Google Adsense recognizes Tamil கூகுல் அட்சென்ஸ் தற்போது தமிழையும் ஆதரிக்கிறது. தமிழில் ப்லோக் மற்றும் இணைய தளம் வைத்திருப்போர் இனி ”லட்சம் லட்சமாய்??, கோடி கோடியாய்?? ” சம்பாதிக்கலாம்.
Google Adsense தற்போது தமிழையும் ஆதரிக்கிறது.
Goo
gle Adsense என்பது கூகிலின் விளம்பர சேவை. இணைய தளங்கள் மற்றும் ப்லோக் என்பவற்றில் விளம்பரங்களைப் பதிப்பித்து அந்த இணைய தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் விளம்பரங்களைப் பார்வையிடும்போதோ அல்லது க்ளிக் செய்யும்போதோ குறிப்பிட்ட அந்த இணைய தளத்தின் பிரபல்யத்தைப் பொருத்து அந்த இணைய தள நிர்வாகிக்கு கூகில் மாதந்தோறும் ஒரு கட்டணத்தைச் செலுத்தி விடுகிறது.
இந்தக் கட்டணம் ஒரு சில டாலர் முதல் பல ஆயிரம் டாலர் வரை நீளும். மேலும் இக் கட்டணம் மாதந்தோறும் வேறுபடும்.
இதுவரை காலமும் ஆங்கிலம் மற்றும் ஒரு சில மொழிகளுக்கு மாத்திரமே Google Adsense வசதியைப் பெறக் கூடியதாய் இருந்தது. கடந்த பெப்ரவரி 8 ஆம் திகதி தமிழையும் கூகில் அட்சென்ஸ் இணைத்துக் கொண்டது.

கடந்த பல வருடங்களாக Google Adsense வசதிக்கு விண்ணப்பித்த பல ஆயிரம் தமிழ் இணைய தள நிர்வாகிகளுக்கு அவர்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு Unsupported Language என்பதையே பதிலாக அனுப்பி வைத்தது கூகில்
இது அவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. தமிழ் இணைய தள நிர்வாகிகளே, இன்றே Google Adsense ற்கு விண்ணப்பியுங்கள்.
https://adsense.googleblog.com/2018/02/AdSense-now-supports-Tamil.html
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil