகுமுறை (deployment approach) யாது?
(ii) நிமால் தனது மகனிற்குப் பணம் அனுப்புவதற்காக ஒரு நிகழ்நிலை (online) வங்கி முறைமையினுள் உள்நுழைகை (logged) செய்தார். நிமால், தனது மகனின் வங்கிக் கணக்கிலக்கத்தையும், மாற்றம் செய்யப்பட வேண்டிய தொகையையும் நுழைவு செய்தார். இப்பணப்பரிமாற்றத்தை அங்கீகரிப்பதற்கு முறைமையானது தனிநபர் அடையாள இலக்கத்தை (PIN) கோரியது. PIN ஐ வாய்ப்புப் பார்த்ததன் பின்னர், முறைமையானது அனைத்து பணப் பரிமாற்ற விவரங்களையும் காட்சிப்படுத்தி நிமாலின் இறுதி அங்கீகரிப்பை (“OK”) பெற்றுக்கொண்டது. பரிமாற்றத்தின் வெற்றிகரமான பூர்த்தியின் பின்னர் நிமால் ஒரு இலத்திரனியல் பற்றுச்சீட்டைப் பெற்றுக் கொண்டார்.
மேற்குறித்த சூழ்நிலைக்காட்சியின் (scenario) இரண்டு உள்ளீடுகள், இரண்டு முறைவழியாக்கங்கள் மற்றும் இரண்டு வெளியீடுகளை எழுதுக