Hoote-Voice Based Social Media App ஹூட் என்பது புதிதாக அறிமுகமாகியிருக்கும் உலகின் முதல் (?) குரல் அடிப்படையிலான சமூக வலைத் தளம்.
இது ஒரு பன்மொழி தளம், இதன் மூலம் எவரும் சொந்தக் குரலில், விரும்பும் மொழியில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த அனுமதிக்கிறது.
ஹூட் 60-வினாடி நேரடி குரல் பதிவு விருப்பத்தை வழங்குவதோடு முன்னரே பதிவுசெய்த குரலையும் பதிவேற்றலாம்
மொத்தம் 14 இந்திய மொழிகளிலும் 5 சர்வதேச மொழிகளிலும் கிடைக்கிறது ஹூட்
அண்ட்ராயிட், ஐஓஎஸ் என இரண்டு தளங்களிலும் ஹூட் கிடைக்கிறது.
கடந்த அக்டோபர் 25, (2021) ஆம் திகதியன்றே வெளியிடப்பட்து
வெளியிட்டு வைத்தவர் சினிமா நடிகர் ரஜினிகாந்த்
செயலிக்கு சொந்தக் கா(ரி)ரர் அவரது புதல்வியார் சௌந்தர்யா
ஹூட்டில் கிடைக்கும் வசதிகள்
1. குரல் பதிவு மூலம் உங்கள் கருத்தையும் வெளிப்படுத்தலாம்
2. ஆடியோ லைப்ரரியில் இருந்து பின்னணி இசையைச் சேர்ப்பதன் மூலம் குரலை இன்னும் மேம்படுத்தலாம்
3. குரல் செய்தியில் ஒரு படத்தைச் சேர்க்க முடியும்
4. வழமை போன்று லைக், கமெண்ட் மற்றும் ஷேர் செய்ய முடியும்
5. அதிகம் பேசப்படும் (கேட்கப்படும்) டிரெண்டிங் தலைப்புகளைக் கேட்க முடியும்
6. நீங்கள் விரும்பும் மொழியில் வாயிஸ் செய்திகளைக் கேட்கலாம்
7. சினிமா நடிகர்கள், தொழில்முனைவோர், அரசியல்வாதிகள், விளையாட்டுப் பிரபலங்கள் மற்றும் நீங்கள் விரும்பும் நபர்களைப் பின்தொடரவும் முடியும்.