
IceCream PDF Editor அலுவலக வேலைகளில் நாம் அடிக்கடி PDF கோப்புகளைப் பயன் படுத்துகிறோம். சிலநேரங்களில் PDF கோப்புக்களில் உள்ள உரைப் பகுதியை, படங்களை மாற்ற வேண்டிய தேவைகளும் வரும். ஆனால் word கோப்புக்களைப் போன்று PDF கோப்புக்களை இலகுவில் மாற்றம் செய்து விட முடியாது. அவ்வாறான தேவைகள் ஏற்படும் போது ஒன்லைன் கருவிகளைப் பயன் படுத்தி PDF கோப்புக்களில் நாம் மாற்றங்கள் செய்து கொள்வதுண்டு. ஆனால் அவை எப்போதுமே நாம் எதிர்பார்க்கும் பலனைத் தருவதில்லை.
இங்கு நான் சொல்ல வருவது ஓன்லைனில் அல்லாமல் உங்கள் கணியிலேயே நிறுவிப் பயன் படுத்தக் கூடிய ஒரு PDF எடிட்டர் கருவி. நான் பயன் படுத்திப் பார்த்தவரையில் மிக நன்றாகவே செயற்படுகிறது.
இந்த ஐஸ்க்ரீம் PDF எடிட்டர் மென்பொருள் மூலம் என்ன வெல்லாம் செய்யமுடியும் என்பதைபார்ப்போம்.
- எந்தவொருஉரைப் பகுதியையும் புதிதாக சேர்க்கலாம் நீக்கலாம்.
- பக்க அளவுகளை மாற்றவும், பக்கங்களைத் திருப்பவும் முடியும்.
- பக்கங்களை மாற்றவும், புதிதாக பக்கங்களைச் சேர்க்கவும் முடியும்.
- கருத்துக்கள் இடவும் குறிப்புகள் சேர்க்கவும், முக்கிய பகுதிகளை அடிக் கோடிடவும் முடியும்.
- கோப்பிற்கு நீர்க்குறியீடிட முடியும்.
- PDF கோப்பிற்குக் கடவுச் சொல்லிட்டுப் பாதுகாக்கமுடியும்.
இது அண்மைய விண்டோஸ் பதிப்புகள் அனைத்திலும் செயற்படக்கூடியது.
கோப்பு அளவு 17.3MB கொண்ட இந்த மென்பொருளை icecreamapps.com இணையதளத்திலிருந்து இலவசமாகப் பதிவிறக்கிப் பயன்படுத்தலாம்.
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil