File Extension என்றால் என்ன?


கணினியிலிருக்கும் ஒவ்வொரு பைலும் ஒன்று முதல் ஐந்து வரையிலான எழுத்துக்களைக் கொண்ட ஒரு சொல்லை பைல் பெயரின் இறுதியில் இணைத்துக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.. இதனையே பைல் எக்ஸ்டென்ஸன் எனப்படுகிறது. உதாரணமாக .doc, .ppt, .jpg, .txt, .mp3, .avi என ஏராளமான எக்ஸ்டென்சன் கொண்ட பைல் வகைகள் உள்ளன. இந்த பைல் எக்ஸ்டென்சன் மூலம் இது என்ன வகையான பைல் என்பதைக் கண்டறியலாம்.. பைல் பெயரும், எக்ஸ்டென்சனும் ஒரு புள்ளி (dot) கொண்டு பிரிக்கப்படும். இந்த பைல் எக்ஸ்டென்ஸன் இயங்குதளமான ஒபரேடிங் சிஸ்டம் மற்றும் பயனருக்கு அது எந்த வகையான பைல், அதனை எந்த மென்பொருள் கொண்டு திறக்க வேண்டும் என்பதை உணர்த்தி விடுகிறது.தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மென்பொருள்கள் பாவனையி ளுள்ளன. இவை ஒவ்வொன்றும் தனக்கேயுரிய பைல் எக்ஸ்டென்சனைக் கொண்டிருக்கும். இவை அனைத்தையும் அறிந்திருப்பது என்பது சாத்தியமான விடயமல்ல. எனினும் பொதுவாகப் பாவனையிலுள்ள மென்பொருள்களின் பைல் எக்ஸ்டென்சனை நினைவில் வைத்திருக்க முடியும். அடிக்கடி பயன்படுத்தும் மென்பொருள்களின் பைல் எக்ஸ்டென்சனை அறிந்து வைத்திருப்பது அந்த பைல்களை இனங்காண வசதியாயிருக்கும். .doc, .jpg, .txt என்பன பொதுவாகப் பாவனையிலுள்ளவை. ஒரு பைல் எக்ஸ்டென்சனை உங்களால் அறிது கொள்ள முடியாத போது இணைய தேடலில் மூலம் அதே பைல் எக்ஸ்டென்சனுக்குரிய மென்பொருளை அறிந்து கொள்ளலாம்.

விண்டோஸ் எக்ஸ்பீயில் இயல்பு நிலையில் பைல் எக்ஸ்டென்சன் எப்போதும் மறைக்கப்பட்டேயிருக்கும். ஒரு பைல் பெயருடன் அதன் எக்ஸ்டெண்டஸனையும் காண்பிக்குமாறு செய்வது நல்லது. கணினியைத் தாக்கக்ககூடிய வைரஸ் போன்றவை .exe பைலுடன் சேர்ந்து வர வாய்ப்புள்ளது. இந்த வகை பைல்கள் இரட்டை எக்ஸ்டென்சன் கொண்டிருக்கும். பைல் எக்ஸ்டென்சன் மறைந்திருக்கும்போது எவ்வகையான பைலைக் கையாளுகிறோம் என்பதை நாம் அறிய மாட்டோம். இவ்வாறான பைல்களைத் திறக்கும்போது வைரஸ் போன்ற நச்சு நிரல்கள் கணினியைத் தாக்கலாம்.
அதேவேளை பைல் எக்ஸ்டென்ஸன் மறைக்கப் படாதபோதும் சில பிரச்சினைகள் வரலாம். அதாவது ஒரு பைல் பெயரை மாற்றும் போன்று அதற்குரிய எக்ஸ்டென்சனையும் வழங்க வேண்டியிருக்கும். அவ்வாறு வழங்காவிட்டால் அந்த பைலை மறுபடியும் உபயோகிக்க முடியாமல் போக வாய்ப்புள்ளது. எனினும் பைல் எக்ஸ்டென்சன் மறைக்கப்பட்ட நிலையில் பைல் பெயரை மாற்றும்போது அதன் எக்ஸ்டென்சனை வழங்க வேண்டியதில்லை.

சில ப்ரோக்ரம், மாற்றிய பைல் எக்ஸ்டென்சனை அறிந்து அந்த பைலைத் திறக்கும். எனினும் அனைத்து மென்பொருள்களும் அவ்வாறு திறக்கும் என எதிர் பார்க்க முடியாது. ஆகவே ஒரு பைல் எக்ஸ்டென்சனை மாற்றும் போது அதிக கவனம் தேவை. அத்தோடு நீங்கள் அடிகடி பயன்படுத்தும் மென்பொருள்களுக்குரிய பைல் எக்சஸ்டென்சன் பற்றியும் அறிந்து வைத்திருத்தல் நல்லது.

இமேஜ் பைல் வகைகளான .jpg, .gif, .bmp போன்றவற்றை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த பைல் போமட்டுகளை வேறு எந்த மென் பொருள் துணையின்றி ஒரு போமட்டிலிருfது இன்னொரு போமட்டிற்கு விண்டோஸிலேயே இல்குவாக மாற்றிக் கொள்ளலாம். அதாவாது ஒரு .jpg பைலை .gif ஆகவோ .bmp ஆகவோ மாற்ற வேண்டுமானால் அதன் பைல் எக்ட்ஸ்டென்சனை மாற்றி விட்டாலே போதும்.

விண்டோஸ் எக்ஸ்பீயில் பைல் எக்ஸ்டென்சனைத் தோன்றச் செய்ய பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள். முதலில் Start – All Programs – Accessories ஊடாகச் சென்று windows Explorer தெரிவு செய்யுங்கள். (அல்லது ஏதேனுமொரு போல்டரைத் திறந்து கொள்ளுங்கள்) அந்த விண்டோவில் Tools மெனுவில் Folder Options தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் View டேபின் கீழ் Hide Extension for known file types என்பது தெரிவு நிலையில் இருந்தால் அதனை நீக்கி விட்டு ஓகே க்ளிக் செய்யுங்கள். இப்போது ஒவ்வொரு பைலையும் அதன் எக்ஸ்டென்சனுடன் பார்க்கலாம்.

– அனூப் –

About admin

Check Also

What is Discord and how to use it?

டிஸ்கார்ட்-Discord என்பது உரை அரட்டை-text chat, குரல் அரட்டை voice chat, வீடியோ அரட்டைvideo chat, மற்றும் கோப்பு பகிர்வு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *