How to use the Task Manager in Windows

How to use the Task Manager in Windows விண்டோஸ் பிசியில் நினைவகத்தை எந்த நிரல்கள் அதிகமாகப் பயன்படுத்துகின்றன?

How to use Task Manager in Windows? உங்கள் விண்டோஸ் பிசியில்  இயக்கம்  மந்தமாக இருப்பதாக உணர்ந்தால் அல்லது பல நிரல்களை ஒரே நேரத்தில் இயக்க  முடியாமல் இருந்தால், அவற்றை செயற்பட வைப்பதற்குத் தேவையான  நினைவக கொள்ளளவு  தீர்ந்து போயிருக்கலாம். அவ்வாறு  நிகழும்போது, ​​பிசிக்கள் பெரும்பாலும் மெய்நிகர் நினைவகத்தைப் (virtual memory) பயன்படுத்த ஆரம்பிக்கும்.   

How to use Task Manager in Windows?
How to use the Task Manager in Windows

எந்த விண்டோஸ் புரோகிராம்கள் அதிக நினைவகத்தைப் பயன்படுத்துகின்றன என்பதைக் காண சிறந்த கருவி Task Manager எனும் பணி நிர்வாகி

டாஸ்க் மேனேஜரைத்  திறந்து கொள்வதற்கு டாஸ்க் பாரில் (task bar)  ரைட்  கிளிக் செய்து வரும்  மெனுவில், “Task Manager” என்பதைத் தெரிவு செய்யுங்கள்.

கீ போர்டில் Ctrl+Alt+Delete விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலமும் டாஸ்க் மேனேஜரில் நுழையலாம்.

டாஸ்க் மேனேஜர் விண்டோவில்  “More Details”   கிளிக் செய்யுங்கள்.

How to use Task Manager in Windows?

பெரிதாக்கிய டாஸ்க் மேனேஜர் விண்டோவில்  “Processes” டேபிற்கு (tab) செல்லுங்கள்.  அங்கு  உங்கள் கணினியில் இயக்கத்திலிருக்கும் ஒவ்வொரு பயன்பாட்டு மென்பொருள் (applications)  மற்றும் பின்னணியில் இயங்கும்  பணிகளின் (background tasks) பட்டியலையும் காணலாம். கூட்டாக, அந்த நிரல்கள் ” Processes ” என்று அழைக்கப்படுகின்றன.

அதிக நினைவகத்தைப் பயன்படுத்தும் பயன்பாடுகளை இறங்கு  வரிசைப்படுத்த, “Memory” நெடுவரிசையில்  (column)  தலைப்பைக் கிளிக் செய்யுங்கள். அப்போது ரேமின் (RAM) மிகப்பெரிய சதவீதத்தைப் பயன்படுத்தும் செயல்முறை (Processes) பட்டியலின் மேற்ப் பகுதியில் காண்பிக்கப்படும்.

How to See Which Programs Are Using All Your Memory on Windows

இந்த விண்டோவில் ,  அதிகளவிலான நினைவகத்தைப் பயன்படுத்தக்கூடிய சந்தேகத்திற்குரிய நிரல்களை அவதானியுங்கள்.

உங்கள் கணினியை நீங்கள் பொதுவாக எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து “சந்தேகத்திற்குரியது” எனக் கருதப்படுவது மாறுபடும்.

நீங்கள் வீடியோ எடிட்டிங் மென்பொருளொன்றை அல்லது சிக்கலான கணினி கேம்களை (Games) இயக்குகிறீர்கள் என்றால், அந்த செயல்முறைகளில் ஒன்று அதிகளவிலான நினைவகத்தைப் பயன்படுத்தினால் ஆச்சரியமில்லை

ஆனால் நீங்கள் அடையாளம் காணாத ஒரு செயல்முறை (process) நினைவகத்தைப் பயன்படுத்துகிறதா, ஒரு பயன்பாட்டை  (application) வழமையான முறையில் நிறுத்த முடியாவிட்டால் அல்லது பயன்பாடு பதிலளிக்கவில்லை (not responding)  என்றால், இந்த செயல்முறையை நிறுத்த  End Task கட்டளையைப் பயன்படுத்தலாம்.  

அதற்கு, டாஸ்க் மேனேஜரில்  காண்பிக்கப்படும் பிரச்சினைக்குரிய செயல்முறையை பட்டியலிலிருந்து தேர்ந்தெடுத்து “End Task.”என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

அதன் பிறகு,  பிரச்சினைக்குரிய  அந்த அப்லிகேசன் மூடப்படும். இதற்கு சில வினாடிகள் எடுத்துக் கொள்ளும். ஒரு வேளை அவ்வாறு நிறுத்த, உங்கள் கணினியை ரீஸ்டார்ட் restart  (மறுதொடக்கம்) செய்யுங்கள்.

இதன் மூலம்  பதிலளிக்காத பயன்பாடுகள் (unresponsive applications) அதிக நினைவகத்தைப் பயன்படுத்தும் அப்லிகேசன் உட்பட பல்வேறு சிக்கல்களை தற்காலிகமாகத்  தீர்க்க முடியும், .

உங்கள் கணினியில்   இவ்வாறான  நினைவகம் சார்ந்த  சிக்கல் தொடர்ந்து இருக்குமானால், முடிந்தால், உங்கள் கணினி நினைவகத்தை அதிகரிப்பது குறித்து பரிசீலிப்பது நல்லது.

What is Task Manager?

What is Virtual Memory?

About admin

Check Also

How to Find Out if You Have Been Blocked by Someone on WhatsApp

How to Find Out if You Have Been Blocked by Someone on WhatsApp வாட்சப்பில் ஏதோ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *