GIT 2010
பின்வரும் மெய் நிலை அட்டவணைக்குரிய (truth table) தர்க்கச் சுற்றை அமைக்க (logic circuit)
GIT 2011
(i) உங்கள் விடைத்தாளில் பின்வரும் உண்மை அட்டவணையை நகலெடுத்து X மற்றும் Y நிரல்களை பூரணப்படுத்துங்கள்.
(ii) மேலே உள்ள உண்மை அட்டவணைக்கு A, B, C ஆகியவற்றை உள்ளீடுகளாகவும், Y ஐ வெளியீட்டாகவும் கொண்டு லாஜிக் சர்க்யூட்டை உருவாக்கவும்.
GIT 2012
(i) பின்வரும் அட்டவணையை உமது விடைத்தாளில் பிரதி செய்து. 3,4,5 ஆகிய நிரல்களைப் பூரணப்படுத்துக.
(ii) X, Y ஆகியவற்றை உள்ளீடுகளாகவும் (inputs) R ஐ வருவிளைவாகவும் (output) கருதி மேற்குறித்த மெய்நிலை அட்டவணையை வகைகுறிப்பதற்கு ஒரு தருக்கச் சுற்றை அமைக்க.
GIT 2013
(ii) கீழே தரப்பட்ட பூரணமற்ற தர்க்கக் கோவை (A OR B) AND (NOT C) ஐக் கொண்ட உண்மை அட்டவணையைக் கருதுக. இங்கு சில விடுபட்ட உள்ளீடுகளும் வருவிளைவுகளும் ” ? ” அடையாளத்தால் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வட்டவணையை விடைத்தாளில் பிரதிசெய்து ” ? ” அடையாளமிடப்பட்ட கலங்களின் இடைவெளிகளைப் பொருத்தமான துவித எண்களைக் கொண்டு நிரப்புக.
குறிப்பு : தரப்பட்ட 1,0 ஆகிய பெறுமானங்களைச் சரியாகப் பிரதி செய்ய வேண்டும்.
GIT 2014
1. (அ) மாணவனொருவன் சைக்கிளொன்றின் பிரேக்கைப் பிரயோகிக்கும்போது மின்குமிழ் எரியும் வகையிலான சுற்று ஒன்றினை வடிவமைத்தான். அதில் இரு பிரேக் கட்டைகளையுமோ அல்லது வலது, இடது பிரேக் கட்டைகளில் ஒன்றையோ அழுத்தும்போது (பிரேக் அழுத்தப்படும்போது (on)) மின்குமிழ் ஒளிரும். இரண்டு பிரேக் கட்டைகளும் விடுவிக்கப்படும்போது (பிரேக் அழுத்தப்படாதபோது (off)) மின்குமிழ் ஒளிராது.
மேலுள்ள உருவில் காட்டப்பட்டவாறு முறையே A, B என முகப்பு அடையாளமிடப்பட்டுள்ளன. மின்குமிழ் C என முகப்பு அடையாளமிடப்பட்டுள்ளதாகக் கருதுக:
(i) கீழேயுள்ள உண்மை அட்டவணையை உங்கள் விடைத்தாளில் பிரதிசெய்து அதில் நிரல் ‘C’ இன் நிலைகளை நிரப்புக. அவ்வாறான நிலைகளைக் கீழேயுள்ளவாறு கருதுக:
பிரேக் அழுத்தப்படல் = 1
பிரேக் விடுவிக்கப்படல் = 0
மின்குமிழ் ஒளிர்தல் =1
மின்குமிழ் ஒளிராமை = 0
(ii) உங்கள் உண்மை அட்டவணையினால் வகைகுறிக்கப்படும் தர்க்கச்சுற்று எது ?
GIT 2015
(a) ஒரு பாட்டைத் தெரிந்தெடுத்து இசைப்பதற்கு ஒரு விளையாட்டு இசைக் கருவியில் P,Q என்னும் இரு பொத்தான்கள் உள்ளன. அவற்றில் யாதாயினும் ஒரு பொத்தானை அழுத்தும்போது உரிய பாட்டு இசைக்கப்படும். இரு பொத்தான்களையும்| ஒரே தடவை அழுத்தும்போது பாட்டு இசைக்கப்படமாட்டாது. பின்வரும் நிலைகளைக் கருதுக.
பின்வரும் நிலைகளைக் கவனியுங்கள்.
ஒரு பொத்தான் (P, Q) அழுத்தப்படும்போது அல்லது அழுத்தப்படாதபோது
ஒரு பொத்தான் அழுத்தப்படும்போது – நிலை ‘1’
ஒரு பொத்தான் அழுத்தப்படாதபோது – நிலை ‘0’
ஒரு பாட்டு இசைக்கப்படும்போது அல்லது இசைக்கப்படாதபோது (Y)
ஒரு பாட்டு இசைக்கப்படும்போது – நிலை ‘1’
ஒரு பாட்டு இசைக்கப்படாதபோது – நிலை ‘0’
பின்வரும் மெய்நிலை அட்டவணையை உமது விடைத்தாளில் நகல்செய்து வெற்று நிரல் Y யைப் பூரணப்படுத்துக.
பின்வரும் உண்மை அட்டவணையை நகலெடுத்து Y நிரலை பூர்த்தி செய்யவும்
(ஆ) பின்வரும் வரைபடத்தில் உள்ள லாஜிக் சர்க்யூட்டுக்கான உண்மை அட்டவணையை வரைக.
GIT 2016
1. (a) ஒரு பாடசாலையில் உள்ள கணினி ஆய்கூடத்திற்குப் பாதுகாப்பை வழங்குவதற்கு ஆய்கூடத்தைப் பயன்படுத்துவதற்கு அனுமதி பெற்றுள்ள மாணவர்கள் கதவில் நிறுவப்பட்டுள்ள ஒரு சாதனத்துக்குத் தமது பாடசாலை அனுமதி எண் ‘X’ ஐயும் கடவுச்சொல் ‘Y’ ஐயும் நுழைத்தல் வேண்டும்.
அனுமதி எண்ணும் கடவுச்சொல்லும் சரியெனின், கதவு ‘Z’ திறக்கும். அவற்றில் ஒன்று அல்லது அவை இரண்டும் பிழையெனின், கதவு திறக்கமாட்டாது.
பின்வரும் நிலைகளைக் கருதுக:
(i) பின்வரும் அட்டவணையை உமது விடைத்தாளில் நகல்செய்து ‘Z இன் நிலைக்குரிய நிரலை நிரப்புக.
(ii) மேற்குறித்த அட்டவணையினால் வகைகுறிக்கப்படும் தருக்கப்படலையை வரைக. உள்ளீடுகளையும் வெளியீட்டையும் தெளிவாகக் காட்டுக.
(b) பின்வரும் கோவைக்குச் சமவலுவுள்ள தருக்கச்சுற்று வரிப்படத்தை வரைக.
(A AND (NOT)B) OR NOT(A) = C
GIT 2017
1. (a) NOT படலையின் குறியீட்டை வரைந்து, அதன் மெய்நிலை அட்டவணையை வரைக.
(b) பின்வரும் கோவைக்குச் சமவலுத் தருக்கச் சுற்று வரிப்படத்தை வரைக.
(P AND Q) OR (R AND Q) = S
(c) 1290 ஐ அதன் துவிதச் சமவலுவாக மாற்றுக. உமது படிமுறைகளைக் காட்டுக.
(h) ஒரு பாடசாலைக் கணினி ஆய்கூடத்திற்கு ஒரு தன்னியக்கக் குளிர்ச்சியாக்கல் முறைமை (Z) ஐ விருத்திசெய்ய வேண்டியுள்ளது. இந்த அறையில் A, B என்னும் இரு வெப்பநிலைப் புலனிகள் உள்ளன. ஒரு புலனியினால் அல்லது இரு புலனிகளினாலும் காட்டப்படும் வெப்பநிலை ஒரு முன்வரையறுத்த பெறுமானத்திற்கு மேற்படும்போதும் பயனர் ஆளி C ஆனது ON அமைவில் இருக்கும்போதும் குளிர்ச்சியாக்கல் முறைமை தொழிற்பட வேண்டும்.
பின்வரும் நிலைமைகளைக் கருதுக:
ஒரு புலனியின் வெப்பநிலை முன்வரையறுத்த பெறுமானத்திற்கு மேற்படுகின்றது. – ‘1’
ஒரு புலனியின் வெப்பநிலை முன்வரையறுத்த பெறுமானத்திற்கு மேற்படுவதில்லை. – ‘0’
பயனர் ஆளி C ஆனது ON நிலையில் உள்ளது. ‘1’
பயனர் ஆளி C ஆனது OFF நிலையில் உள்ளது ‘0’
குளிராக்கல் முறைமை Z தொழிற்படுகின்றது. ‘1’
குளிராக்கல் முறைமை Z. தொழிற்படுவதில்லை. ‘0’
A, B, C ஆகிய உள்ளீட்டுச் சேர்மானங்களுக்கு இசைவாக எதிர்பார்த்த Z வெளியீட்டைப் பிரதிபலிப்பதற்கு Z1 தொடக்கம் Z8 வரை காட்டப்படும் நிலைகளுக்குத் துவிதப் பெறுமானங்களை எழுதுக.