2010
3. மைய முறைவழி அலகு (CPU) கொண்டிருப்பது :
(1) எண்கணித, தர்க்க அலகு (ALU), கட்டுப்பாட்டு அலகு (CU) ஆகியவற்றை
(2) எண்கணித, தர்க்க அலகு, உள்ளீட்டு அலகு (Input Unit) ஆகியவற்றை
(3) உள்ளீட்டு அலகு, வருவிளைவு அலகு (Output Unit) ஆகியவற்றை
(4) கட்டுப்பாட்டு அலகு, உள்ளீட்டு அலகு ஆகியவற்றை
5. தரவுப் பதிவை ஒழுங்காக மேற்கொள்ளும் தரவுப் பதிவுனருக்கு (Data Entry Operator) மிகவும் உகந்த சாதனம்
(1) கைக்கணினி (Palmtop Computer)
(2) மடிக்கணினி (Laptop Computer)
(3) மேசைக் கணினி (Desktop Computer)
(4) தொடு திரை (Touch screen)
17. பின்வருவனவற்றில் எது ஒரு பணிசெயல் முறைமையின் (operating system) முதன்மை அம்சமாகும்?
(1) நச்சுநிரல் வருடுதல் (Virus scanning) (2) கோப்பு முகாமை
(3) தரவுத்தளங்களை உருவாக்குதல் (4) வலையத் தேடல்
18. பின்வருவனவற்றில் எது ஒரு பணிசெயல் முறைமை அன்று ?
(1) Windows XP (2) DOS (3) Linux (4) வலை மேலோடி (Web browser )
19. வன் வட்டை வடிவமைத்தல் (Formatting) என்பது எதன் செயலாகும் ?
(1) வலை மேலோடி (web browser) (2) பணிசெயல் முறைமை
(3) சொல் முறைவழிப்படுத்தி (word processor) (4) நச்சுநிரல் வருடி (virus scanner)
20. எது ஒரு வன் வட்டின் தரவுக் காப்பை (backup) எடுப்பதற்குப் பெரும்பாலும் காரணமாக இருத்தல் கூடும் ?
(1) வன் வட்டின் ஆயுட்காலத்தை மேம்படுத்தல்
(2) வன் வட்டு சேதமடைந்தால் தரவுகளை மீளப்பெறல்
(3) இணையத்துடன் கணினியைத் தொடுத்தல் –
(4) தரவுகளைத் தகவலாக மாற்றல்
36. பின்வருவனவற்றில் எவை திறந்த ஆதாரமூலப் பணிசெயல் முறைமைகளாகும் ?
A – Ubuntu B – Windows Vista C – Open Suse
(1) B, C
(2) A B
(3) A B C ஆகிய எல்லாம்.
(4) மேற்குறித்த எதுவுமன்று
2011
3. பின்வரும் சேர்மானங்களில் எதில் உள்ளீட்டுச் சாதனம் (input devize), வருவிளைவுச் சாதனம் (output device). தேக்ககச் சாதனம் (stornge device) ஆகியன முறையே காட்டப்பட்டுள்ளன ?
(1) விசைப்பலகை (Keyboard), வருடி (Scanner), சுட்டி (Moust)
(2) வருடி (Scanner), சுட்டி. (Mouse), விசைப்பலசை (Keyboard)
(3) இறுவட்டுச் செலுத்தி (Compact Disk Diive), சைப்பலகை (Keyboard), பளிச்சிட்டு நினைவகம் (Flash Memory)
(4) விசைப்பலகை (Keyboard), ஒலிபெருக்கி (Speaker), இறுவட்டுச் செலுத்தி (Compact Disk Drive)
4. ஒரு பளிச்சிட்டு நினைவகச் சாதனம் (Flash Memory Device) 4 GB கொள்ளளவை உடையது. பின்வரும் எப்பெறுமானம் அக்கொள்ளளவை MB யில் வகைகுறிக்கின்றது?
(1) 1×10 MB
(2) 103 MB
(3) 4×10 MB
(4) 4×106 MB
5. கணினிகளின் மூன்றாம் தலைமுறை எதனை அடிப்படையாய்க் கொண்டது?
(1) வெற்றிடக் குழாம் (Vacuum Tube)
(2) திரான்சிற்றர்
(3) ஒருங்கிணைச் சுற்று (Integrated Circuit)
(4) மிகப் பேரளவு ஒருங்கிணை (VLSI) சுற்று
7. கடைகளுக்குச் செல்வதற்கு மோட்டர்ச் சைக்கிளைப் பயன்படுத்தும் வர்த்தகப் பிரதிநிதி ஒருவர் தனக்குச் கடைகளிலிருந்து கிடைக்கும் வர்த்தகக் கட்டளைகளைத் தேக்கி வைப்பதற்கு ஒரு கணினியைக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இப்பணிக்கு மிகவும் பொருத்தமான கணினி யாது ?
A மேசைக் (Desktop) கணினி
B உள்ளங்கைக் (Palmtop) கணினி
c -மடிக் (Laptop) கணினி
(1) A மாத்திரம்
(2) B மாத்திரம்
(3) A, B ஆகியன
(4) B.C ஆகியன
9. கணினியின் மைய முறைவழி அலகு (CPU) கொண்டிருப்பது
(1) கட்டுப்பாட்டு அலகு, எண்கணித, தருக்க அலகு (ALU)ஆகியவற்றை
(2) கட்டுப்பாட்டு அலகு, வருவிளைவு அலகு ஆகியவற்றை
(3) முதன்மை நினைவகம், துணைத் தேக்ககம் (Auxiliary Storage) ஆகியவற்றை
(4) முதன்மை நினைவகம், வருவிளைவு அலகு ஆகியவற்றை
10. திறந்த மூல மென்பொருள் (Open Source software) தொடர்பாகப் பின்வரும் எக்கூற்று/ கூற்றுகள் உண்மையானது! உண்மையானவை?
A – Mac OS என்பது திறந்த மூல மென்பொருளுக்கு ஓர் உதாரணமாகும்.
B – திறந்த மூல மென்பொருளின் அடிப்படைக் குறியீடு இலவசமாகப் பதிவிறத்தக்கது
C – Ubuntu, Open Suse ஆகியன திறந்த மூல மென்பொருளுக்கு உதாரணங்களாகும்.
(1) A மாத்திரம்.
(3) A, C ஆகியன மாத்திரம்.
(2) B மாத்திரம்.
(4) B, C ஆகியன மாத்திரம்.
11. பின்வரும் பணிசெயல் முறைமைகளில் எதில்/ எவற்றில் கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை (FAT) பற்றிய எண்ணக்கரு பயன்படுத்தப்படுகின்றது?
A – MS Windows
B – Linux
C – MS DOS
(1) A மாத்திரம்.
(3) A, C ஆகியன மாத்திரம்.
(2) A,B ஆகியன மாத்திரம்.
(4) A, B, C ஆகிய எல்லாம்.
12. பின்வருவனவற்றில் எது/ எவை பணிசெயல் முறைமையின் தொழில்/ தொழில்கள் ஆகும்.
A கோப்பு, உறை (folder) (அடைவு – directory) முகாமை
B- கட்டுப்படுத்தும் உள்ளீட்டு/ வருவிளைவுச் சாதனங்கள்
C – இணையத்திற்குப் பெறுவழியை (access) வழங்கல்
(1) A மாத்திரம்.
(3) A, C ஆகியன மாத்திரம்.
(2) A, B ஆகியன மாத்திரம்.
(4) A, B, C ஆகிய எல்லாம்
23. A,B,C என முகப்பு அடையாளமிட்டுக் காட்டப்பட்ட மூன்று படவுருக்களையும் (icons) ஒரு குறித்த சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளின் சாளரத்தில் (window) காணலாம்.
A, B, C முறையே எவற்றை வகைகுறிக்கின்றன ?
(1) சிறிதாக்கும் (Minimize) பொத்தான், பெரிதாக்கும் (Maximize) பொத்தான், மூடும் (Close) பொத்தான்
(2) சிறிதாக்கும் (Minimize) பொத்தான், மூடும் (Close) பொத்தான், பெரிதாக்கும் (Maximize) பொத்தான்
(3) பெரிதாக்கும் (Maximize) பொத்தான், சிறிதாக்கும் (Minimize) பொத்தான், மூடும் (Close) பொத்தான்
(4) மூடும் (Close) பொத்தான், பெரிதாக்கும் (Maximize) பொத்தான், சிறிதாக்கும் (Minimize) பொத்தான்
28. பின்வருவனவற்றில் எவை தரவுத்தள முகாமை முறைமைகளுக்கு உதாரணங்களாகும்?
A-OpenOffice Base
B-Microsoft Access
C-OpenOffice Impress
(1) A, B ஆகியன மாத்திரம்.
(3) A, C ஆகியன மாத்திரம்.
(2) B, C ஆகியன மாத்திரம்.
(4) A, B, C ஆகிய எல்லாம்
32. தரவுப் பெறுவழில் (Access) சுதி தொடர்பாள பின்வரும் கூற்றுளைக் கருதுக.
A பதுக்கு நினைவகம் (Cache Memory)தற்போக்குப் பெறுவழி நினைவளத்திலும் (KA.M) பார்க்க விரைவானது.
B – இலக்கப் பல்திற வட்டு (DVD) ROM ஆனது பதுக்கு நினைவகத்திலும் பார்க்க விரையானது.
C – இலக்கப் பல்திற வட்டு ROM தற்போக்குப் பெறுவழி நினைவகத்திலும் பார்க்க விரைவானது.
D – தற்போக்குப் பெறுவழி நினைவகம் பதுக்கு நினைவகத்திலும் பாரிக்க விரைவானது.
மேற்குறித்தவற்றில் எது எவை உண்மையானது உண்மையானவை?
(1) A மாத்திரம்.
(2). D மாத்திரம்.
(3) A, B ஆகியன மாத்திரம்.
(4) C, D ஆகியன மாத்திரம்
(40) ஒரு புதிய கணினியைப் பயன்படுத்தக் கணினி விளையாட்டுகளை விளையாடுபவர் ஒருவர் விளையாட்டில் இட் மெதுவாக இருக்கின்றனவென முறையிட்டுள்ளார். இப்பிரச்சினையத் தீர்ப்பதற்குப் பின்வரும் எதனை நிறுவ வேண்டும்?
(1) சிறந்த விவரக்கூற்றுகளை உடைய ஓர் ஒலி அட்டை (sound card)
(2) பெரிய ஆற்றல் உள்ள ஒரு வன் வட்டு (hard disk)
(3) சிறந்த விவரக்கூற்றுகளை உடைய ஓர் அர்ப்பணிப்பு வரைவியல் அட்டை (dedicated graphics card)
(4) சுலையமைப்பு இடைமுக அட்டை (Network Interface Card)
2012
4. கணினி முறைவழியாக்கிகளின் (processors) தொழினுட்பவியல் கூர்ப்பின் சரியான ஒழுங்குமுறை காணப்படும் விடை
(1) திரான்சிற்றர், வெற்றிடக் குழாய் (Vacuum tube), ஒன்றிணைந்த சுற்று (IC), பேரளவு ஒருங்கிணைப்பு (VLSI)
(2) வெற்றிடக் குழாய் (vacuum tube), திரான்சிற்றர், ஒன்றிணைந்த சுற்று (IC), பேரளவு ஒருங்கிணைப்பு (VLSI)
(3) வெற்றிடக் குழாய் (vacuum tube), ஒன்றிணைந்த சுற்று (IC), திரான்சிற்றர், பேரளவு ஒருங்கிணைப்பு (VLSI)
(4) வெற்றிடக் குழாய் (vacuum tube), ஒன்றிணைந்த சுற்று (IC), பேரளவு ஒருங்கிணைப்பு (VLSI), திரான்சிற்றர்,
5. பின்வருவனவற்றில் எது முறையே உள்ளீட்டுச் சாதனம் (input device), தேக்ககச் சாதனம் (storage device), வருவிளைவுச்
சாதனம் (output device) ஆகியவற்றை வகைகுறிக்கின்றது ?
(1) விசைப்பலகை, வன் வட்டு (Hard Disk), நுணுக்குப் பன்னி
(2) சுட்டி (Mouse), விசைப்பலகை, அச்சுப்பொறி
(3) விசைப்பலகை, தொடு அட்டைமேடை (Touch Pad), சுட்டி
(4) வருடி (Scanner), பளிச்சிட்டு நினைவகம் (Flash Memory), ஒலிபெருக்கி
17, விமலன் ஒரு கணினியின் விசைப்பலகையைப் பயன்படுத்தி ஓர் ஆவணத்தைத் தட்டச்சிட்டு அதனை அச்சிட்டான்,
இச்சந்தர்ப்பத்தில் கணினியின் பணிசெயல் முறைமையினால் (operating System) செய்யப்படும் அடிப்படைக் கொள்பணிகளை எங்ஙனம் மிகச் சிறந்த விதத்தில் விவரிக்கலாம் ?
(1) கோப்பு, உறை முகாமை
(2) முறைவழி முகாமை
(3) கட்டுப்படுத்தும் உள்ளீடு/வருவிளைவு
(4) தேக்கக முகாமை
18. A, B என்னும் பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A – ஒரு பணிசெயல் முறைமை பயனர்களுக்குக் கணினியுடன் இடைத்தாக்கம் புரியவும் அதனைக் கட்டுப்படுத்தவும் அனுமதிக்கின்றது. B – ஒரு பணிசெயல் முறைமையின் வரைவியல் பயனர் இடைமுகம் (GUI) ஒரு கணினியுடன் இடைத்தாக்கம் புரிந்து அதனைக் கட்டுப்படுத்துவதற்குப் பயனர்களுக்கு வசதி செய்கின்றது. மேற்குறித்த A, B ஆகிய கூற்றுகள் தொடர்பாகப் பின்வரும் எக்கூற்று சரியானது?
(1) A, B ஆகிய இரண்டும் உண்மையானவை.
(2) A பொய்யும் B உண்மையும் ஆகும்.
(3) A உண்மையும் B பொய்யும் ஆகும்.
(4) A, B ஆகிய இரண்டும் பொய்யானவை.
20. தற்செயலாக நீக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்கு ஒரு புற வன் வட்டில் (external hard disk) உமது கோப்புகளின் உறைகளின் இணைப்படிகளை (duplicates) உருவாக்குதல் சிறந்த பழக்கமாகும். இக்கொள்பணிக்கு வழங்கும் பெயர்
(1) துண்டாக்கநீக்கம் (defragmentation)
(2) காப்பு எடுத்தல் (backing up)
(3) வட்டைத் துடைத்தல் (disk cleaning up)
(4) வட்டு வடிவமைப்பு (disk formatting)
வெவ்வேறு பயனர்களின் முன்னுரிமைகளுக்கேற்பக் கணினிவழித் தலைப்பை (desktop theme) தனிப்பயனாக்கு வதற்கு அப்பயனர்களுக்குக் கணினிகள் இடமளிக்கும், ஒரு பணிசெயல் முறைமையின் பின்வரும் செயல்களில் எது இச்செயற்பாட்டைக் கட்டுப்படுத்தும்?
(1) உறை முகாமை
(2) முறைவழி முகாமை
(3) கோப்பு முகாமை
(4) பயனர் கணக்கு முகாமை
31. ஓர் இல்லக் கணினியைக் கொள்வனவு செய்யும் போது பின்வரும் அம்சங்களில் கரு எது குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தது?
(1) பொறியின் வன்பொருள் விவரக் கூற்று
(2) விற்பனைக்குப் பிந்திய ஆதரவு
(3) உத்தரவாதக் காலம்
{4} அடி.ச்சட்டகத்தின் (Chasis) தோற்றம்
37. கீழே காணப்படும் சைகை வகைகளைக் கருதுக.
பின்வரும் உதாரணங்களில் எது முறையே உரு 1 இலும் உரு 2 இலும் காணப்படும் சைகை வகைகளை (signal types) வகைகுறிக்கின்றது ?
(1) காற்று வீசுதல், கணினியைப் பயன்படுத்தி ஒரு பாட்டைக் கேட்டல்
(2) கணினியைப் பயன்படுத்தி ஒரு பாட்டைக் கேட்டல், காற்று வீசுதல்
(3) கணினியைப் பயன்படுத்தி ஒரு பாட்டைக் கேட்டல், கடலின் அலைகள்
(4) காற்று வீசுதல், கடலின் அலைகள்
39. ஓர் ஆசிரியருக்கு முறையே 24 MB, 1200 MB என்னும் கோப்புப் பருமன்கள் (file sizes) உள்ள இணையத்திலிருந்து இரு கல்வி மென்பொருள் பொதிகளைப் பதிவிறக்கம் (download) செய்ய வேண்டியுள்ளது. ஆசிரியர் இரு மென்பொருள்களையும் ஓர் 2 GB பளிச்சீட்டு நினைவகக் (flash memory) கோலில் தேக்கி வைப்பதற்கு உத்தேசித்துள்ளார், பளிச்சீட்டு நினைவகக் கொள்ளளவில் 50% ஆனது ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுள்ளது. மென்பொருளைத் தேக்கி வைப்பதற்குப் பளிச்சிட்டுக் கோலில் உள்ள இடம் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானது?
(1) இரு மென்பொருள்களையும் தேக்கி வைக்கலாம்.
(2) பருமன் 24MB ஐ உடைய மென்பொருளை மாத்திரம் தேக்கி வைக்கலாம்.
(3) இரு மென்பொருள்களில் யாதாயினும் ஒன்றைத் தேக்கி வைக்கலாம்.
(4) மென்பொருள் எதனையும் தேக்கி வைக்க முடியாது
2013
3. C:\Users\grade12\git இல் மூல அடைவு (root directory) யாது ?
(1) users
(2) grade12
(3) git
(4) C:
4. உங்கள் கணினியின் வன்வட்டில் (hard disk) சுயாதீன வெளி மிகக் குறைவாக உள்ளதாகக் கருதுக. நீங்கள் சேமித்து வைத்த எந்தவொரு கோப்பினையும் நீக்காமல் இன்னும் சிறிதளவு சுயாதீன வெளியை உருவாக்க விரும்புகிறீர்கள் எனின். அதற்குப் பயன்படுத்தும் முறைமைக் கருவிகள் (system tools) பின்வருவனவற்றுள் எவை ?
A – வட்டுத் துப்புரவாக்கி (Disk clean up)\
B- வட்டுச் சீராக்கி (Disk defragmenter)
C- வரியுரு விவரப்படம் (Character map)
1) A, B ஆகியன மாத்திரம்.
2) B, C ஆகியன மாத்திரம்.
(3) A, C ஆகியன மாத்திரம்.
(4) A, B, C ஆகிய எல்லாம்.
6. கணினி முறைமையொன்றின் பயன்பாட்டு மென்பொருளுக்கு (Utility software) உதாரணமாக அமைவது / அமைபவை பின்வருவனவற்றுள் எது / எவை ?
A – தொகுப்பி (Compiler)
B- சொல்முறை வழிப்படுத்தல் மென்பொருள் (Word Processing Software)
C – வலை உலாவி (Web browser)
D- வன்தட்டு சீராக்கி (Disk defragmenter)
1) A மாத்திரம்.
2) B, D ஆகியன மாத்திரம்.
3) C, D ஆகியன மாத்திரம்.
(4) A, D ஆகியன மாத்திரம்.
12. ஓர் இலக்கமுறைச் சைகை (digital signal) தொடர்பான பின்வரும் கூற்றுகளுள் உண்மையானது / உண்மையானவை எது / எவை ?
A – முகத்துக்கு முகமான தொடர்பாடலில் உள்ள மனிதக் குரல் இலக்கமுறைச் சைகைக்கு உதாரணமாகும்
B – இலக்கமுறைச் சைகைகள் சதுர அலைகளால் (Square waves) வகைகுறிக்கப்படும்.
C – கடல் அலை இலக்கமுறைச் சைகைக்கு உதாரணமாகும்.
(1) A மாத்திரம்.
(2) B மாத்திரம்
(3) C மாத்திரம்
(4) B, C ஆகியன மாத்திரம்.
39. தடைப்படாத வலு வழங்கல் (UPS) அலகு கணினி முறைமைகளின் வன்பொருள் மட்டத்தின் பாதுகாப்பினை வழங்குவதற்குப் பயன்படுத்தலாம். UPS அலகின் தொழிற்பாடு தொடர்பாக பின்வருவனவற்றுள் சரியானது எது / எவை ?
A – மின்வலு சடுதியாகத் தவறுதல், வலு மாற்றங்கள் ஆகிய இடங்களிலிருந்து கணினி முறைமைகளைப் பாதுகாத்தல்
B – கணினி நச்சு நிரல்களிலிருந்து கணினிகளைப் பாதுகாத்தல்
C – வெளிநபர்கள் அனுமதியின்றி கணினியினுள் பிரவேசிப்பதிலிருந்தும் கணினி முறைமைகளைப் பாதுகாத்தல்
(1) A ஆகியன மாத்திரம்.
(2) A, B ஆகியன மாத்திரம்.
(3) A, C ஆகியன மாத்திரம்,
(4) A, B, C ஆகிய எல்லாம்
2014
(1) முதலாம் தலைமுறைக் கணினிகள் தொடர்பாக பின்வருவனவற்றுள் சரியான கூற்று / கூற்றுகள் எது எவை ?
A – கணினியின் பெளதிக அளவு ஒப்பீட்டு அளவில் பெரியது.
B – சுற்றுகளுக்காக வெற்றிடக் குழாய்கள் (vacuum tubes) பயன்படுத்தப்பட்டன.
C – செய்நிரலுக்காக (programming) இயந்திர மொழி (machine language) பயன்படுத்தப்பட்டது.
1. A மாத்திரம்
2. B மாத்திரம்
3. A, C மாத்திரம்
4. A, B, C ஆகிய எல்லாம்
(2) பின்வருவனவற்றுள் கணினியின் மையமுறைவழி அலகின் (CPU) கூறுகள் எவை ?
(1) எண்கணித தர்க்க அலகு (ALU), கட்டுப்பாட்டு அலகு (control unit)
(2) எண்கணித தர்க்க அலகு, துணைத் தேக்ககம் (secondary storage)
(3) கட்டுப்பாட்டு அலகு, பிரதான நினைவகம் (main memory)
(4) பிரதான நினைவகம், துணைத் தேக்ககம்
(3) துணைத் தேக்கக சாதனத்திற்கு (Secondary storage) உதாரணங்கள் பின்வருவனவற்றுள் எவை
1. இறுவட்டு (CD), பளிச்சீட்டு நினைவகம் (Flash memory), காந்த நாடா (Magnetic tape)
2. இறுவட்டு, காந்த நாடா, வாசிப்பு மட்டும் நினைவகம் (ROM)
3. இலக்கமுறை பல்திறவாற்றல் வட்டு (DVD), காந்த நாடா, எழுமாறு அணுகல் நினைவகம் (RAM)
4. பளிச்சீட்டு நினைவகம், எழுமாறு அணுகல் நினைவகம், வாசிப்பு மாத்திர நினைவகம்
7. ஒரு இலக்கமுறைக் கமராவின் தேக்ககத்தின் (storage) கொள்ளளவு 16GB. இக்கமராவில் 1 MB அளவுள்ள எத்தனை நிழற்படங்கள் (photos) அதிகூடியளவில் (அண்ணளவாக) சேமிக்கப்படலாம் ?
1. 16
2. 62
3. 16000
4. 16 Million
20. பின்வரும் மென்பொருள்களைக் கருதுக
A – DOS
B – ஃபயர்பாக்ஸ் (Firefox)
C- மைக்ரோசொப்ட் வின்டோஸ் (Microsoft Windows) D – லினக்ஸ் (Linux) மேற்குறித்தவற்றுள் பணிசெயல் முறைமைகள் (Operating Systems) எவை ?
1. A, B, C மாத்திரம்
2. A, B, D மாத்திரம்
3. A, C, D மாத்திரம்
4. B, C, D மாத்திரம்
21. கீழே தரப்பட்டுள்ள பணிகளைக் (functions) கருதுக:
A – ஆவணத்திலுள்ள சொற்களை எழுத்துப் பிழை சரிபார்த்தல்
B – இயக்க நிலையிலுள்ள செயற்பொடுகளை (processes) முகாமை செய்தல்
C- பயனருக்கு இடைமுகத்தை வழங்குதல் – மேற்குறித்தவற்றுள் ஒரு பணிச்செயல் முறைமையின் (OS) தொழில்கள் எவை ?
1. A, B மாத்திரம்
2. A, C மாத்திரம்
3. B, C மாத்திரம்
4. A, B, C ஆகிய மூன்றும்
22. பயனர் ஒருவரின் கணினி வன்தட்டின் அடைவு மரம் (directory tree) கீழேயுள்ள உருவில் காட்டப்பட்டுள்ளது.
மேலுள்ள அடைவு மரக் கட்டமைப்பில் ALNotes, CombinedMaths, Competency/.doc ஆகியன முறையே
1. கோவை (file), பிரதான அடைவு (root directory), உப அடைவு (sub directory)
2. உப அடைவு, கோவை, பிரதான அடைவு
3. உLI அடைவு, பிரதான அடைவு, கோவை
4. பிரதான அடைவு, உப அடைவு, கோவை
31. நிறுவனமொன்று சொல்முறை வழிபடுத்தல் மென்பொருள் (X) ஐ கொள்வனவு செய்தது. அதேநிறுவனம் தனது கணக்கு வைப்பு நடவடிக்கைகளுக்காக கணக்கு வைப்பு மென்பொருள் (Y) ஐ வடிவமைத்துத் தருமாறு மென்பொருள் வடிவமைப்புக் கம்பனியிடம் கேட்டது. மேற்குறித்த நிகழ்வு தொடர்பாக உண்மையானது பின்வருவனவற்றுள் எது ?
1. X என்பது பொதி செய்யப்பட்ட (packaged) மென்பொருள், Y என்பது தேவைக்கேற்ப தயாரிக்கப்பட்ட (tailor-made) மென்பெருள்
2. X என்பது தேவைக்கேற்ப தயாரிக்கப்பட்ட மென்பொருள், Y என்பது பொதி செய்யப்பட்ட மென்பொருள்
3. X,Y ஆகிய இரண்டும் பொதி செய்யப்பட்ட மென்பொருள்
4. X, Y ஆகிய இரண்டும் தேவைக்கேற்ப தயாரிக்கப்பட்ட மென்பொருள்
2015
1. பின்வரும் எந்தச் சந்தர்ப்பங்களுக்கு உள்ளங்கைக் கணினி மிகவும் உகந்த்து
A – வர்த்தகப் பிரதிநிதி சுற்றுலாவில் ஈடுபடும்போது பயன்
B – மாணவர்களின் தினசரி வரவுத் தரவுகளைப் பதிவுசெய்வது
C – வெளிக்களச் சுற்றுலாவில் தரவுகளைப் பதிவுசெய்வதற்கு
(1) A மாத்திரம்
(2) B மாத்திரம்
(3) A, B மாத்திரம்
(4) A, C மாத்திரம்
3, பின்வரும் வாக்கியங்களில் எது / எவை சரியானது/சரியானவை?
A – வன்வட்டு பிரதான நினைவகத்திலும் பார்க்கக் கூடிய கொள்திறனை
B – மின்தொடுப்பு அகற்றப்படும்போது பிரதான நினைவகத்தில் உள்ள வன்வட்டில் உள்ள தரவுகள் இழக்கப்படுவதில்லை
C – பிரதான நினைவகத்தில் உள்ள தரவுகளைத் தேக்கி வைப்பதற்கு அதேவேளை வன்வட்டில் உள்ள தரவுகளைத் தேக்கி வைப்பதற்குக் காந்த ஊடகங்கள் பயன் படுகின்றன
(1) A மாத்திரம்
(2) B மாத்திரம் –
(3) C மாத்திரம்
(4) A B C ஆகிய அனைத்தும்
5. அட்டவணை 1 இல் நான்கு கோப்புகளும் அவற்றின் பருமன்களும் தரப்பட்டுள்ளன. பளிச்சீட்டு நினைவகத்தின் 3 GB ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டிருந்தால், மொத்தக் கொள்திறன் 4 GB ஐக் கொண்ட ஒரு பளிச்சிட்டு நினைவகச் செலுத்தியின் அட்டவணையில் உள்ள கோப்புகளில் எவை தேக்கி வைக்கப்படலாம் ?
(1) A, B ஆகியன மாத்திரம் ‘
(2) A, C ஆகியன மாத்திரம்
(3) B, C ஆகியன மாத்திரம்
(4) C, D ஆகியன மாத்திரம்
16. பின்வருவனவற்றில் எது ஒரு பணிச்செயல் முறைமை ஆகும் ?
(1) Microsoft Powerpoint
(2) Microsoft Word
(3) OpenOffice Impress
4) Ubuntu
17. மேகலா உயர்தரப் பரீட்சைக்கு ஆங்கில இலக்கியம், மேலைத்தேயச் சங்கீதம், புவியியல் ஆகியவற்றைக் கற்கும் ஒரு மானவி. அவர் தனது கிராமத்திலுள்ள சில சாதாரண தர மாணவர்களுக்கு ஆங்கிலத்தையும் கணிதத்தையும் கற்பித்து உதவி செய்கின்றார். சங்கீதம் அவருடைய பொழுதுபோக்காகும். அவர் ஒரு தகுந்த அடைவுக் (Directory) கட்டமைப்பைப் பயன் படுத்தி தனது கணினியில் மேற்குறித்த துறைகள் பற்றிய பல கோப்புகளைத் தேக்கி வைக்க விரும்புகின்றார், ‘பின்வரும் அடைவுக் கட்டமைப்புகளில் எது மிகவும் உகந்தது ?
18. பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை ?
A – பணிசெயல் முறைமையின்றி ஒரு கணினியை வசதியாகப் பயன்படுத்தலாம். –
B – வட்டு ஒருங்கமைத்தல் (defragmentation) பயன்பாடு வினையாற்றலை உத்தமமாக்குவதற்கு ஒரு வட்டிலுள்ள ஒட்டியிராத கோப்புகளை ஒட்டியுள்ள கோப்புகளாக மாற்றுகின்றது.
C – கணினியில் உள்ள அடிப்படை அமைவுகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பணிசெயல் முறைமை இடைமுகத்தைப் பயன்படுத்தலாம்.
(1) A, B ஆகியன் மாத்திரம்
(2) A, C ஆகியன மாத்திரம்
(3) B, C ஆகியன மாத்திரம்
(4) A, B, C ஆகிய எல்லாம்.
19. பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A – ஓர் ஆவணத்தின் எழுத்துக்கூட்டல்களையும் இலக்கணத்தையும் செவ்வை பார்த்தல்
B – வன்பொருள்களில் உள்ள தருக்க வாயில்களைக் கட்டுப்படுத்தலும் தொழிற்படுத்தலும்
C – ஒரு கணினி முறைமையிலுள்ள வளங்களையும் உள்ளிட்டு, வெளியீட்டுச் சாதனங்களையும் (மகாமிக்கல் மேற்குறித்தவற்றில் எது எவை ஒரு பணிசெயல் முறைமையின் தொழிலாகும்?
(1) A மாத்திரம்
(2) B மாத்திரம்
(3) C மாத்திரம்
(4) A, B, C ஆகிய எல்லாம்
36. வெற்றிடங்கள் உள்ள பின்வரும் கூற்றைக் கருதுக.
………………….. மென்பொருளில் உள்ள ஆதாரமூலக் குறிமுறை அதனை நிர்மாணித்த நபர், குழு அல்லது அமையம் தவிர வேறொருவரினாலும் மாற்றப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட முடியாதபோதிலும் ………………… மென்பொருளைப் பயன்படுத்துவதற்கு, மாற்றுவதற்கு மற்றும் விநியோகிப்பதற்குச் சுதந்திரமான உத்தரவுச்சீட்டு உள்ளது. மேற்குறித்த வெற்றிடங்களை முறையே நிரப்புவதற்குப் பின்வரும் சொற்றொடர்களில் எவை பொருத்தமானவை ?
(1) மூடிய ஆதாரமூல (Closed source), வர்த்தக (commercial)
(2) வர்த்தக, மூடிய ஆதாரமூல
(3) சுதந்திரமான திறந்த ஆதாரமூல (Free and open source), தனியுரிமை (proprietary)
(4) தனியுரிமை, சுதந்திரமான திறந்த ஆதாரமூல
40. பின்வருவனவற்றைக் கருதுக.
A – கணினியின் வன்பொருள் விவரக்கூற்று
B – விற்பனையாளரின் மதிப்பு
C – உத்தரவாதக் காலமும் விற்பனைக்குப் பிந்திய சேவையின் தரமும்
ஒரு கணினியைக் கொள்வனவு செய்தலில் மேற்குறித்த அம்சங்களில் எவை முக்கியமானவை ?
(1) A, B ஆகியன மாத்திரம்
(2) A, C ஆகியன மாத்திரம்
(3) B, C ஆகியன மாத்திரம்
(4) A, B, C ஆகிய எல்லாம்
2016
8. ஒட்டியிராத (non-contiguous) கோப்புகளை ஒட்டியுள்ள (contiguous) கோப்புகளாக மாற்றுவதன் மூலம் ஒரு வன்வட்டின் ஆற்றுகையை உச்ச அளவாக்குவதற்குப் பயன்படுத்தப்படத்தக்க பணிசெயல் முறைமையில் உள்ள பயன்பாட்டுக் கருவி (utility tool) யாது ?
(1) வரியுரு விவரப்படம் (Character Map)
(2) வளத் தெரிவிப்பி (Resource Monitor)
(3) வட்டு துப்புரவாக்கல் (Disk Cleanup) (4) வட்டு ஒருங்கமைத்தல் (Disk Defragmenter)
17.மூன்று அவதானிப்புகளும் இயல்தகு காரணங்களும் பின்வரும் அட்டவணையில் முறையே நிரல் 1 இலும் 2 இலும் சரியான ஒழுங்கிலன்றித் தரப்பட்டுள்ளன.
அவதானிப்பு | காரணம் |
ஓர் உறையில் உள்ள கோப்புகள் தன்னியக்க முறையாகப் படியெடுக்கப்படுகின்றன (replicated). | ஒரு காப்பு (backup) எடுக்கப்படவில்லை. |
தற்செயலாக நீக்கப்பட்ட கோப்பினை மீளப்பெற முடியவில்லை (recover). | நச்சுநிரல் தொற்றாக இருக்கலாம் |
3 ஒரு கோப்பினைச் சேமிப்பதற்கு எத்தனிக்கும்போது ‘வட்டில் இடமில்லை” என்னும் செய்தி தோன்றுகின்றது. | வன் வட்டில் கோப்புகள் நிறைந்துள்ளன. |
பின்வருவனவற்றில் எது நிரல் 1இல் உள்ள அவதானிப்புகளுக்குப் பொருத்தமாக நிரல் 2 இல் உள்ள காரணங்களைச் சரியான ஒழுங்கில் காட்டுகின்றது?
20. பிள்வரும் கூற்றுகளைக் கருதுக:
A MS-DOS என்பது கட்டளை நிரை இடைமுகத்தைப் (CLI) பயன்டுத்தும்
பணிசெயல் முறைமையாகும்.
B இசுறு லினக்ஸ், ஹன்தான் லின்க்ஸ் என்பன இலங்கையர்களால்
தேசிய மயமாக்கப்பட்ட இரு திறந்த பணிசெயல் முறைகளாகும்.
C – மைக்கிரோசொப்ற் வின்டோஸ் என்பது வரைவியல் பயனர் இடைமுகம்
(GUI) இல்லாத பணிசெயல் முறைமையாகும்.
மேற்குறித்த கூற்றுகளில் சரியானவை யாவை ?
(1) A, B ஆகியன மாத்திரம்
(3) B.C ஆகியன மாத்திரம்
(2) A, C ஆகியன மாத்திரம்
(4) A, B, C ஆகிய எல்லாம்
28.ஒரு கணினியின் எக்கூறு (component) தரவு தொடர்பான செய்பணிகளைச் செய்கின்றது?
(1) மைய முறைவழி அலகு
(3) உள்ளீட்டு அலகு
(2) முதன்மை நினைவக அலகு
(4) துணைத் தேக்கக அலகு
32. 1960 களிலிருந்து கணினி வன்பொருள்களின் கிரயம் (cost) கணிசமான அளவில் குறைந்திருக்கும் அதே வேளை மென்பொருள்களின் கிரயம் ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளமையை அபர்ணா அறிந்துள்ளார். அவர் இதற்குக் காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.
A – தொழினுட்ப முன்னேற்றங்கள் வன்பொருளின் கிரயத்தைக் குறைக்கின்றன.
B. மென்பொருளின் சிக்கற் தன்மையை அதிகரிக்கச் செய்தல் மென்பொருள் கிரயத்தை அதிகரிக்கச் செய்கின்றது.
மேற்குறித்த காரணங்கள் தொடர்பாகப் பின்வருவனவற்றுள் எதனை ஏற்றுக்கொள்ளலாம் ?
(1) A, B ஆகிய இரண்டும் வலிதானவை.
(2) A வலிதாக இருக்கும் அதே வேளை B வலிதானதன்று.
(3) A வலிதானதன்றாக இருக்கும் அதே வேளை B வலிதாகும்.
(4) A,B ஆகிய இரண்டும் வலிதானவையல்ல
40. ஒரு பணிசெயல் முறைமையில் பயனர் கணக்குகள் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
A-ஒவ்வொருவரும் ஒரு பயனர் பெயருடனும் கடவுச்சொல்லுடனும் தனது பயனர் கணக்கிற்குப் பிரவேசிக்கலாம்.
B- பயனர் கணக்கு என்பது பிரவேசிக்கத்தக்க கோப்புகளையும் உறைகளையும் பற்றிக் குறிப்பிடுவதும் கணினியில் விருப்பத்திற்கேற்ப மாற்றப்படத்தக்க அமைப்புகள் (Sctting) பற்றிக் குறிப்பிடுவதுமான தகவல் தொகுப்பாகும்.
C- பலருடன் ஒரு கணினியைப் பகிர்ந்து கொள்வதற்குப் பயனர் கணக்கு உம்மை அனுமதிப்பதில்லை.
(I) A,B ஆகியன மாத்திரம்
(2) A,C ஆகியன மாத்திரம்
(3) B,C ஆகியன மாத்திரம்
(4) A, B, C ஆகிய எல்லாம்
2017
1. ஒரு கணினியின் செய்பணிகள் (operations) பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A -கணினி நிற்பாட்டப்படும்போது (turned off) முதன்மை நினைவகம் (main memory) அதன் தரவுகளை இழக்கின்றது.
B கணினி நிற்பாட்டப்படும்போது வன் வட்டு அதில் ஏற்கெனவே தேக்கி வைக்கப்பட்ட அதன் தரவுகளை வைத்திருக்கின்றது.
C முறைவழியாக்குவதற்குத் துணைத் தேக்ககத்திலிருந்து முதன்மை நினைவகத்திற்கு அறிவுறுத்தல்கள் (Instructions) கொண்டு வரப்படுகின்றன.
மேற்குறித்த கூற்றுகளில் எது/எவை உண்மையானது/உண்மையானவை?
(1) A மாத்திரம்
(2) A, C ஆகியன மாத்திரம்
(3) B,C ஆகியன மாத்திரம்
(4) A, B, C ஆகிய எல்லாம்
31. பின்வருவனவற்றில் மடிக் கணினியின் தொழினுட்ப விவரக்கூற்றுகள் மாத்திரம் இடம்பெறும் பட்டியல் யாது?
(1) USB துறைகளின் (ports) எண்ணிக்கை, விற்பனைக்குப் பிந்திய சேவை, RAM இன் கொள்திறன், காட்சியின் பருமன்
(2) முறைவழியாக்கியின் கதி (processor speed), வன் வட்டுக் கொள்திறன், விலை, RAM இன் கொள்திறன்
(3) முறைவழியாக்கியின் கதி, காட்சியின் பருமன், USB துறைகளின் எண்ணிக்கை, வன் வட்டுக் கொள்திறன்
(4) உத்தரவாதக் காலம், விற்பனையாளரின் மதிப்பு, USB துறைகளின் எண்ணிக்கை, மடிக் கணினியின் நிறை
35. ஒரு பணிசெயல் முறைமை பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A கணினியைத் தொழிற்படுத்தும்போது அது முதலில் தொடங்கும் செய்நிரல் (program) அதுவாகும்.
B- அது கணினியின் வளங்களை முகாமிக்கின்றது.
C- அதன் முக்கிய தொழில்களில் ஒன்று குறும்பர்கள் (hackers) வலையமைப்பினூடாக அனுமதியின்றிப் பிரவேசிப்பதிலிருந்து கணினியைப் பாதுகாப்பதாகும்.
மேற்குறித்த கூற்றுகளில் உண்மையானவை யாவை ?
(1) A, B ஆகியன மாத்திரம்
(3) B, C ஆகியன மாத்திரம்
(2) A, C ஆகியன மாத்திரம்
(4) A, B, C ஆகிய எல்லாம்
36. பின்வரும் அட்டவணையின் நிரல் 1 இல் மென்பொருளின் சில வகுதிகளும் நிரல் 2 இல் சில உதாரணங்களும் தரப்பட்டுள்ளன. எனினும், இவ்விரு நிரல்களிலும் உள்ள உருப்படிகள் பொருந்தாமல் இருக்கலாம்.
வகுதிகள் | உதாரணங்கள் |
1 பணிசெயல் முறைமைகள் | A: Java, BASIC |
2 செய்நிரலாக்க மொழிகள் | B: LibreOffice Calc, Microsoft Excel |
3 சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருள் | C: LibreOffice Impress, Microsoft Powerpoint |
4 விரிதாள் மென்பொருள் | D: LibreOffice Writer, Microsoft Word |
5 முன்வைப்பு மென்பொருள் | E: Microsoft Windows, Ubuntu |
இரு நிரல்களுக்குமிடையே சரியான பொருத்தமாக்கல் யாது ?
(1) (1)> E, (2) > A, (3) >C, (4) > D, (5) > B
(2) (1) > B, (2) > D, (3) >C, (4) > E, (5) > A
(3) (1) > D, (2) > A, (3) >B, (4) > C, (5) > E
(4) (1) > E, (2) > A, (3) >D, (4) > B, (5) > C
2018 Online Prototype
1, பின்வருவனவற்றில் பயனுள்ள தகவலின் பண்பு அல்லாதது எது?
1. துல்லியம் accuracy
2. தாமதம் delay
3. பொருத்தப்பாடு relevancy
4. நம்பகத்தன்மை reliability
2. பின்வருவனவற்றில் இயக்க முறைமையொன்றின் தொழில் களில் அடங்குபவை ?
A – பயனர் மற்றும் வன்பொருள்களிடையே தொடர்பாடல்
B – வரைபடங்களை உருவாக்குதல்
C – நினைவக முகாமை
1. A மற்றும் B
2. A மற்றும் C
3. B மற்றும் C
4. A, B மற்றும் C
3. பின்வருவனவற்றில் உள்ளீட்டுச் சாதனமாகவும் வெளியீட்டுச் சாதனமாகவும் பயன் படுத்தக் கூடியது எது?
1. காந்த மை எழுத்துரு வாசிப்பான் ரீடர் Magnetic Ink Character Reader
2. நினைவக அட்டை Memory card
3. தொடுகை மேடு Touch pad
4. தொடுதிரை Touchscreen
4. பின்வருவனவற்றில் முறைமை மென்பொருளை மட்டும் கொண்ட தொகுதி ?
1. தரவுத்தள மேலாண்மை அமைப்பு, இயக்க முறைமை, விரிதாள் மென்பொருள்
2. இயக்க முறைமை, பயன்பாட்டு மென்பொருள், சாதன இயக்கி
3. நிகழ்த்துகை மென்பொருள், சாதன இயக்கி, கிராஃபிக் மென்பொருட்கள்
4. சொல் முறை வழியாக்கி , இணைய உலாவி, விரிதாள் மென்பொருள்
5. பின்வருவனவற்றில் கணினியில் உள்ள ஒரு கோப்பு வகையை அடையாளம் காண உதவுவது ?
1. கோப்பு நீட்டிப்பு File extension
2. கோப்பு பெயர் File name
3. அடைவு (folder)
4. துணை அடைவு
6. கணினியில் உள்ளீடு செய்யப்படும் தரவுகளை செயற்பாட்டிற்குட்படுத்தும் அலகு எது?
1. Central Processing Unit
2. Main Memory Unit
3. Input Unit
4. Secondary Storage Unit
7. பின்வரும் கூற்றுக்களைக் கருதுக
A – வட்டு தூய்மையாக்கல் மூலம் ஒரு கணினியின் செயல்திறனை அதிகரிக்க முடியும்., இது இயங்குதளத்தில் கிடைக்கக்கூடிய ஒரு பயன்பாட்டு மென்பொருள்
B – கோப்புக்களை சேமிக்கப்படும்போது பரவலான சேமிப்பக இடங்களை ஆக்கிரமித்துள்ள ஒரு வட்டில் இடங்களை மீட்டெடுத்தல் defragmentation என அறியப்படுகிறது. Rearranging file stored on a disk to occupy contiguous storage locations is known as disk defragmentation.
மேற்கூறிய கூற்றுக்களைக் தொடர்பாக பின்வருவனவற்றில் சரியானது?
1. A மற்றும் B சரியானவை
2. A மற்றும் B தவறானவை
3. A மாத்திரம் சரியானது
4. B மாத்திரம் சரியானது
8. கணினியில் பொருத்தியுள்ள பிற சாதனங்களுடன் பணிபுரிய இயக்க முறைமையால் பயன்படுத்தப்படும் மென்பொருள் எது?
1. பயன்பாட்டு மென்பொருள் Application software
2. வைரஸ் தடுப்பு மென்பொருள் Antivirus software
3. சாதன இயக்கிகள் Device drivers
4. தீய நோக்கம் கொண்ட மென்பொருள் Malware
9. பின்வருவனவற்றில் கணினியின் அடிப்படைக் கூறு அல்லாதது ?
1. உள்ளீட்டு சாதனம்
2. லைவ்வேர்
3. வருவிளைவுச் சாதனம்
4. மைய முறைவழி அலகு Cpu
10. பின்வரும் கூற்றுக்களைக் கருதுக
A – ஒரு வரைகலை பயனர் இடைமுகம் ஒரு கட்டளை வரி இடைமுகத்தை விட பயனர் விரு[ப்புக்குரியவை
B – கட்டளைக் கோட்டு இடைமுகத்தில் (Command Line Interface) உள்ள கட்டளைகளை நினைவில் வைத்திருக்க வேண்டிய தேவையை வரைகலை பயனர் இடைமுகப்பு (Graphical User Interface) இல்லாமல் செய்கிறது. .
மேற்கூறிய கூற்றுக்கள் தொடர்பாக பின்வருவனவற்றுள் சரியானது எது?
1. கூற்றுக்கள் A மற்றும் B ஆகியவை சரியானவை மேலும் கூற்று B கூற்று A யை விவரிக்கிறது.
2. கூற்றுக்கள் A மற்றும் B ஆகியவை சரியானவை ஆனால் கூற்று A கூற்று பி என்பவற்றிற்கிடையே தொடர்புகள் இ.ல்லை.
3. கூற்று A சரியானது ஆனால் கூற்று B தவறானது.
4. கூற்று A தவறானது ஆனால் கூற்று B சரியானது
11. ஒரு மாணவன் GIMP மென்பொருளை, கணினியிலிருந்து முழுமையாக நீக்க விரும்புகிறார். இந்த நோக்கத்திற்காக அவர் பின்வரும் இயக்க முறைமை அம்சங்களில் எதைப் பயன்படுத்த வேண்டும்?
1. Add/remove program
2. Disk defragmenter
3. Snipping tool
4. Windows Explorer
3. பின்வருவனவற்றுள் மைய முறைவழி அலகில் காணப்படுபவை எவை??
1. கட்டுப்பாட்டு அலகு, எண்கணித தர்க்க அலகு
2. கட்டுப்பாட்டு அலகு, எண்கணித தர்க்க அலகு, உள்ளீட்டு அலகு
கட்டுப்பாட்டு அலகு, நினைவக அலகு, வெளியீட்டு அலகு
4. உள்ளீட்டு அலகு, கட்டுப்பாட்டு அலகு, வெளியீட்டு அலகு
27. ஒரு டிஜிட்டல் புகைப்படத்தைத் திருத்திக் கொள்ள பின்வரும் மென்பொருளில் மிகவும் பொருத்தமானது எது?
1. Libre office Impress
2. Adobe Photoshop
3. Adobe Illustrator
4. Libre office writer
28. ஒரு டிஜிட்டல் படத்தின் தரமானது ……………………………………………. இல் தங்கியுள்ளது.
மேற்கூறிய கூற்றுக்களில் வெற்றிடத்தை நிரப்ப பின்வருவனவற்றிலிருந்து மிகவும் பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்கவும்.
1. அதன் பிரிதிறன் ( resolution)
2. கணினியின் வன்தட்டுக் கொள்வனவு
3. கணினி நினைவகம் திறன்
4. செயலியின் கடிகார வேகம்
29. தானியங்கிக் காசளிப்பு இயந்திரத்தில் (ATM) பணத்தைத் திரும்பப்பெறும் பின்வரும் சந்தர்ப்பத்தைக் கருதுக
A – ஏடிஎம் (ATM) அட்டையை உள்ளிட்டு பின் (PIN) இலக்கத்தை தட்டச்சு செய்க
B – பணம், ரசீது என்பவற்றைப் பெறல்
C – போதுமான நிதி வைப்பிலுள்ளதா என்பதை சரிபார்த்தல்
பின்வருவனவற்றில் எது சரியாக உள்ளீடு, செயல்முறை மற்றும் வெளியீட்டை பிரதிபலிக்கிறது?
1. A, B மற்றும் C
2. A, C மற்றும் B
3. B, A மற்றும் C
4. C, A மற்றும் B
31. பரவல் வரைபு (raster graphics ராஸ்டெர் கிராபிக்ஸ் ) குறித்த பின்வரும் கூற்றுக்களில் எது உண்மை?
A – அவை பிக்சல்கள் (pixels) கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும்.
B – அவை ஆரம்ப முடிவுப் புள்ளிகளான பாதைகள் (paths) கொண்டு உருவாக்கப்பட்டவை
C – GIF மற்றும் JPEG என்பன பரவல் வரைபு கோப்பு வகைகளுக்கான உதாரணங்களாகும். .
1. A மற்றும் B
2. A மற்றும் C
3. B மற்றும் C
4. A, B C ஆகிய அனைத்தும்
32. கற்றல் முகாமைத்துவ முறைமை (Learning Management Systems (LMS) தொடர்பான பின்வரும் அறிக்கைகளை கவனியுங்கள்.
A – LMS இனை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் பயன்படுத்த முடியும்.
B – LMS கள் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறைகளை மேம்படுத்த உதவுகின்றன.
C – LMS இனை எங்கிருந்தும் அணுகலாம்.
. மேற்கூறிய அறிக்கையில் எது சரியானது?
1. A மற்றும் B
2. A மற்றும் C
3. B மற்றும் C
4. A, B C ஆகிய அனைத்தும்
38. Gif, .jpeg, .bmp மற்றும் .png நீட்டிப்புகள் கொண்டவை எவ்வகை கோப்புக்களாகும்?
1. ஆடியோ கோப்புகள் Audio files
2. ஒளிப்படக் கோப்புகள் Image files
3. உரை கோப்புகள் Text files
4. வீடியோ கோப்புகள் Video files
43. ஒட்டியிராத (non-contiguous) கோப்புகளை ஒட்டியுள்ள (contiguous) கோப்புகளாக மாற்றுவதன் மூலம் ஒரு வன்வட்டின் ஆற்றுகையை உச்ச அளவாக்குவதற்குப் பயன்படுத்தப்படத்தக்க பணிசெயல் முறைமையில் உள்ள பயன்பாட்டுக் கருவி (utility tool) யாது?
1. வரியுரு விவரப்படம் (Character Map)
2. வளத் தெரிவிப்பி (Resource Monitor)
3. வட்டு துப்புரவாக்கல் (Disk Cleanup)
4. வட்டு ஒருங்கமைத்தல் ( Disk Defragmenter)
49. பின்வருவனவற்றில் மடிக் கணினியின் தொழினுட்ப விவரக்கூற்றுகள் மாத்திரம் இடம்பெறும் பட்டியல் யாது?
1. USB துறைகளின் (ports) எண்ணிக்கை, விற்பனைக்குப் பிந்திய சேவை, RAM இன் கொள்திறன், காட்சியின் பருமன்
2. முறையாக்கியின் கதி (processor speed) வன் வட்டுக் கொள்திறன், விலை, RAM இன் கொள்திறன்
3. முறை வழியாக்கியின் கதி, காட்சியின் பருமன், USB துறைகளின் எண்ணிக்கை, வன் வட்டுக் கொள்திறன்
4. உத்தரவாதக் காலம், விற்பனையாளரின் மதிப்பு, USB துறைகளின் எண்ணிக்கை, மடிக்கணினியின் நிறை
50. பின்வரும் பிரயோகப் பொதிகளைக் கருதுக.
A. தரவுத்தளப் பொதிகள்
B. முன்வைப்புப் பொதிகள்
C. விரிதாள் பொதிகள்
மேற் குறித்தவற்றில் எவை தரவுகளைத் தேக்கிவைத்து முறைவழியாக்கப் (process) பயன்படுத்தப்படலாம்?
1. A, B ஆகியன மாத்திரம்
2. A, C ஆகியன மாத்திரம்
3. B, C ஆகியன மாத்திரம்
4. A, B, C ஆகியன எல்லாம்