How to insert a pen drive into a USB port?

யூ.எஸ்.பி போர்டில் ஒரு யூ.எஸ்.பி கேபிளையோ பெண்ட்ரைவையோ செருகும்போது ஒரே தடவையில் செருக முடியாமல் அதனைத் திரும்பத் திரும்ப இரண்டு மூன்று தடவை முயற்சி செய்த பின்னரே இறுதியில் வெற்றிகரமாகச் செருகி விடுவோம்.

கம்பியூட்டரில் நாள் முழுதும் உட்கார்ந்து பணியாற்றுபவருக்கும் கூட இந்த அனுபவம் அடிக்கடி கிடைக்கும்.

யூ.எஸ்.பி போர்டில் சாதனங்களை இணைப்பதிலும் ஒரு ஒழுங்கு முறையுள்ளது.

அதனை நினைவில் வைத்துக் கொண்டால் இனிமேல் ஒரே முறையில் செருகிவிட முடியும்.

அதைச் செருகுவதற்கு முன் கேபிள் அல்லது பென் டிரைவ் முனையின் இரு பக்கங்களையும் அவதானிக்க வேண்டும்.

அதன் ஒரு பக்கமானது வழமையாகக் காலியாக இருக்கும் அல்லது தயாரித்த நிறுவன சின்னம் (logo) இருக்கும்.

அதன் மறுபுறம் ஒரு USB சின்னம் இருக்கும்.

டெஸ்க்டாப் கம்பியூட்டரில் யூ.எஸ்.பீ போர்ட் கிடையாக (horizontal) இருக்குமானால் கேபிளில் அல்லது பென் டிரைவில் யூ.எஸ்.பி சின்னம் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

அதேபோல் டெஸ்க்டாப் கம்பியூட்டரில் முன் புறம் நிலைக்குத்தாகவுள்ள (vertical) யூ.எஸ்.பீ போர்ட் இல் செருகும்போது கேபிளில் அல்லது பென் டிரைவில் யூ.எஸ்.பி சின்னம் இடப் புறமாக இருக்க வேண்டும்.

டெஸ்க்டாப் கம்பியூட்டரில் பின் புறத்தில் நிலைக்குத்தாக உள்ள யூ.எஸ்.பீ போர்ட் – இல் செருகும்போது யூ.எஸ்.பி சின்னம் (முன்னால் இருந்து பார்க்கும் போது) இடப் புறமாக இருக்க வேண்டும்.

i

இதே ஆட்டிக்கல் Quora வில்

About admin

Check Also

GIT Diagnostic Test MCQ 2022 Wayamba

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *